ShareChat
click to see wallet page
search
🎬From The Desk of கட்டிங்க் கண்ணையா!🔥 தேனிசைத் தென்றல் தேவா பர்த் டே டுடே!💐 அறிமுக நடிகரிலிருந்து சூப்பர் ஸ்டார் வரை பலருக்கு மியூசிக்கல் ஹிட்டுகளை வாரி வழங்கிய வள்ளல். காதல் தோல்விக்குப் பிழியப்பிழிய தத்துவக்குத்துகளோ, அழுகாச்சி காவியமோ படைக்காமல், ‘கவலைப்படாதே சகோதரா' எனத் தோள்மீது கைபோட்டு நம்மையும் ஆட வைத்தவர். உள்ளத்தின் காயங்களை ஆற்றுப்படுத்தி நம்மைத் தேற்றியவர். ஓர் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் நாமறிந்தவர் தேவா. வேலுார் டிஸ்ட்ரிக் , மாங்காடு கிராமத்தில் சொக்கலிங்கம் - கிருஷ்ணவேணி தம்பதியின் மகனா 1950ல், இதே நாளில் பிறந்தவர் தேவநாதன் எனும் தேவா. இவர் சென்னையில் குடியேறி, தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றார்.லண்டனில் உள்ள, 'டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்' கல்லுாரியில் மேற்கத்திய இசை குறித்த படிப்பை முடிச்சார். தன் ஆரம்பகால வாழ்க்கைப் பத்தி நம்மிடம் சொன்ன சேதியிது: ``ஆர்மோனியம் மட்டும்தான் வாசிக்கத் தெரியும். ஆனா, பெரிய இசையமைப்பாளரா வரணும்னு ஆசைப்பட்டேன். இதை ஒரு பேராசையா அப்ப நான் நினைக்கலே... பதினாலு வருடப் போராட்டம்... 1976-ல், டி.வி.யில் ஃப்ளோர் அசிஸ்டென்டாக நானூற்று அறுபது ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தப்பவும் இந்த ஆசை போகலே... முதல் தேதி செக் கொடுப்பாங்க. டி.வி. ஸ்டேஷனிலிருந்து சைக்கிளில் பேங்க்ப் போய், புத்தம் புது நோட்டுகளாக வாங்கி, அதில் அறுபது ரூபாய் மட்டும் எனக்கு வைத்துக்கொண்டு, நானூறு ரூபாயை மனைவிகிட்டே கொடுத்துபுடுவேன்! 1978-ல் ஒருநாள் டி.வி. ஸ்டேஷனுக்கு என் நண்பன் கவி வந்தான். கோடம்பாக்கம் கவரைத் தெருவில், ஒரு புரொடியூஸரைச் சந்திக்க அழைச்சான். டி.வி. ஸ்டேஷனிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வெயிலில், சைக்கிளில் கவியை ஏற்றிக்கொண்டு நான் புறப்பட்டேன். `அத்தான்' என்ற பெயரில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகம் செய்து வைச்சான் கவி. `உங்களுக்கு இசையமைப்பாளராக சான்ஸ் தர்றேன். ஆனா, ஒரு கண்டிஷன்... கொஞ்ச நேரத்தில் ஒரு பாடகர் மோட்டார் பைக்கில் வருவாரு. அவர் எப்படிப் பாடினாலும் பிரமாதமா இருக்குனு சொல்லணும்' -முன்னார் தயாரிப்பாளர். `சரி, நமக்குத்தான் இசையமைப்பாளர் சான்ஸ் கிடைக்குதே... அதுதானே முக்கியம்'னு இருந்தேன். மோட்டார் பைக் நபர் வந்தார். பாட்டுப் பாடினார். சந்திரபாபு பாடிய `நான் ஒரு முட்டாளுங்க' பாட்டை முடிஞ்ச அளவுக்குக் கொலை பண்ணாரு. `எதுக்குடா இப்படி ஒரு ஆளுக்கு வக்காலத்து வாங்கறாங்க'னு பார்த்தேன்... அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த ஆளுக்கும் அதான் முதல் பாட்டு சான்ஸ். அவர் செலவில்தான் முதல் பாட்டையே `ரிக்கார்டிங்' செய்யப் போறாங்கனு. பாட்டை எழுதினது தயாரிப்பாளர்!(கட்டிங் கண்ணையா) ரிக்கார்டிங் ஆரம்பமாச்சு. `நான் ஏன் பிறந்தேன்..? ஆணிலும் நான் பாதி... பெண்ணிலும் நான் பாதி... புரியாத புதிர்தானே என் பிறவி'னு பாட்டில் எல்லா வரியுமே பயங்கரமான அபசகுனம்... `என்னடா, நம்ம முதல் பாட்டே இப்படி அமைஞ்சு போச்சே'னு ஒரு நெருடல் இருந்தது. இருந்தாலும், `எப்படியோ... சினிமாவுக்குள்ளே புகுந்துட்டோம்டா சாமி'னு தாங்க முடியாத சந்தோஷம்! அதுவரை அட்வான்ஸ் எதுவும் எனக்குக் கொடுக்கலை. தீபாவளிக்கு ஒருநாள் முன் தருவதாகச் சொல்லி, வரச் சொல்லியிருந்தார் தயாரிப்பாளர். சைக்கிளை எடுத்துக்கிட்டுக் கவரைத் தெருவை நோக்கிப் புறப்பட்டேன். கிடைக்கிற அட்வான்ஸில் பாதியை வடபழனி முருகன் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, மீதமுள்ள பணத்தில் புகாரி ஓட்டலில் போய் ஆனந்தமாகச் சாப்பிடலாம்னு திட்டம்! புரொடியூஸர் தடபுடலாக `வாங்க, வாங்க'ன்னார்! பர்ஸைத் திறந்து, இரண்டு எட்டணாவை எடுத்து எனக்கு ஒரு எட்டணா, என் ஃப்ரெண்ட் கவிக்கு ஒரு எட்டணாவைக் கொடுத்து, `இப்ப திருப்திதானே...?" அப்படின்னாரு. நாங்களும் சிரிச்சுக்கிட்டே அதை வாங்கிக்கிட்டோம். வேண்டிக்கிட்ட மாதிரியே, வடபழனி முருகன் கோயிலுக்குப் போய் எட்டணாவை உண்டியலில் போட்டேன். கவிக்குக் கொடுத்த எட்டணாவுக்குப் பக்கத்துக்குக் கடையில் டீ குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்' அப்படீன்னார் அப்புறமும் சில பல போராட்டங்களுக்கு பொறகு ராமராஜன் நடித்த, மனசுக்கேத்த மகராசா திரைப்படத்திற்கு இசையமைத்தார். அவர் தான், 'தேவா' என இவரது பெயரை மாற்றினார். இவர் இசையமைத்த, வைகாசி பொறந்தாச்சு படத்தின் எட்டு பாடல்களும் ஹிட் ஆனதால் பிரபலமானார். அண்ணாமலை, ஊர் மரியாதை, இளவரசன், சாமுண்டி, சூரியன்,செந்துாரப்பாண்டி, என் ஆசை மச்சான், பாட்ஷா, அவ்வை சண்முகி,காதல் கோட்டை, பாரதி கண்ணம்மா, வாலி, குஷி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் முன்னணி இசையமைப்பாளர் ஆனார். தேவா என்றவுடன் கானா பாடல்கள் தான் உடனே பலருக்கு தோன்றும். கானா பாடல்கள் மூலம் பல கால்களை ஆடவைத்த பெருமை தேவாவிற்கு உண்டு. அதேவேளையில், அழகான பல மெலடி பாடல்களும் நம்மை ஈர்த்து இருக்கிறது. இன்றைக்கும் ஆக்டிவாக இருக்கும் 'தேனிசை தென்றல்' தேவாவின் 75வது பிறந்த தினமான இன்று ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் வணக்கம் கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat