ShareChat
click to see wallet page
search
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 🔴 JikunaNews LIVE – ரிப்போர்டர் பிரகாஷ் வழங்கும் செய்தி 🔴 தஞ்சாவூர் மாணவி தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி — மூன்று தங்கப்பதக்கங்கள் கைப்பற்றி மாநிலத்தை கவர்ந்த சாதனை! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்ற 16ஆம் மாநில அளவிலான உறைவாள் சண்டை போட்டி உற்சாகமாக நடைபெற்றது. தமிழகத்தின் 24 மாவட்டங்களைச் சேர்ந்த 11, 14, 18 வயது பிரிவுகளிலான 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை தமிழ்நாடு உறைவாள் சங்க தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் சையது முகமது பிலால் தலைமையேற்றார். நிர்வாக அலுவலர் எஸ்.செல்வம் மற்றும் முன்னாள் பொருளாளர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலைகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆந்திர மாநில தலைவர் இஸ்மாயில், 64 தீர்த்தகிரி மடாதிபதி பசுமை சித்தர், வீரப்பன் செங்கோட்டையன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இந்நிலையில் தஞ்சாவூரின் சூரக்கோட்டையைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி எஸ். தர்ஷினி, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உறைவாள் கட்டா குரூப் கட்டா சண்டை எனும் மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்கப்பதக்கங்களும், கோப்பையும், சான்றிதழும் பெற்றுள்ளார். தொடர்ந்து வருகிற ஜனவரி 5, 6, 7 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டிக்குத் தர்ஷினி தகுதி பெற்றுள்ளார். இது தஞ்சாவூரின் பெருமையை உயர்த்திய மற்றொரு பொன்மொழியாக அமைந்துள்ளது.
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - IKUNA NEWS தஞ்சாவூர் மாணவி தர்ஷினிக்கு மூன்று தங்கம்!     ٧٥٢؟٨٥٥٥٥٨٧ Jdu RIRROLTEIT $IIIE உறைவாள் கட்டா BLLIT குரூப் 8600160L மூன்று பிரிவுகளிலும்  முதலிடம் மூன்று தங்கப்பதக்கங்கள், கோப்பை, சான்றிதழ் வென்றார்  Reporter: Prokosh IKUNA NEWS தஞ்சாவூர் மாணவி தர்ஷினிக்கு மூன்று தங்கம்!     ٧٥٢؟٨٥٥٥٥٨٧ Jdu RIRROLTEIT $IIIE உறைவாள் கட்டா BLLIT குரூப் 8600160L மூன்று பிரிவுகளிலும்  முதலிடம் மூன்று தங்கப்பதக்கங்கள், கோப்பை, சான்றிதழ் வென்றார்  Reporter: Prokosh - ShareChat