...
கிடைக்காமல் போனதெல்லாம்
கிடைக்காமலே
போகட்டும்...
புலம்பல்களால்
எந்த ஒன்றும்
கிடைக்கப் போவதில்லை!
எந்த ஒன்றும்
எந்த ஒன்றுக்கும்
தீர்வானதாக
வரலாறில்லை!
எல்லாவற்றுக்கும்
முயற்சி செய்...
எல்லாவற்றுக்கும்
ஆசைப்படு..
எது உனக்கு
கிடைக்க வேண்டுமோ
அது கிடைத்தே தீரும்!
விழிகளைத்
திறந்தவருக்கே
விடியல் தெரியும்...
முயற்சிப்பவருக்கே
வெற்றியின்
முகவரி தெரியும்!
இலக்கை நோக்கி
ஓடித்தான்
தீர வேண்டும் என்பதில்லை..
நடந்திடவாவது
முயற்சிப்போம்!
நம்மின்
ஒவ்வொரு முயற்சியும்
நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு
அடியாகும்!
முயற்சிப்போம்..
இமயத்தை எட்ட,
வரலாற்றினை
புரட்டிப் போட..
எண்ணியதை
அடைந்து விட!
சில..
கிடைக்காமலும் போகலாம்,
அதற்காக
சோர்ந்து போவதாலும்
அழுது வழிவதாலும்
எந்த மாற்றமும்
நிகழ்ந்து விடாது...
நீ
பலவீனமாவதைத் தவிர!
அடுத்து என்ன..
யோசி,
கிடைக்காமல்
போனதை விட்டு
கிடைப்பதற்கு
முயற்சி செய்!
உனக்கென்றும்
ஒரு வாசல்..
ஒரு வாழ்க்கை
நிச்சயம் இருக்கும்
அதைத் தேடு!
விரிந்த ஆகாயத்திற்குள்
எழுந்து செல்லும்
பறவை நீ..
யாராலும் நீயல்ல!
உனக்கு வேண்டிய
ஒவ்வொன்றையும்
நீயே உருவாக்கு!
ஒன்று
கிடைக்கவில்லை
என்பதற்காக
உலகமே
அழிந்து விடப் போவதில்லை!
உன் வாழ்க்கையும்
முடிந்து விடப்போவதில்லை!
அடுத்து
என்னவென்று யோசி..
அந்த ஆகாயம் கூட
உன் வசமாகும்! #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம்


