ShareChat
click to see wallet page
search
#🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ###SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறாத சிவதிருத்தலம். அது தான் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பாள் உடனாய ஸ்ரீ காசிநாதர் அருளும் திருத்தலம். கங்கை நதிக்கரையில் காசியும், காசியில் ஸ்ரீ விஸ்வநாதரும் அருள் பாலிக்கின்றனர்.  கங்கை ஆறு தண்பொருநை ஆற்றில், அதாவது தாமிரபரணி ஆற்றில்  கலந்து வருவதாக திருநெல்வேலி புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அந்த கங்கையையும் காசியையும் இணைத்து இத்திருத்தல மூர்த்திக்கு ஸ்ரீ காசிநாதர் என்ற திருநாமம் வந்ததாகக் கூறப்படுகிறது. அம்பாசமுத்திரத்தில் காசிப முனிவர் சிவபெருமானை வேண்டி ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில்  தோன்றிய சிவபெருமானிடம், காசிப முனிவர், தான் தினமும் பூஜித்து வழிபட சிவலிங்கம் ஒன்று வேண்டும் என்று கேட்ட போது, காசிப முனிவர் முன் தோன்றிய சிவபெருமானே சிவலிங்கமாக உருமாறினார்.   காசிப முனிவர் வழிபட சிவபெருமானே சிவலிங்கமாக உருமாறிய அந்த சிவலிங்கத்தையே பிரதிஷ்டை செய்து ஸ்ரீ காசிபநாதராக  வணங்கி வழிபட்டு வந்தார் காசிப முனிவர். தற்போது ஸ்ரீ காசிபநாதர் என்ற பெயர் மருவி ஸ்ரீ காசிநாதர் என்று அழைக்ககப்படுகிறார் என்கின்றனர். ஸ்ரீ மரகதாம்பாள் தனது பக்தர்களுக்கு பிள்ளைச் செல்வத்தை வழங்குவதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர்.  தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அம்பாளுக்கு தொட்டில் கட்டி வளையல் அணிவித்து குதூகலம் அடைகின்றனர். பக்தர்களுக்கு, அம்பாள், சமுத்திரம் போல் அருளை வாரி வாரி வழங்குவதால் அம்பாள் சமுத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்திருத்தலத்தின் பெயர் நாளடைவில் அம்பாசமுத்திரம் என மருவியதாகக் கூறப்படுகிறது. கேரள மன்னன் ஒருவனுக்கு உண்டான நோயைக் குணப்படுத்த முடியாத நிலையில், அம்மன்னன் தனது நோய்க்கு தீர்வு கூறுமாறு பரமனிடம் வேண்ட, கருணையே உருவான பரமனும் மன்னன் முன் தோற்றி, எள் தானியத்தில் ஒரு பொம்மை செய்து,  அந்த பொம்மையை காயத்ரி மந்திர உபதேசம் பெற்ற ஒருவருக்கு தானமாக அளித்தால் மன்னனின் நோய் தீரும் என்று கூறி மறைந்தார். அதனால் அகமகிழ்ந்த மன்னனும் எள் தானியத்தில் ஒரு பொம்மையைஙச செய்து அந்த பொம்மையை காயத்ரி மந்திர உபதேசம் பெற்ற ஒரு இளைஞனிடம் வழங்கினான். உடனே மன்னனும் நோயிலிருந்து குணமடைந்தான்.  நோய் விலகியதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மன்னன், தன்னிடமிருந்த பொம்மையைப் பெற்ற அந்த இளைஞனுக்கு விலையுயர்ந்த இரத்தினங்களைப் பரிசாக வாரி வழங்கினான்.  அப்போது உயிர் பெற்ற அந்த எள் பொம்மை அந்த இளைஞனிடம், நீ கற்றுக்கொண்ட காயத்திரி மந்திரத்தின் ஒரு பகுதியை  எனக்கு கொடுத்து விட்டால், உன்னை விட்டு விலகி விடுகிறேன், மன்னனின் நோய் உன்னை அண்டாது என்றது.  அந்த இளைஞனும் அவ்வாறே காயத்திரி மந்திரத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து தனக்கு வரவிருந்த நோயிலிருந்து தப்பினான்.  மன்னனிடம் தான் பெற்ற இரத்தினங்களை மக்களுக்காக செலவிட விரும்பிய அந்த இளைஞன், அகத்தியரிடம் ஆலோசனை கேட்பதற்காக அவரைத் தேடி பொதிகை மலைக்கு சென்றான்.  அவ்வாறு செல்லும் முன், தான் வைத்திருந்த இரத்தினங்களை மூட்டையாகக் கட்டி, அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு இத்திருக்கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து விட்டுச் சென்றான். அகத்தியரிடம் ஆலோசனைப் பெற்று திரும்பிய இளைஞன் அர்ச்சகரைச் சந்தித்து தான் கொடுத்து விட்டுச் சென்ற இரத்தினங்கள் அடங்கிய மூட்டையைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அர்ச்சகர் திருப்பிக் கொடுத்த மூட்டையில் இரத்தினங்களுக்குப் பதிலாக பருப்பு இருந்தது கண்டு அதிர்ச்சியுற்ற இளைஞன், தான் கொடுத்தது இரத்தினங்கள் அடங்கிய மூட்டை என்றான். அர்ச்சகரோ, நீங்கள் கொடுத்த மூட்டை இது தான் என்றார்.  அர்ச்சகர் தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்த இளைஞன், மன்னனிடம் சென்று நடந்ததைக் கூறினான்.  அர்ச்சகரை அழைத்த மன்னன், தன்னிடம் இளைஞன் இரத்தினங்கள் அடங்கிய மூட்டையைக் கொடுக்க வில்லை என்று சிவபெருமான் முன்பாக சத்தியம் செய்யுமாறு கட்டளையிட்டான்.  அர்ச்சகரும் அவ்வாறே சத்தியம் செய்தார். அர்ச்சகர் பொய் சத்தியம் கூறியது கண்டு வெகுண்டெழுந்த சிவபெமான், அந்த அர்ச்சகரை எரித்து சாம்பலாக்கினார்.  அர்ச்சகர் மீது பரிதாபம் கொண்ட இளைஞன், அர்ச்சகரை மன்னித்து அருளி அவரை உயிர்ப்பிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினான்.   சிவபெருமானும் அவ்வாறே அர்ச்சகரை மன்னித்தருளினார். இரத்தினங்களை மீட்ட அந்த இளைஞன், மக்களுக்காக ஒரு கால்வாயை உருவாக்கினான். அந்தக் கால்வாய் தான் கன்னடியன் கால்வாய்.  இளைஞனுக்கு அருளிய சிவபெருமான் இத்திருத்தலத்தில், ஸ்ரீ எரித்தாட்கொண்டார் என்ற பெயரில் அருள்கிறார்.  அவரை ஸ்ரீ எரிச்சுடையார் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். அர்ச்சகரை எரித்த சிவபெருமான் அதன் பிறகும் உக்கிரத்துடன் இருந்த காரணத்தினால், அன்னை பார்வதியின் வேண்டுகோளின் படி, திருமால், சிவபெருமானை ஆசுவாசப் படுத்தினார். எனவே, இச்சிவ திருத்தலத்தில் ஸ்ரீ திருமாலும் ஸ்ரீ எதிச்சுடையார் எதிரிலே தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் என்பதும் இத்திருத்தலத்தின் சிறப்பு. இத்திருத்தலத்தில் அருளும் விநாயகர் ஸ்ரீ அனுக்கிரக விநாயகர்.  இந்த சிவ திருத்தலத்தில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது கிடையாது.  ஆனால் ஐப்பசி மாதப் பிறப்பன்று அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  நீண்ட ஆயுள்,  ஆரோக்கியம், குழந்தைப் பேறு பெறவும், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவோரும் வழிபட வேண்டிய திருத்தலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பாள் உடனாய ஸ்ரீ காசிநாதர் அருளும் திருத்தலம். திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அம்பாசமுத்திரம் அமைந்துள்ளது. ஓம் நமசிவாய.!
🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 - ShareChat