‘பெதெரேவ் அணுசக்தி நிலையத்தைத் துடைத்து அழித்துவிட்டோம்(Obiliterate)’ என டிரம்ப் அறிக்கை வெளியிட்டார். இரண்டு நாட்களாக இஸ்ரேல் அதே பெதெரேவ் அணுசக்தி நிலையத்தின் மீது மறுபடி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களாக சேதம் எவ்வளவு என்று மதிப்பிட முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டிருந்த அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர், இன்று ‘ஈரான் தனது அணுசக்தி சேமிப்புகளை வேறு இடத்திற்கு மாற்றியிருப்பதைக் கண்டிக்கிறோம்’ என்கிறார். ‘தனக்கு என்ன வேண்டுமோ அதனை அடைய ஈரானுக்கு உரிமை உண்டு’ எனப் புதின் தெரிவித்திருக்கிறார். ரஸ்யப் பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவர் திமித்ரி மெட்வடோவ் ‘நேரடியாகவே சில நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் தரத் தயாராக இருப்பதாக’ அவரது உரையாடலில் தெரிவித்திருப்பதாக ‘பாலஸ்டைன் குரோனிக்கல்’ கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #geopolitics #🚨கற்றது அரசியல் ✌️ #iran & us war / ஈரான் & அமெரிக்க போர்