ShareChat
click to see wallet page
search
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #விபூதி பலன்கள்.. என்பது? *விபூதி என்ற பெயரிலேயே* அதனுடைய சிறப்பு விளங்குகின்றது. "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் செல்வம் என்று பொருள். எனவே முத்திப்பேறு ஆகிய மேலான செல்வத்தைத் தருவது விபூதி. அதேபோல் "திரு" என்றால் தெய்வத்தன்மை. "நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள். அதாவது ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வது எனப் பொருள். எனவே எமது வினைகளை வேரறுத்து எம்மை தெய்வத்துடன் இணைக்கும் சாதனமே திருநீறு என்று பொருள் கொள்ளப்படும். வடமொழியில் விபூதிக்கு பசிதம். பசுமம், சாரம். இரட்சை என்ற பெயர்களும் உண்டு. உயிரை வருத்தும் எல்லாப் பாவங்களையும் போக்குதலால் LIBYLDED எனவும். உள்ளத்தில் காணப்படும் அழுக்குகளையும் அறியாமையையும் நீர் போன்று கழுவித் தூ ய்தாக்குவதாலும் சிவஞானமாகிய சிவதத்துவத்தை விளக்கி பிரகாசிக்க வைத்தலாலும் பசிதம் எனவும் கூறப்படும். ஆன்மாக்களின் மலமாசினைக் கழுவி ஆபத்தைப் போக்கலால் சாரம் எனவும் கூறப்படும். யுத்த களத்திலே பகைவருடைய கணைகளிலிருந்து தம்மை பாதுகாப்பதற்காக வீரர்கள் கவசம் அணிவார்கள். அதுபோல் பூதம், பேய், பிசாசு, பகைவர் மூலம் துன்பம் நேராவண்ணம் அணியும் கவசம் போல் இருந்து காத்தலால் இரட்சை எனவும் கூறப்படுகின்றது. நீட ஜறுந்தி வினையனைத்து நீற்றி விடலா னீஹன்றும் வீடில் வெறுக்கை தருதலினால் வியூதி யென்றும் மூயிர்தோறுங் கூடு மலமா சினைக்கழுவுங் குணத்தாற் சார மென்றுமட மோட வளர்சோ தியைத் தரலாற் பசித மென்று முரைப்பரால் (பேரூர்ப்புராணம்) இந்த உலகிலுள்ள பொருட்களெல்லாம் அழிந்து போகக்கூடியவை. சாம்பலாகிவிடும் தன்மை கொண்டவை. எத்தகையினராக இருந்தாலும், எத்தகைய செல்வம். கல்வி, பதவி, அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார் என்னும் நிலையாமையாகிய உண்மையை உணர்த்தி நாமும் இவ் உண்மைக்கு விதிவிலக்கு அல்ல எனவே தூய்மையாக அறநெறியில் இறை சிந்தனையோடு வாழவேண்டுமென்பதை உணர, உணர்த்துவதற்காகத் திருநீறு அணிவதாகவும் ஒரு கருத்து இருக்கின்றது. நிலையாமையை உணர்ந்தால் ஆணவம் ஒடுங்கும். ஆணவம் நீங்கும் போது கன்மம், மாயை என்ற மலங்களும் நீங்கிவிடும். பின் இறைவனை எளிதில் அடைந்து விடலாம். ஆகவே இறைவன் உயிர்களை அணைத்துக் கொள்வான் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியது திருநீறு, மேலும் ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிப்பதாகவும் கருதப்படுகின்றது. நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது சாம்பலாக மாறிவிடும் அல்லது வேறு பெளதீக இரசாயன மாற்றங்களுக்கு உட்படும். உதாரணமாக பஞ்சையோ, மரக் கட்டையையோ. துணியையோ நெருப்பில் போட்டால் அது சாம்பலாகும். இரும்பைப் போட்டால் அது உருகும். ஆனால் நெருப்பில் திருநீற்றினைப் போட்டால் அது எந்த மாற்றமும் அடையாது திருநீறாகவேதான் இருக்கும். இதேபோல் என்றும் மாறாமல் நிலையாக இருக்கும் பிரம்மதத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்வதாகவும் ஒரு கருத்து இருக்கின்றது. அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன். எங்கும் நிறைந்திருப்பவன். அளவற்ற வல்லமை பெற்றவன் என சைவ சித்தாந்தம் கூறுகின்றது. கண்ணில் தொடர்ந்து படும் பொருள் தான் மனதில் நிலைத்து நிற்கும். கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மனதிலிருந்தும் மறைந்து விடும். எனவே எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சிவன் பற்றிய நினைப்பு எப்போதும் எம் மனதில் இருக்க வேண்டும் என்பதற்காககத் தான் நெற்றியில் திருநீறு பூசப்படுவதாக இன்னொரு கருத்தும் இருக்கின்றது.
பத்திஸ்டேட்ஸ் - ShareChat