🌹அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் ஆழ்ந்த கருணைக்கு நன்றி 🙇
🌹தினம் ஒரு திருத்தலம்.. பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் பூக்கும் பாதிரிமரம்.. நடனமாடும் தட்சிணாமூர்த்தி..!!*🌹
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில்...!!
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி என்னும் ஊரில் அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருப்பூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அவிநாசி என்னும் ஊர் உள்ளது. அவிநாசியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தின் தலவிருட்சமான பாதிரிமரம், இத்தலத்தின் பிரம்மோற்சவ காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில் பூக்காமல் இருப்பது அதிசயமாகும்.
உட்பிரகாரத்தில் கன்னி கணபதியும், வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சன்னதியும், வடகிழக்கில் காரைக்கால் அம்மையார் சன்னதியும் உள்ளன. மேலும் 63 நாயன்மார்கள் சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு, பிரம்மா, விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
இத்தல சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக இடது காலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலது கையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.
வேறென்ன சிறப்பு?
இக்கோயிலில் தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் காட்சி தருகின்றனர்.
சிவனுக்கும், அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரம் அமைந்துள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி காட்சி தருகிறார்.
சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருளுவதால் இத்தலம் சோமாஸ்கந்த வடிவிலானது.
சிவனுக்கு எதிரில் உள்ள ராஜகோபுரத்தின் தென்திசையில் தட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள நர்த்தன கணபதிக்கு முன்னால் சிம்ம வாகனம் உள்ளது.
இத்தல பைரவர் 'ஆகாச காசிகா புரததனாத பைரவர்' எனப்படுகிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சித்திரையில் பிரம்மோற்சவம், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா ஆகியவை இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பிறவாத்தன்மை மற்றும் அழியாப்புகழ் கிடைக்கவும், சனிதோஷம், எதிரி பயம் மற்றும் வழக்கு விவகாரம் நீங்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பைரவருக்கு வடைமாலை சாற்றியும், தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காய் ஆகியவற்றில் குங்குமம் தடவி விளக்கேற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
சிவாய நம🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே
அகிலம் காக்கும் அண்ணாமலையார் திருவடியை அன்புடன் வணங்குகிறேன்
உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை இனிய சிவனாரின் ஆசியுடன் இனிய சிவ காலை வணக்கங்கள்
அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி🦜 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🪔திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது💫


