ShareChat
click to see wallet page
search
நாக சதுர்த்தி - கருடபஞ்சமி: இரட்டை விரதங்கள் நாக சதுர்த்தி மற்றும் கருடபஞ்சமி ஆகிய இரண்டும், அடுத்தடுத்து வரும் இரட்டை விரதங்கள் ஆகும். ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்கும் முதல் பண்டிகை இது. தக்ஷிணாயன புண்ணியகாலம் (ஆடி முதல் - மார்கழி) வரை இறை வழிபாட்டிற்கு உகந்த காலம். நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி நாகசதுர்த்தியன்று நோன்பிருந்து , புற்றுக்கு பால் வார்த்து பின் வீட்டில் 7 முடி போட்ட நோன்புக் கயிறு அணிந்து பூஜை செய்து கணவருக்காக வேண்டிக்கொள்வர். மறுநாளும் புற்றுக்குச் சென்று பால்வார்த்த பின் புற்று மண் எடுத்து வந்து சகோதரரின் வலது காதில் வைப்பார்கள். இதனால் சகோதர ஒற்றுமை உண்டாகும். கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் நாகசதுர்த்தி அன்றும், சகோதரர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் தீர்க்காயுளுக்காகவும் கருடபஞ்சமி அன்றும் விரதம் இருந்து பிரார்த்திப்போம். ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும். ஆடி மாதம் வளர் பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும். ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது . பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம். இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும் போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.. நாக பஞ்சமி அன்று சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சித்து, பால் பாயசம் நிவேதனம் செய்வது வழக்கம். இப்பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. ஆடி மாதம் என்றால் தெய்வ வழிபாடு அமர்க்களமாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் அமோகமாக நடைபெறும். நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம். வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் குறை இருக்காது. வீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது நாககோலம் நாக தோஷத்திற்கு நிவர்த்தி தரும் என சொல்கிறது சாஸ்திரம். அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாக சதுர்த்தி கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி நாளாகும். இந்நாளைப் பற்றி சதுர்வாக சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர். ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். இந்தநாளில் விரதமிருந்து நாகப் பிரதிகளுக்கு பூசை செய்கின்றனர். இந்த விரதத்தினை நாகசதுர்த்தி விரதம் என்கின்றனர். ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதிமூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும். வசதி படைத்தோர் கீழ் கண்ட திருத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவதால் இராகு, கேதுவால், ஏற்படும் நாக தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம் ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளஹஸ்தி திருவேற்க்காடு கருமாரியம்மன் பேரையூர் நாக நாதர் தானே வளர்ந்த புற்றுள்ள திருக்கோயிலுக்கு சென்று வணங்கி வருவது, நாக தோஷங்களை நீக்கும். பரிகாரமாகும். #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🙏🏼ஓம் நமசிவாய #🐍 நாக தேவி கோயில்கள் & சிறப்புகள் 🛕✨ #🎶நாக பஞ்சமி சிறப்பு சிவ பஜனைகள்🔔 #🐍இனிய நாக பஞ்சமி நல்வாழ்த்துகள்🌼
🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 - '36d 1u16.6601 001 ಯ TE 02 lo8 '36d 1u16.6601 001 ಯ TE 02 lo8 - ShareChat