ஒன்றிய அரசின் 'ஜிஎஸ்டி குறைப்பு நாடகம்'
கடந்த 8 ஆண்டுகளில், மக்கள் மீது ரூபாய் 55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி சுமத்தப்பட்டது!
அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், உடுத்தும் உடை, பாத்திரம், உணவு, விவசாயம், காப்பீடு – எதையும் விடவில்லை.
இப்போது 8 ஆண்டுகள் கழித்து ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியைக் குறைத்ததாக பெருமை ஒன்றிய அரசு பேசுகின்றது.
இதனால், 144 கோடி இந்தியர்களுக்கு கிடைப்பது – ஒருவருக்கு ரூபாய் 57 மட்டுமே!
அதிலும் வியப்பு என்னவென்றால், இந்த ரூபாய் 2.5 லட்சம் கோடி சலுகையும் ஒன்றிய அரசு மக்களுக்கு கொடுப்பதல்ல. இது மாநிலங்களின் வரி பங்கு. அதை குறைத்துவிட்டு, பாராட்டை ஒன்றிய அரசு பெற்றுக்கொள்கிறது.
'மாநிலங்கள் வரி செலுத்துகிறது. ஒன்றிய அரசு புகழடைகிறது. மார்க்கெட்டிங் செய்வதில் ஒன்றிய அரசு வல்லவர்கள்!
ஒன்றிய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்ற போலி நாடகத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #🔷ராகுல் காந்தி #தேசிய செய்திகள்