#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் *புரட்டாசி மாதம் 15ம் நாள் 01-அக்டோபர் -25, புதன் கிழமை மஹாநவமி சரஸ்வதி ஆயுதபூஜை* *நவராத்திரி ஒன்பதாம்* *நாள்*
*புனிதமாக நவராத்திரி*
அம்பிகையை ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மற்றும் நவதுர்கா சம்பிரதாயத்தில் ஸ்ரீ சித்திதாத்ரி வடிவில் அன்னை யாக அலங்காரத்தில் போற்றி வழிபடுவோம் வாரீர்
அனைத்து உயிர்களையும் ஆரோக்கியத்தோடுகாத்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி
ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர் தேவி மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத்
தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள்.
அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.இதன் உட்கரத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு ஒப்பான “தீபிகா பிம்ப சக்கரம்” அமைந்துள்ளது
வெண் பட்டாடை உடுத்தி வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவளே வாணி சரஸ்வதியே போற்றி
வெள்ளை நிற மல்லிகை முல்லை சாமந்தி பூக்கள் கொண்ட மணக்க மணக்க மாலைகளை சாற்றிடுவேன்
நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நாமணக்க உனை போற்றி பாடிடுவேன்
பற்பல கலைகளில் சிறந்த ஞானம் வளர்ப்பாய் காணும் பொருளில் தோன்றும் கலைமணியே போற்றிடுவேன்
எந்தன உள்ளக் கோவிலிலே சதா உறைந்து நின்று இனிய தமிழில் போற்றி பாக்கள் எழுதிட அருள்வாய்
கான மனோகரி கல்யாணி உனை போற்றி பணிந்திடும் எனக்கு வேண்டும் இந்த வரம் தருவாய் வேணி சரஸ்வதி
தாமரை மலர்மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ சித்திதாத்ரி அன்னையை .
ஒன்பதாம் நாள்வழிபட முக்தி கிட்டும், நான்கு கரம் கொண்டு இருக்கும் இவள் இடது கரத்தில் கதை, சக்ரம் கொண்டும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம்.
சித்திதாத்ரி தேவி (9)
சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே
அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே
அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே
அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும் துர்க்கையளே!
ஸித்திதாத்ரி எனப் பெருமை பெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே
தாமரைமலர் மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே
சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே
நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன்
🪷🪷🪷


