ShareChat
click to see wallet page
search
வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்ககூடும் எனவும் இதன் காரணமாக வரும் நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. குறிப்பாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருவாரூர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. மேலும், நாளை (22.11.2025) சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இ #வடகிழக்கு பருவமழை தீவிரம் 🌧️ #🔴இன்றைய முக்கிய செய்திகள் #வங்கக்கடலில் புதிய புயல் #புதிய புயல் கனமழை எச்சரிக்கை ருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நவம்பர் மாதத்தில் புள்ளி விவர கணக்கின் வடகிழக்கு பருவமழை அளவு இயல்பை விட குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் 🌧️ - பருவமழை அலெர்ட். சென்னை மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை. வானிலை மையம் தகவல் Tamil Nadul Rains பருவமழை அலெர்ட். சென்னை மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை. வானிலை மையம் தகவல் Tamil Nadul Rains - ShareChat