நான் இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்....
அம்மா அப்பா என்னை கடைசியாக மடியில் வைத்துக்கொள்ள நினைக்கலாம்..!!!
அக்கா தங்கை என் கை பிடித்து அழ நினைக்கலாம்..!!
என் அண்ணன் என் முகம் பார்த்து கண்ணீர் விட நினைக்கலாம் கடைசியாய் ஒரு நொடி என் நெற்றியில் முத்தமிட நினைக்கலாம்...!!!!
கணவர் கடைசி நிமிடத்திலாவது அருகில் இருக்க நினைக்கலாம்..!!
என்மகன் என்னை தட்டி எழப்பி
கட்டி அழ நினைக்கலாம்..!!
தொலைந்த தோழியொருத்தி
கடைசியாய் என் கரம் கோர்க்க வரலாம்..!!
கூட பழகிய தோழிகள் பக்கத்து வீட்டுக்காரர்கள்
கடைசியாய் கட்டித்தழுவி கதறி அழுதிட விரும்பலாம்..!!
நான் அன்பைக் காட்டுவது தெரியா உறவு கடைசியாய் என் தலைக் கோத ஆசைப்படலாம்..!!
உறவற்ற பெயரற்ற செய் நன்றி மறவா யாரோ
கடைசியாய் என் பாதம் தொட விரும்பலாம்..!!
என்னை விரும்பி வெறுத்த ஒருத்தர் என் முகம் காண வந்து நின்று அழுது கொண்டிருக்கலாம் ஒருமுறையாவது என் முகத்தைப் பார்த்து விட்டு செல்லட்டும்...!!!
நீ இறந்து போனால் முதல் மாலை என்னுடையது தான் என்று ரோஜா மாலையை கையில் வைத்துக்கொண்டு உங்களை தேவைக்காகவோ உண்மையாகவோ நேசித்த உறவு வந்திருக்கலாம்...!!!
மாலையை போட்டு விட்டு கண்ணீர் விட்டு செல்லட்டும் வழி விட்டு விடுங்கள் பெட்டியில் அடைக்காதீர்கள்...!!!
உயிரற்று போனால்தானென்ன...
கடைசியாய் எனக்கும் தேவையாய் சில வருடல்கள்
இறந்த பின் என்னை
கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்...!!
எல்லாம் அந்த ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டுமே..!!
கண்ணீருடன்.... #மரணம் #கொரனோ மரணம்


