தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
BREAKING: மீண்டும் வெளுத்து வாங்க போகும் மழை! தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
பள்ளி விடுமுறை அறிவிப்பு எப்போது?
மழை தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாளைய பள்ளி விடுமுறை தொடர்பான முடிவு அதிகாலை வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது. மழைப்பொழிவு நிலவரத்தைப் பொறுத்தே விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் இந்த பருவமழை அடுத்த சில நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிலவரத்தை கவனித்துப் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள் #🔴எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு🌧️


