ShareChat
click to see wallet page
search
நேற்று முழுவதும் வெள்ள பாதிப்புகளை கணக்கிட விவசாய அணி சார்பில் 21 பேர் கொண்ட குழுவாக கீழ தஞ்சை மாவட்டங்கள் முழவதும் சென்றோம். பல சோகக்கதைகளும் சிறு சிறு வடிகால்கள் தூர்வாராத காரணத்தால் எத்தனை ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வைத்து ஒரு பெரிய படமே எடுக்கலாம். அவ்வளவு இருக்கு சொல்ல. படத்தில் இருக்கும் பயிர் 125 நாட்களான CR1009 வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய இரகம் தான். அதுவே அழுகிவிட்டது என்றால் மற்ற பயிர்களை பற்றி சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன. இவ்வளவையும் கண்டு கேட்டு இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன் ஆனால் தூக்கம் என்பது இப்போது வரை வரவில்லை. கண்ட காட்சிகள் இப்போதும் கண்ணில் நிற்கிறது. நிஜமான புயல் தாக்கிய பகுதிகளை விட்டுவிட்டு சென்னை மழையை காரணமாக வைத்து அரசு இயந்திரம் சென்னையிலயே படுத்துக்கொண்டது கூடுதல் வேதனை. எந்த கட்சியின் அரசாங்கமாக இருந்தாலும் சரி வடிகால் நீங்க நிவாரணமாக கொடுக்கும் காசைவிட மிக குறைவான தொகைதான் இந்த வாய்க்காலையும் வடிகாலையும் சுத்தம் செய்ய செலவாகும். தயவு செய்து அதை செய்யுங்க என்பதுதான் அந்த பகுதி மக்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு..... கீழையூர் முதல் கரும்பம்புலம் வரை ஒரு சோக்க்கதை இருக்கு அதை தனியாக பேசுவோம்.... வேதனையுடன் கணேசமூர்த்தி முத்துசாமி @highlight #@அமானுஷ்யம்@( HORROR ) #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢
@அமானுஷ்யம்@( HORROR ) - ShareChat