ShareChat
click to see wallet page
search
சண்முகர் துதி சிங்கார வேலா சிவசக்தி பாலா சண்முக நாதா சரணம்! சரவண பவனே கருணையின் வடிவே சண்முக நாதா சரணம்! சித்திரை நிலவே தத்துவப் பொருளே சிவகிரி வேலா சரணம்! செந்தில் வேலா செந்தூர் பாலா சேவடி தொழுதோம் சரணம்! முத்திரைப் பவுனே வித்தக அறிவே முத்தமிழ் அமுதே சரணம்! மூவிரு முகமே பூவிதழ் மனமே முடி மணி தொழுதோம் சரணம்! செங்கனிச் சுவையே திங்களின் ஒளியே சிரித்திடும் எழிலே சரணம்! சிந்தனைக் கடலே சந்தனக் குடமே சிங்கார வேலா சரணம்! பங்குனிக் கதிரே குங்குமச் சிமிழே பார்வதி பாலா சரணம்! பழனியம் பதியின் சுந்தர மதியே பாங்குடன் தொழுதோம் சரணம்! மங்கையர் கனவே சங்கரன் மகனே மயில் வாகனனே சரணம்! மங்கலம் தந்திடப் பொங்கிடும் அருளே மலரடி தொழுதோம் சரணம்! பங்கய மலரிதழ் தங்கிய திருவே பரமனின் குருவே சரணம்! பன்னிரு விழியே புன்னகை மொழியே பரிவுடன் அருள்வாய் சரணம்! ஓம் முருகா சரணம் 🙏 ஓம் சண்முகா சரணம் 🙏 #murugan #Muruga #thiruchentur murug an #OM MURU🙏 #god muru
murugan - ShareChat
01:16