பிரபல தொலைக்காட்சி நடிகை சாந்தினி பிரகாஷ் அவர்களின் பிறந்தநாள் இன்று!
சாந்தினி பிரகாஷ், சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் வில்லியாகத்தான் இவர் அதிகமாக நடித்து இருக்கிறார்.சன் டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற 'வானத்தைப்போல' சீரியலில் நடித்ததன் மூலம் இவர் கவனம் பெற்றார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் சுகன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சிங்கிள் பசங்க' என்ற ரியாலிட்டி ஷோவில், கூமாம்பட்டி தங்கப்பாண்டிக்கு ஜோடியாகக் கலந்து கொண்டு, நகைச்சுவை மற்றும் இயல்பான பேச்சு மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.
நடிகை சாந்தினி பிரகாஷ், டார்லிங் டார்லிங், சின்ன பாப்பா பெரிய பாப்பா, சுமங்கலி, பூவே பூச்சூடவா, வானதைப்போல, அபி தையல்காரர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில், கூமாபட்டி தங்கபாண்டியுடன் இணைந்து ஆட்டம் போட்டு வருகிறார்.
அண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சூர்யவம்சம் படத்தில் வரும் 'சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு' என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருந்தனர். சிம்புவின் தீவிர ரசிகையான சாந்தினி பிரகாஷ், அந்த நிகழ்ச்சியில், சிம்புவை திருமணம் செய்ய எனக்கு ஆசையாக இருக்கிறது என்று தனது விருப்பத்தை டி.ராஜேந்தர் முன்னிலையிலேயே வெளிப்படுத்தினார்.
தன் மீதும், தனது திறமை மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்து, பல வலிகளை கடந்து இன்று அனைவருக்கும் தெரியும் ஒரு நடிகையாக சாந்தினி பிரகாஷ் மாறியுள்ளார்.
இந்த பிறந்தநாளில் இவர் மேலும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற வாழ்த்துவோம்!
#இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


