#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 11, 1926*
அமெரிக்காவின் எண்ணிடப்பட்ட நெடுஞ்சாலை முறை உருவான நாள்.
இதுவே, எண்களின்மூலம் சாலைகளை அடையாளம் காட்டிய உலகின் முதல் நெடுஞ்சாலை அமைப்பாகும்.
பிற நாடுகளுக்கு முன்னோடியாக இவற்றை உருவாக்கிய அமெரிக்காதான், இன்றும் உலகிலேயே அதிகச் சாலைகளைக் கொண்ட நாடு.
சீனா மூன்றாமிடத்திலிருந்தாலும், மிக அதிக விரைவுச் சாலைகளைக் கொண்ட நாடாக உயர்ந்திருக்கிறது.
இந்தியா இரண்டாமிடத்தில் இருந்தாலும், மிகக்குறைந்த தொலைவிற்கே விரைவுச்சாலைகளை அமைத்து, காலத்திற்கேற்ற முன்னேற்றத்தை அடையாமல் பின்தங்கியிருக்கிறது.


