ShareChat
click to see wallet page
search
நெல்லையைச் சேர்ந்த பிரியா என்பவர், கோவையில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவரைப் பார்க்க வந்த அவரது கணவர் பாலமுருகன், விடுதி அருகே வைத்துப் பிரியாவைக் கொலை செய்துள்ளார். . கொலையை அரங்கேற்றிய பாலமுருகன், பின்னர் தனது வாட்ஸ்அப் பக்கத்தில் "துரோகத்தின் சம்பளம் மரணம்" என்று ஒரு ஸ்டேட்டஸை வைத்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலமுருகனைக் கைது செய்தனர். தனிப்பட்ட தகராறு அல்லது குடும்பப் பிரச்சினையின் காரணமாக இந்தக் கொலை நடந்ததா, அல்லது துரோகம் என அவர் குறிப்பிட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - மனைவியைக் கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: துரோகத்தின் சம்பளம் மரணம்!" கோவை காந்திபுரத்தில் நடந்த கொடூரம்! மனைவியைக் கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: துரோகத்தின் சம்பளம் மரணம்!" கோவை காந்திபுரத்தில் நடந்த கொடூரம்! - ShareChat