ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)🏹🚩ஸ்ரீ மதே ராமானுஜாய நம 🙏🙇‍♂️✨ ஸ்வாமி எம்பெருமானாரின் வாழி திருநாமம் 🙏🙇‍♂️✨ அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே 🙏🙇‍♂️✨ அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே 🙏🙇‍♂️✨ பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே 🙏🙇‍♂️✨ பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே 🙏🙇‍♂️✨ சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே 🙏🙇‍♂️✨ தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே 🙏🙇‍♂️✨ சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே 🙏🙇‍♂️✨ சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே 🙏🙇‍♂️✨ எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே 🙏🙇‍♂️✨ எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே 🙏🙇‍♂️✨ பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே 🙏🙇‍♂️✨ பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே 🙏🙇‍♂️✨ தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே 🙏🙇‍♂️✨ தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே 🙏🙇‍♂️✨ தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே 🙏🙇‍♂️✨ சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே 🙏🙇‍♂️✨ சீராருமெதிராசர் திருவடிகள் வாழி 🙏🙇‍♂️✨ திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி 🙏🙇‍♂️✨ ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி 🙏🙇‍♂️✨ இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி 🙏🙇‍♂️✨ சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி 🙏🙇‍♂️✨ தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி 🙏🙇‍♂️✨ ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி 🙏🙇‍♂️✨ இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே 🙏🙇‍♂️✨ அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே 🙏🙇‍♂️✨ அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே 🙏🙇‍♂️✨ செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே 🙏🙇‍♂️✨ தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே 🙏🙇‍♂️✨ மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே 🙏🙇‍♂️✨ மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே 🙏🙇‍♂️✨ அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே 🙏🙇‍♂️✨ அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே 🙏🙇‍♂️✨ அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ! சடகோபன் தண்டமிழ் நூல் வாழ! கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ! மணவாள மாமுநியே இன்னுமொரு நூற்றாண்டிரும் 🙏🙇‍♂️✨ #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat
00:19