ShareChat
click to see wallet page
search
#magill vithu magill. மகிழ் எல்லாம் எனதாக வேண்டும் என்று நினைப்பதை விட; என்னுடையது எனக்கு நிலைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டாலே வாழ்க்கையை இன்பமாக வாழ்ந்திடலாம் *🚩பகவத்கீதை🚩* *மனதின் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனமே கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும் எதிரியுமாவான்.* நமது பிரச்சினைகளைத் தீர்க்க நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம்! ஒரு பதிலை, ஒரு வழியை, ஒரு தீர்வை எவ்வளவு விடாமுயற்சியுடன் தேடுகிறோம்! நம் வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் எல்லா விஷயங்களும் நமக்கு கிடைத்து விடுவதில்லை. அவ்வாறு நடக்கும் போது, 'அடுத்தவர்களுக்கு எல்லாம் கிடைத்து விட்டது. ஆனால், எனக்கு எதுவுமே கிடைக்கவில்லையே!' என்று எண்ணி வருத்தப்பட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக இறைவன் நமக்கான சிறப்பான விஷயத்தை தருவதற்கு வைத்திருப்பார். அது சரியான நேரத்தில் நம்மிடம் வந்து சேரும். அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் (Motivation story) பார்ப்போம். இறைவன் விலங்குகளையும், பறவைகளையும் படைத்து முடித்த பின்னர் அவைகளுக்கு வண்ணங்களை கொடுப்பதற்காக ஒரு அழைப்பை விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று விலங்குகளும், பறவைகளும் இறைவனிடம் சென்று தனக்கு வேண்டிய வண்ணங்களை கேட்டு பெற்றுக் கொண்டன. ஆனால், ஒரு பறவை வருவதற்கு சற்று தாமதம் ஆனது. அது மிகவும் தூரத்தில் இருந்து பறந்து வந்தது. அது வரும் வழியில் புயல் காற்று வீசி மழைப் பெய்ததால் பல சோதனைகளை கடந்து வந்தது. கடைசியாக அந்த பறவை இறைவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த பறவை தாமதமாக வருவதைப் பார்த்த மற்ற பறவைகள் அந்த பறவையை கேலி செய்ய ஆரம்பித்தன. 'நாங்கள் அனைவரும் நாங்கள் விரும்பிய நிறத்தை இறைவனிடம் கேட்டு பெற்றுவிட்டோம். ஆனால், நீ இவ்வளவு மெதுவாக வந்ததால் நிறங்கள் அனைத்தும் காலியாகி விட்டது!' என்று கூறி ஏளனமாக சிரித்தன. இதைக் கேட்ட அந்த பறவை மிகவும் வருத்தப்பட்டது. இதைப்பார்த்த இறைவன் பறவையிடம், 'நிறங்கள் அனைத்தும் காலியாகி விட்டது. ஆனால், பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் அனைத்து நிறத்தையும் எடுத்து உனக்கு கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதைப்போலவே எல்லா நிறத்திலும் இருந்து சிறிதை எடுத்து அந்த பறவைக்கு கொடுத்தார். இப்போது அந்த பறவை மற்ற பறவைகளைக் காட்டிலும் மிகவும் அழகாக மாறியது. அதுவே பஞ்சவர்ணக்கிளி. இதுப்போல தான் நம் வாழ்க்கையிலும் நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். இறைவன் அதைவிட மேலான சிறப்பான ஒன்றை நமக்காக வைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியடைவோம். ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறப்பானது காத்திருக்கிறது என்று அர்த்தம்! நாம் ஒருபோதும் பிரச்சினையைப் பற்றி சிந்திப்பதில்லை, ஆனால் கிளர்ச்சியுடனும் பதட்டத்துடனும் ஒரு பதிலைத் தேடுகிறோம் - இந்த பதில் பெரும்பாலும் சுயத்தால் முன்வைக்கப்பட்டதாக இருக்கிறது. பிரச்சினை நாமே உருவாக்கியது என்றாலும், அதிலிருந்து விலகி ஒரு பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். பதிலைத் தேடுவது என்பது பிரச்சினையைத் தவிர்ப்பதாகும் - அதுதான் நம்மில் பெரும்பாலோர் செய்ய விரும்புவது. எனவே, பதில் மிக முக்கியமானதாகிவிடுகிறது, பிரச்சினை அல்ல. இந்தத் தேடலில், நாம் கோட்பாடுகளில், கருத்துகளில், நம்பிக்கைகளில், அனுபவங்களில் தொலைந்து போகிறோம் - இவை அனைத்தும் சுயத்தின் படைப்புகள். நாம் இந்தக் கோட்பாடுகளை வணங்குகிறோம், ஆனால் அவை பதில்களைத் தருவதில்லை - அதனால் நாம் மேலும் மேலும் குழப்பமடைந்து சோர்வடைகிறோம். ஒரு சிக்கலைப் புரிந்துகொள்வது கடினமானது; அதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது; பதிலுக்கான மறைமுக ஆசை இல்லாத அணுகுமுறை. ஒரு சிக்கலைப் புரிந்துகொள்ள, பதிலுக்கான விருப்பத்திலிருந்து விடுபடுவது அவசியம். - *🚩பகவான் ஸ்ரீகிருஷ்ணர்🚩* #ஶ்ரீமத்பகவத்கீதை🙏 10. #விபூதி_யோகம் பாகம்__6 #அர்ஜுனன்_சொன்னது 🙏 🙏12. +13. " மேலாம் பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதம் தாம் ஆவீர். எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும், அப்படியே அஸிதர், தேவலர், வியாசர் ஆகியோர்களும் உம்மை நித்தியமானவன், திவ்ய புருஷன், ஆதிதேவன், பிறவாதவன், எங்கும் நிறைபொருள் என்று கூறுகின்றனர்; தாமும் அவ்வாறே கூறுகின்றீர்". 🙏 விளக்கம்: #பரப்பிரம்மம் _ நிர்குண பிரம்மம்(குணங்களற்ற மெய்ப் பொருள்) குணங்கள் ஏதும் அற்ற மெய்ப்பொருள், எங்கும் நிறைபொருள், முழுமுதற்பொருள்_ அதுவே பரப்பிரம்மம் எனப்படுகிறது #அபர_பிரம்மம் _ஈஸ்வரன் ##பரம்_தாமம் _ அண்டசராசரம் அனைத்துக்கும் பிரம்மமே முடிவான இருப்பிடமாக இருக்கிறது. அனைத்தையும் விளக்கவல்ல பரஞ்சோதியும் அதுவே. #ஆதிதேவன் _ மற்ற தேவர்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இருந்தவர் #பரமம்_பவித்ரம் _ நீர், நிலம், தீ முதலியவைகள் தற்காலிகமாக பொருளை தூய்மைப்படுத்த வல்லவைகள். ஆனால் பர பிரம்மத்தை சார்ந்திருக்கும் அளவு ஜீவன்கள் பரம சொரூபம் ஆகிறார்கள்; அவர்களது குற்றங்கள் எல்லாம் நீங்குகிறது. ஆகையால் ஜீவன்களைப் புனிதமாக்குபவைவைகளில் பரப்பிரம்மம் முக்கியமானது. எனவே "பரமம் பவித்ரம்" எனப்படுகிறது. சொன்ன வார்த்தைகள் செய்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அதற்கு உடைந்தைய வம்சம் வேர்ருடன் அழிக்கும் #ரிஷி _ மனதையும், புலன்களையும் அடக்கி பர தத்துவத்தை (பரமாத்மாவின் தத்துவத்தை) அனுபவத்தில் கண்டறிந்தவர். தேவ ரிஷிகளுள் சிறந்தவர் நாரதர். மேலான பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதம் தாங்களே ஆவீர்கள்! கிருஷ்ணா. எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும் அப்படியே வியாசர் முதலியவர்களும் தங்களை நித்தியமானவர் என்றும், திவ்ய புருஷன், ஆதிதேவன், பிறவாதவர், எங்கும் நிறைபொருள் என்று கூறுகின்றனர். தாங்களும் அவ்வாறே கூறுகின்றீர்கள்! என்று பணிவோடு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் கூறுகின்றான் அர்ஜுனன். 🙏14. " கேசவா நீர் எனக்கு ஓதுவது யாவும் உண்மை என்றே எண்ணுகிறேன். பகவானே, உமது தோற்றத்தை தேவர்களும் அறியார், தானவர்களும் அறியார்". 🙏 விளக்கம்: யாரிடத்தில் பலம், தர்மம், ஐஸ்வர்யம், வல்லமை, வைராக்கியம், தேஜஸ் ஆகியவைகள் ஆகிய இவைகள் ஆறும் நிறைந்திருக்கின்றனவோ அவரே பகவான். பகவான் என்பதற்கு ஆறு குணங்களை உடையவன் என்ற பொருள் உண்டு. இந்த ஆறுவித குணங்களை ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யம், வல்லமை, ஸ்ரீ, கீர்த்தி என்று பொருள்டுத்துவதும் உண்டு. ஜீவன்களுடைய முக்கால நிலையை அறியும் வல்லமை அவருக்கு உண்டு. பகவானுடைய பிரபாவம் அல்லது தோற்றம்; அவர் அவதரிப்பதன் உட்கருத்து தேவர்களுக்கே விளங்குவதில்லை. இனி தானவர் அல்லது அசுரர்கள் எப்படி அறிய முடியும்? நல்லவர்களைக் காப்பதற்கும், கெட்டவர்களை அழிப்பதற்கும் பகவான் அவதரிக்கிறார் என்பது ஓரளவு நமக்கு புலனாகிறது. பகவானே தாங்கள் தோன்றுவதன் காரணத்தை தேவர்களும் அறியமாட்டார்கள் "தானவர்கள்" என்ற அசுரர்களும் அறிய மாட்டார்கள் என்று கூறுகிறான்! அர்ஜுனன், #ஸ்ரீகிருஷ்ண_பரமாத்மாவிடம். இன்னும் நான்கு ஸ்லோகங்களில் பரமாத்மாவை பற்றி பரமாத்மாவிடமே கூறுகிறான் *பகவானுக்கு_என்ன_கொடுத்து_வணங்க_வேண்டும்* 🌹 *பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார்*. *அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்*. *ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை ஆனால் அவர் ரொம்ப சதுரர் - கெட்டிக்காரர் - பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள். உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார்*. *உடனே பரமாத்மா கேட்டானாம்* - *இவ்வளவு கேட்கிறீரே* ... *நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா*? *உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி*? *என்றார் பக்தர்*. *என்னிடத்திலே* *என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா*? *பகவான் கேட்கிறார்*. *அதைத் தெரிஞ்சு வச்சுண்டுதான்* *அதைக் கொடுக்க வந்தேன்*. *என்னது அது*? *கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன்* * *நீ சஞ்சாரம்* *பண்ணினாய் அல்லவா* .. *அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள்*. *ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை*.. *அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்*.. *என்றார் பக்தர்*. *பகவான் பதிலே சொல்லலை. வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆகவே மனசை சமர்ப்பிக்கணும். தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன்.? எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி என்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்*. *பூரணனான அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான். இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான்*. *நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள், ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது*. *சரணம் சரணம்* *ஜெய்ஸ்ரீராம்*🌹 #அர்ஜுனன். 🙏 #ஶ்ரீகிருஷ்ணா__சரணம் 🙏 _
magill vithu magill. - ShareChat