ShareChat
click to see wallet page
search
அந்த காலத்தில் வீட்டுக்கு ஒருத்தன்தான் வேலைக்கு போவான். பொருளாதார நிலையே சிரமம்தான். வீட்டுக்குவிருந்தாளி வந்தாவே, பக்கத்து வீட்டில் நாற்காலியை கடன் வாங்கும் நிலைதான் பெரும்பான்மைக்கு. இவ்வளவு மோசமான சூழலிலும் சுமைதாங்கி, சாரதா போன்ற கொடும் துயர முடிவுகள் கொண்ட படங்களை பார்த்து ரசித்து நூறு நாட்கள் ஓடவைத்திருக்கிறார்கள். இன்று வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும், அத்தனை பேரும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன மாதிரியான படங்களை பார்க்கிறார்கள்.? இவர்களின் ரசனை என்னவென்று யாருக்கும் புரிவதில்லை. காலேஜ் கட்டடித்து விட்டு சினிமா பார்ப்பவர்களை தவிர வேறு யாரும் தியேட்டருக்கு போவது போல் தெரியவில்லை. மற்றவர்களெல்லாம் ஆன்லைனிலேயே படம் பார்த்து நகர்கிறார்கள். தியேட்டருக்கு எவன் வருகிறானோ, அவனுக்கு பிடித்ததை மட்டும் கொடுத்தால்தான் கல்லா கட்ட முடியும் என்பதுதான் நிலைமை. #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat