வானிலை நிபுணர் ஹேமச்சந்திரன் கூற்றுப்படி, சென்யார் புயல் தமிழக கடற்கரையை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்கிறது. எனினும், அதன் தீவிரம் மற்றும் கரையை கடக்கும் இடம் குறித்து இப்போதே துல்லியமாக கணிக்க முடியாது.
தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, அடுத்த 2-3 நாள்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும். இது நவம்பர் 22-23க்குள் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, நாளை முதல் அடுத்த 3-4 நாள்களுக்கு தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். சென்யார் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பெயரிட்டது. #🌪🌀வருகிறது புதிய புயல் 🌀🌪 #உருவானது புதிய புயல் #வங்கக்கடலில் புதிய புயல் #🔴இன்றைய முக்கிய செய்திகள்


