#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 03,*
*பாபு ராஜேந்திர பிரசாத்*
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் 1884ம் ஆண்டு டிசம்பர் 03ம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர்.
புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது ராஜேந்திர பிரசாத் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியக் குடியரசை செம்மையாக வழிநடத்திய இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்திய குடியரசுத் தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் தனது 78வது வயதில் (1963) மறைந்தார்.


