#கழுகு
*கழுகு தரையில் பாம்புடன் சண்டையிடாது. பாம்பை தூக்கிக் கொண்டு* *வானத்துக்குப் போய், அதனுடைய களத்தை மாற்றிவிடும். வானத்தில் பாம்பை விட்டுவிடும்.*
*அப்போது பாம்பால் தாக்குபிடிக்க முடியாது. பலவீனமான களமாக அது மாறிவிடும். நிலமாக இருந்தால், பாம்பின் எதிர்ப்பு குணம் தீவிரமாக இருக்கும். வானத்தில் அது சாத்தியப்படாது. அதுபோல எதிராளியை நமக்கான களத்துக்கு கொண்டு சென்றுவிட்டால் நாம் தான் பலசாலி.*
*இது போல் நம்முடைய பயிற்சிகள், உழைப்பு, முயற்சிகள் மூலம் பிரபஞ்சத்தின் சக்திக்கு நாம் பாத்திரமாகிவிட்டால், நமது தளம் பலமாகிவிடும். நம்மை எதிர்க்கும் எந்த சக்தியையும், இந்த பிரபஞ்சத்தின் பேரியக்க சக்தி பார்த்துக் கொள்ளும். தளம் உங்களுடையதாகி விட்டால், வெற்றி எப்போதும் நம் பக்கம் தான்....*
- அனுபவ துளிகள்.......