ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி மண்டலம், வேப்பகுண்டா, அப்பன்னபாலத்தில் உள்ள வர்ஷினி அடுக்குமாடி குடியிருப்பில் சுப்பிரமணியம், அவரது மனைவி லலிதா தேவி (30), மகன் ஈஸ்வரசந்திரா (10), மகள் ஸ்ரீநயனா (8), மற்றும் தாய் கனக மகாலட்சுமி (63) ஆகியோர் வசித்து வருகின்றனர். சுப்பிரமணியம் கோயிலில் பூசாரியாக பணிக்கு சென்று தனது குடும்பத்தை நடத்தி வருகிறார் . வெள்ளிக்கிழமை இரவு கோயில் பணிகளுக்காக வெளியே சென்றபோது, பக்கத்து குடியிருப்பில் உள்ளவர்கள் சுப்பிரமணியத்திற்கு போன் செய்து உங்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாய் கனக மகாலட்சுமி இறந்துவிட்டார். அவரது மகள் காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்த சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார். வீட்டில் எவ்வாறு தீ பிடித்தது என்று விசாரித்தபோது டிவி.யில் திடிரென மின்கசிவு ஏற்பட்டு வெடித்து தீ பிடித்ததாக லலிதா தேவி கூறினார். ஆனால் மின்கசிவுக்கான எந்தவித தடயமும் இல்லாமல் பெட்ரோல் வாசனை வீசியதால் இது விபத்து இல்லை என்று சந்தேகமடைந்த போலீசார் லலிதா தேவியின் செல்போன் பெற்று ஆய்வு செய்தனர். அதில் யூடியூப்பில் அவர் பார்த்த வீடியோக்களில் பெரும்பாலும் "ஒரு கொலையை எப்படி விபத்தாக மாற்ற முடியும்?" போன்ற வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில், சுப்பிரமணியம் தனது மனைவியின் நடத்தை குறித்த தனது சந்தேகங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் லலிதா தேவியை தங்கள் பாணியில் விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தான் மீது தனது மாமியார் எப்போது பார்த்தாலும் தகாத வார்த்தைகளாலும், எப்போதும் அவமானப்படுத்தி வந்ததால அவரை கொலை செய்ததாக கூறினார். இதற்காக பிள்ளைகளுடன் திருடன் போலீஸ் விளையாடலாம என்று கூறி தனது மாமியாரைக் கொல்ல முன்பே திட்டத்தின்படி, ஒரு பெட்ரோல் பங்க்கில் பாடிட்லில் வாங்கி வந்த பெட்ரோலை வீட்டில் மறைத்து வைத்ததாகவும் வெள்ளிக்கிழமை, தனது கணவர் வெளியே சென்ற பிறகு, தனது மாமியாரிடம் குழந்தைகளுடன் திருடன் போலீஸ் விளையாடச் சொல்லி விளையாட்டின் ஒரு பகுதியாக, பிள்ளைகளை வேறொரு அறையில் ஒளிந்திருந்தபோது, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தனது மாமியாரை ஒரு பருத்தி துணியால் கண்களைக் கட்டி, பின்னர் கை, கால்களையும் கயிறுகளால் கட்டினார்.
அதன்பிறகு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது மாமியார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ சில நொடிகளில் பரவி கனகமஹாலட்சுமி உயிருடன் எரிந்தார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மகள் ஸ்ரீநயனா தீயில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை ஒரு விபத்தாக சித்தரிக்க, லலிதா தேவி வீட்டிலிருந்து வெளியே வந்து டிவி வெடித்து தீ பிடித்ததாக பலத்த சத்தம் எழுப்பி கத்தி அக்கம்பக்கத்தினரிடம் உதவி செய்யுமாறு கெஞ்சினார். அவர்கள் வந்து பார்த்து அது தீ விபத்து என்று நினைத்து, சுப்பிரமணியத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். சுப்பிரமணியத்தின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து லலிதா தேவியை கைது செய்ததாக விசாகப்பட்டினம் உதவி காவல் ஆணையர் பிருத்வி தேஜா மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் தெரிவித்தனர். #😱யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்📱 #🔴இன்றைய முக்கிய செய்திகள்


