ShareChat
click to see wallet page
search
அபிராமியை வணங்கினால் எல்லாம் கிடைக்கும் ஆனால் இரண்டு விஷயம் .கிடைக்காமல் போகும். அபிராமியை வணங்காதவர்களுக்கு கிடைக்கும், ஆனால் அவளை வணங்குபவர்களுக்கு கிடைக்காது. அவை என்ன ? ஒன்று, மறு பிறவி இரண்டு, இன்னொரு தாயார் மீண்டும் பிற்பதாய் இருந்தால் தானே இன்னொரு தாய் வேண்டும். மறு பிறவியே இல்லை என்றால் எதற்கு இன்னொரு தாய் ? தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும் பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே பெரிய மலைகளையும், பொங்கும் கடலையும், பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்தவளும், மணம் வீசும் மலர்களைத் தன் கூந்தலில் அணிந்தவளுமான அபிராமியின் திருமேனியை எண்ணித் தியானித்திருக்கும் அன்பர்கள், கற்பக மரத்தின் நிழலிலே தங்குவார்கள். மீண்டும் பிறப்பற்ற நிலை எய்துவார்கள். அன்னையை எண்ணி வணங்குவோர் வேறெந்த போகத்தையும் விரும்புவதில்லை எனவுரைத்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், அன்னையின் திருவுருவை எண்ணித் தியானிப்போருக்கு நினைப்பதையெல்லாம் உடனே வழங்கும் கற்பக மரத்தின் நிழலில் தங்கும் பேறு கிட்டும் என்று உரைக்கின்றார். அன்னையின் அருள் அத்தகையது. "மால் வரையும்" பெரிய மலைகளையும், " பொங்கு உவர் ஆழியும் " உவர்ப்புச் சுவை நீரைக் கொண்ட அலை பொங்கும் கடல்களையும், "ஈரேழ் புவனமும்" பதினான்கு உலகங்களையும் "பூத்த" பெற்றெடுத்த "உந்திக்" வயிற்றினையுடையவளும், "கொங்கு இவர் பூங்குழலாள்" மணம் வீசும் மலர்களைத் தனது கூந்தலிலே சூடியவளுமான அபிராமி அன்னையின் "திருமேனி குறித்தவரே" திருமேனியை எண்ணித் தவமியற்றுபவர்கள்... தியானித்திருப்பவர்கள்... "தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்" நினைத்ததை நினைத்த பொழுதிலேயே வழங்கிடும் கற்பக மரத்தின் நிழலிலே தங்கும் பேற்றினைப் பெறுவார்கள்.. "தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை" தங்களுக்கு மறு பிறப்பின்றி.... மீண்டும் பெற்றெடுக்க ஒரு தாய் இல்லாது... இருப்பார்கள்.. அவர்களுக்கு மீண்டும் பிறவி வாய்க்காது.... எல்லாம் கிடைக்கும் என்றால், என்ன எல்லாம் கிடைக்கும் ? ரொம்ப ஒண்ணும் இல்லை - கற்பக மரத்தின் நிழலில் தங்கும் நிலை கிடைக்கும். கற்பக மரம் நினைப்பதை எல்லாம் தரும். எனவே, கற்பக மரத்தின் நிழலில் தங்குவது என்றால் நினைப்பது எல்லாம் நடக்கும். சரி,அந்த கற்பக மரத்தின் நிழலில் எவ்வளவு நாள் தங்குவது ? ஏதோ கொஞ்ச காலம் தங்கி பின் அங்கிருந்து போய் விட வேண்டுமா ? கற்பக மரம் வானுலகில் இருக்கிறது.அங்கு போன பின், மீண்டும் பிறவியே கிடையாது . நிரந்தரமாய் அங்கேயே இருக்க வேண்டியதுதான். மறு பிறவியும் கிடையாது, இன்னொரு தாயாரும் கிடையாது. யாருக்குக் கிடைக்கும் ? அபிராமிக்கு பூஜை பண்ணுபவர்களுக்கா ? அவளை போற்றி பாடுபவர்களுக்கா ? இல்லை. பின் ? கூந்தலில் நிறைய பூக்களை சூடியிருக்கும் அபிராமியின் அழகை மனதில் நினைத்துப் பார்பவர்களுக்கு, அது எல்லாம் கிடைக்கும். சும்மா, அந்த வடிவழகை நினைத்துக் கொண்டே இருந்தால் போதும்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம் #✡️ஜோதிட பரிகாரங்கள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - Vivo VIIPrO Al Dual Camera திருக்கடவூர் அபிராமி அம்மன் Vivo VIIPrO Al Dual Camera திருக்கடவூர் அபிராமி அம்மன் - ShareChat