சுற்றி வளைத்து கரை ஏற விடாமல் அடித்தனர். அடிப்படை உரிமைக்காக போராடிய மக்களிடம் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடியில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து ஓடிய மக்ககளை கண்ணீர் புகை குண்டுகள் கொண்டும் காவல்துறை தாக்குதலில் ஈடுபட்டது. அடித்து ரத்தக் காயங்களுடன் உடல்களை ஆற்றில் வீசியது.
13/nஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ் அவன் தாய் ரத்னமேரி, ஜோஸ்பின், ஷாநவாஸ், ஆறுமுகம், ரத்தினம், ஜெயசீலன், குட்டி (குமார்), ஜான் பூபாலராயர், இன்னாசி மாணிக்கம், ஆண்டணி, சஞ்சீவி, ராஜு, முருகன், வேலாயுதம், கெய்சர், அப்துல் ரஹ்மான் ஆகிய 17 பேரை காவல்துறைக் கொடூரமாகக் கொலை செய்தது.
14/nபெண்களின் ஆடைகளை உருவி அவமானப்படுத்தியது. மேலும் அடிபட்டு அருகில் இருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையும் வீடு புகுந்து தாக்கியது. கிராமத்து மக்கள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக இரத்தக் காயத்தோடு கரையொதுங்கிய உடலுக்கு பொய்க் கதையை போலீசார் ஜோடித்தனர்.
15/nபிரேதப் பரிசோதனையிலும் மக்கள் நீரில் மூழ்கி இறந்ததாக மருத்துவர்கள் சான்று வழங்கினர். இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்த மக்கள் மறுபரிசோதனை செய்யக் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு, 5 நாட்கள் கழித்து வெவ்வேறு இடத்தில் அரசே பிணங்களை புதைத்தது. யாரை எங்கு புதைத்தோம் என்று
16/n
##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு


