இவ்வசனத்தில் (அல்குர்ஆன் 4:103) தொழுகை, நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று சொல்லப்பட்டுள்ளது.
'யார் தொழுகையை மறந்து விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பார்க்க : முஸ்லிம் 1216
மறதி, தூக்கம் இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
எனவே தூக்கம், மறதி, பயணம் போன்ற காரணங்கள் இல்லாமல் வேறு காரணங்களுக்காகத் தொழுகையை உரிய நேரத்தில் தொழாதவர் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு, இனி வரும் காலங்களில் தொழுகையை விடாமல் தொழ முயற்சிக்க வேண்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


