ShareChat
click to see wallet page
search
*அசோக் குமார் (Ashok Kumar, வங்காள மொழி অশোক কুমার গাঙ্গুলি , 13 அக்டோபர் 1911 – 10 திசம்பர் 2001)* என்றும் அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர். விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது. அசோக்குமார் வங்காள ப்ரெசிடென்ஸி பகுதியில் பகல்பூரில் குமுத்லால் என்ற இயற்பெயரில் பிறந்தார். இவர் வழக்கறிஞரான தந்தை குஞ்சிலால் கங்குலிக்கும், கவுரிதேவிக்கும் மூத்த மகனாய் பிறந்தார். இரண்டு வருடம் கழித்து பிறந்த தங்கை சதிதேவி சஷாதர் முகர்ஜிக்கு மிக சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அடுத்து பிறந்த தமையன் பெயர் அனூப் குமார் 15 வருட இடை வெளியில் 1926-ல் பிறந்தார். இதை அடுத்து மூன்று வருடத்தில் அபாஸ் என்ற கிஷோர் குமார் 1929-ல் பிறந்தார் குமுத்லால் கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரியில் கல்வி பயின்றார் .அவர் வழக்கறிஞர் வேலைக்கு படித்தாலும் அவரது கவனம் முழுவதும் சினிமா மீதே சென்றது .எனவே பம்பாய்க்கு சென்று தன மைத்துனருடன் பாம்பே டாக்கீஸில் லேப் உதவியாளராக பணி புரிந்தார் . குமுத்லால் கங்குலி ஒரு ஆய்வக உதவியாளராக மகிழ்ச்சியாக பணிபுரிந்தார், 1936 ஆம் ஆண்டில் மும்பை டாக்கீஸ் தயாரிப்பு ஜீவன் நையா . அப்போது நட்சத்திரமான தேவிகா ராணி நடிகர் நஜ்முல் ஹாசன் என்ற கதாநாயகனுடன் நடித்தார் . தேவிகா ராணி யின் கணவர் ஹிமான்சு ராய் அப்படத்தின் தயாரிப்பாளர் . என்றாலும் நஜ்முல் ஹாசனுடன் காதல் வயப்பட்டு தேவிகாரணி அவருடன் ஓடி விட்டார் . பின்னர் சில நாட்களில் தேவிகாராணி கணவருடன் திரும்ப வந்து விட்டார் .பழைய கதாநாயகன் நஜ்முல் ஹாசன் நடிக்க மறுத்து விட்டார் . எனவே கதாநாயகனுக்கு உரிய லட்சணங்கள் இல்லாது பார்வைக்கு சுமாராக இருந்த குமுத்லால் அசோக்குமார் என்ற பெயர் மாற்றப்பட்டு அப்படத்தின் கதாநாயகனாக மிளிர்ந்தார் . இவர் 2001ஆம் ஆண்டு திசம்பர் 10-ல் 90 வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அப்போது அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் என்று பாராட்டினார் பிரபல இந்தி திரைப்பட நடிகர் அசோக் குமார் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! அசோக் குமார் என்று அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர். விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது. இந்தியத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். ‘சல் சல் ரே நவ்ஜவான்’, ‘ஷிகாரி’, ‘சாஜன்’, ‘சர்கம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டின. ‘ஜுவல் தீஃப்’, ‘ஆஷீர்வாத்’, ‘புரப் அவுர் பஸ்சிம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். தேவ் ஆனந்த், திலீப் குமார், ராஜ் கபூர் என பல நாயகர்கள் வந்தாலும் இவரது புகழ் மங்கவில்லை. ‘ஹம்லோக்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். ‘ஜித்தி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தார். 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறந்த ஓவியர், ஹோமியோபதி மருத்துவராகவும் திகழ்ந்தார். சிறந்த பாடகர், நடிகரான கிஷோர் குமார் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 1987-ல் இவரது பிறந்த நாளன்று தம்பி கிஷோர் இறந்ததால், அதுமுதல் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடவே இல்லை. சங்கீத நாடக அகாடமி விருது, பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, தாதா சாஹேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தி திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த அசோக் குமார் 90-வது வயதில் (2001) மறைந்தார்.. இந்த நினைவு நாளில் இந்த மாபெரும் நடிகரை நினைவு கூறுவோம் #வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - AshokKumac AshokKumac - ShareChat