ShareChat
click to see wallet page
search
அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. அதற்கு மறுநாள் (11-ந்தேதி) ஒரு சவரன் ரூ.1,760-ம் அதிகரித்து, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது. இந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்து அனைவருக்கும் 'ஷாக்' கொடுத்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டியது. இதற்கு முன்பு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்து இருந்தது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து வந்த நிலையில், கடந்த 10-ந் தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-ம் எகிறி, ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840-க்கும், சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 14.11.2025 ஒரு சவரன் ரூ.94,720 (இன்று) 13.11.2025 ஒரு சவரன் ரூ.95,200 (நேற்று) 12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600 10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840 09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 #😮மனநிம்மதி கொடுத்த தங்க விலை😍 #🔴இன்றைய முக்கிய செய்திகள்
😮மனநிம்மதி கொடுத்த தங்க விலை😍 - சற்று குறைந்த தங்கம்  ன்றைய நிலவரம் விலை 9 6160T60T . 2 சற்று குறைந்த தங்கம்  ன்றைய நிலவரம் விலை 9 6160T60T . 2 - ShareChat