ShareChat
click to see wallet page
search
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 9, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது என்பதே உண்மை. ஆண்கள் 10, பெண்கள் 10 என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக களம் இறங்கினர். இதில் பாதி பேர் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள். பலூன் அக்கா அரோரா தொடங்கி வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், துஷார், சுபிக்‌ஷா, அகோரி கலை, நந்தினி என போட்டியாளர்களின் தேர்வை கண்டு ரசிகர்கள் அப்செட் ஆகினர். வந்தவர்களில் ஒரளவுக்கு கண்டெண்ட் கொடுப்பவர்கள் என்றால் அது பார்வதி, கமரூதின், திவாகர் மட்டுமே. தன்னை தானே நடிப்பு அரக்கன் என சொல்லி கொண்டு திரியும் திவாகரை கடந்த வாரம் பயங்கரமாக செஞ்சி விட்டார் விஜய் சேதுபதி. இதுவரை 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வாரம் கேம்மை இன்னும் சுவாரசியமாக்க 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். சாண்ட்ரா, பிரஜன், அமித், திவ்யா கணேஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்து, தங்களது கேம்மை தொடங்கி விட்டனர். இந்நிலையில் டிஆர்பியில் படு மோசமான நிலையில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 9 ஷோவை இன்னும் சுவாரசியமாக்க பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர் மஞ்சரி, தீபக், பிக் பாஸ் 5 போட்டியாளர் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஹோட்டல் டாஸ்க்கை நடத்த இவர்கள் மூவரும் ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதுக் குறித்த புரமோவும் வெளியாகியுள்ளது #பிக் பாஸ் சீசன் 9 #BIGBOSS9 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
பிக் பாஸ் சீசன் 9 - Bigg Boss Live: மீண்டும் பிக் வீட்டுக்கு வந்த தீபக் - பாஸ் பிரியங்கா! மஞ்சரி Bigg Boss Live: மீண்டும் பிக் வீட்டுக்கு வந்த தீபக் - பாஸ் பிரியங்கா! மஞ்சரி - ShareChat