*சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி*
#ஓம்_நமோ_பகவதே_மகாசுதர்சனாய_நம
என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
#சக்கரத்தாழ்வார்_எதிரிக்குஎதிரி
சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.
மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.
கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.
பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.
#பக்தர்களுக்கு_சந்தோஷம்தருபவர்
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.
சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும். சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர். `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.
#நன்மைகள்கிடைக்க_சக்கரத்தாழ்வார்
தெய்வங்களில் சிறப்புடைய தெய்வம் மகாவிஷ்ணு. அவர் ஸ்ரீமன் நாராயணன் ஆவார்.உலகம் அனைத்தையும் படைத்து காத்து தன்பால் அடக்கி கொள்ளவும் ஆற்றல் படைத்தவர் மகாவிஷ்னு. அவரின் பெருமையை 18 புராணங்களிலும் சிறக்கப்பேசுகின்றார்கள். மகாவிஷ்னுக்கு சிறந்த ஆயுதங்களாக போற்றப்படுபவை 5 ஆயுதங்களாகும். அவை சங்கு, சக்கரம், கெதை, வில், கத்தி இவற்றை #ஐம்படை என்று கூறுவார்கள்.
#படை_என்றசொல்லுக்குஆயுதம்_என்று பொருள். இந்த ஐந்தாம் படையை கொண்டு பகவான் ஸ்ரீமன் நாராயணன் தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றிவருகிறார் இந்த ஐந்து ஆயுதங்களில் சிறப்புடையது சக்கரமாகும். இந்த #சக்கரத்திற்குஆழ்வார்என்றுஅடைமொழி சேர்த்து சக்கரத்தாழ்வார் என்று வைணவம் சிறப்பித்து பேசுகிறது.
சக்கரத்தாழ்வாருக்கு #சுதர்ஷனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்த சுதர்ஷனனை பற்றி சுதர்ஷன சதகம் என்று 100 பாடல்கள் அடங்கிய ஒரு நூல் ஒரு பெரியவரால் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் சக்கரத்தாழ்வாரின் பெருமையை அப்பெரியவர் பல சான்றுகளுடன் விளக்கியும் கூறியுள்ளார் அந்த நூலை நாம் தினந்தோறும் படித்தால் குறைகள் எல்லாம் நீங்கும்.
நன்மைகள் பல உண்டாகும் என்றும் அப்பெரியவர் கூறியுள்ளார். கஜேந்திர மோட்சம், அம்பரிகன் வரலாறு, ஆகியவை எல்லாம் சக்கரத்தாழ்வாரின் பெருமையையும் ஏகாதசி விரதத்தின் உயர்வையும் கூறுகின்றன. அந்த சுதர்ஷன சதகம் அதுபோன்ற #சுதர்ஷன_சதகநாமம் ஆகிய நூல்களை நாமும் பாராயணம் செய்தோமானால் நலம் பல பெறலாம். குறைகள் நீங்கும். கிரக தோஷம் விடுபடும்.
ஆகவே ஆழ்வார்கள் பண்ணிரென்டு பேர்களும் மிகவும் போற்றி புகழப்பெற்ற சக்கரத்தாழ்வாரின் பெருமையை கோதை நாச்சியார் (ஆண்டாள்) ஆழிமழை கண்ணா என்கின்ற திருப்பாவை பாடல்கள் மூலமாக சிறப்பித்து பாடியுள்ளார். தமிழில் அமைந்த 'ழ' என்ற எழுத்தின் பெருமையை இந்த பாடல்கள் மூலமாக சிறப்பித்து பேசியுள்ளார்கள்.
ஆகவே ஆழிமழை கண்ணா என்ற பாசுரத்தை நாமும் பாராயணம் செய்வோமானால் நாட்டில் மழை பொழியும், வளம் பெருகும், தீமைகள் அகலும் மேன்மேலும் நன்மைகள் உண்டாகும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வார் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருமக்கோட்டை ஊராட்சி, மகாராஜபுரம் கிராமத் தில் அமைந்துள்ளது.
ஸ்ரீரெங்கநாயகி சமேத அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் தென்மேற்கில் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் தனி சன்னதியாக அருள்பாலித்து வருகிறார். கிழக்கு முகமாக சக்கரத்தாழ்வாரும், மேற்கு முகமாக யோக நரசிம்மரும் ஒரே கல்லில் அமைந்துள்ளது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.
இப்படியொரு சிறப்பிற்குரிய சக்கரத்தாழ்வாரை நாமும் வழிபடுவோம்... #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏🏼ஐயப்பன் கதைகள் #✡️கார்த்திகை மாத விரதம்🙏


