ShareChat
click to see wallet page
search
இந்திய வரலாற்றில் ஒரு குற்றத்தை விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் செல்வது திமுக அரசு மட்டுமே.. வள்ளியூரில் பொது இடத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இறந்த தலைவர்களுக்கு அரசு செலவில் சிலை வைப்பது ஏற்புடையதல்ல என்றும், அது பொது பணத்தை வீணடிப்பதாகும் என்றும் தெரிவித்தனர். மேலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என கூறி காறிதுப்பி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். அதேபோல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது, உச்ச நீதிமன்றம் “நீங்கள் சுரண்டல் அரசு” என்றும், “இலவசங்களுக்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது?” என்று மீண்டும் காறிதுப்பியதோடு கடுமையான கண்டனமும் தெரிவித்தது. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் தமிழகத்தின் எந்த ஊடகங்களிலும் முறையாக விவாதிக்கப்படவும் இல்லை குறைந்தபட்சம் செய்தியாக கூட வரவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்கள் கூட முக்கியத்துவம் பெறவில்லை என்பது ஊடகங்கள் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று அரசியல் விமர்சகர்களும் ஊடகங்கள் மீதான தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் கிட்னி திருட்டு தொடர்பாக வழக்கு விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. ஒரு மாநில அரசு, ஒரு குற்றத்தை விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் செல்வது மிகவும் ஆபத்தான போக்கு என்று பத்திரிகையாளர் மணி மட்டுமே சுட்டி காட்டுகிறார். இந்த விவகாரங்கள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தவறிவிட்டன என மணி குற்றம்சாட்டுகிறார்.(உண்மையும் கூட) ஒரு வலுவான எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியின் தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதன் மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.(இது அண்ணாமலையால் மட்டுமே சாத்தியம்) ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பது ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறுகிறார். ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்த கள்ள மௌனம்,தன் சுயநலத்திற்காக ஆளுங்கட்சியின் பலத்தை அதிகரிப்பதாக தெரிகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறுவதாக மணி கூறுகிறார். திமுக ஆட்சியின் இத்தகைய போக்கு எதிர்காலத்தில், தமிழகத்தில் ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லாமல்போக வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். உண்மைதானே..? #தமிழ் நாடு அரசியல்💐 #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #🙏🏻my good 👍
🙏🏻my good 👍 - 12756 G தமிழக அரசை கிழித்து தொங்கவிட்ட உச்சநீதிமன்றம். ஒரு ஊடகத்தில் கூட செய்தி வரவில்லை. எந்த ஒரு ஊடகமும் விவாதம் நடத்தவில்லை. அதிமுக பாஜக பிரச்சனைகளை தவிர ஊடகத்திற்கு வேறு எதுவும் கண்ணுக்கு தெரியாதா? விளக்கம் மேலே அவசயம் படிக்கவும் 12756 G தமிழக அரசை கிழித்து தொங்கவிட்ட உச்சநீதிமன்றம். ஒரு ஊடகத்தில் கூட செய்தி வரவில்லை. எந்த ஒரு ஊடகமும் விவாதம் நடத்தவில்லை. அதிமுக பாஜக பிரச்சனைகளை தவிர ஊடகத்திற்கு வேறு எதுவும் கண்ணுக்கு தெரியாதா? விளக்கம் மேலே அவசயம் படிக்கவும் - ShareChat