
Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
@1457003628
पधारो सा! 2 करोड़ लोगां क परिवार म थांको बहुत बहुत
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள்.
*நீங்களே இயேசுவின் சிநேகிதர்*
எனக்கு அன்பானவர்களே ,
"என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதிமொழிகள் 8:17) என்று கர்த்தர் கூறும் அருமையான வசனத்தை இந்த வேளையில் தியானிப்போம்.
நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் கர்த்தரை தன் முழு இருதயத்தோடும் நேசித்ததை குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான் (ஏசாயா 41:8; 2 நாளாகமம் 20:7; யாக்கோபு 2:23). அன்பு சகோதரரே / சகோதரியே, நீங்கள் தேவனுக்கு சிநேகிதமான முறையில் வாழ்கிறீர்களா? அவரே உங்களுக்கு ஒரே நண்பராக இருக்கிறாரா? ஆண்டவருடனான உங்கள் உறவை இன்று சீர்தூக்கிப் பாருங்கள். உங்களுடைய மற்ற நண்பர்களையும் இயேசுவையும் ஒன்றுபோல் நினைக்காதீர்கள். இயேசுவை, எவ்வகை மனுஷீக அன்போடும் ஒப்பிட இயலாது. அவரே உங்கள் உண்மையான சிறந்த நண்பராவார். தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் இயேசுவை தவிர எனக்கு வேறு தோழியர் கிடையாது. ஆகவேதான் ஆண்டவர் இன்று வரைக்கும் என்னை கிருபையாக ஆசீர்வதித்து வருகிறார். அப்படியே ஆபிரகாமும் கர்த்தரை தேடுவதில் ஜாக்கிரதையாயிருந்தான்; அவரை உண்மையாய் பின்பற்றினான். ஆபிரகாமின் இருதயத்தை தேவன் தமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டார் என்று வேத வசனம் சாட்சி கொடுக்கிறது (நெகேமியா 9:8). "உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்" (நீதிமொழிகள் 12:22) என்றும், "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்" (2 தெசலோனிக்கேயர் 3:3) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
அன்பு சகோதரரே / சகோதரியே, இன்று உங்கள் வாழ்க்கையை சோதித்துப் பாருங்கள். ஆண்டவரை உண்மையாய் தேடுகிறீர்களா? தேவனுடைய வார்த்தையை தவறாமல் வாசிக்கிறீர்களா? ஜெபத்தில் ஆண்டவரிடம் எல்லா உண்மையோடும் பேசுகிறீர்களா? அவருக்கு முன்பாக எல்லா உண்மையோடும் நீதியுள்ள வாழ்க்கை நடத்துகிறீர்களா? இல்லையென்றால், இப்போதே உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு முன்பு சமர்ப்பியுங்கள். உங்கள் குறைகளை மன்னிக்கும்படியும், அவரது உண்மையின்படி உங்களை ஆசீர்வதிக்கும்படியும் கேளுங்கள். அவர் மன்னித்து உங்களை ஆசீர்வதிப்பார்.
ஆமென் அல்லேலூயா!
🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள்.
*இழந்த ஆண்டுகளை தேவன் திரும்ப தருவார்!*
எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு, "நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" (யோவேல் 2:25) என்ற வசனத்தை தியானிப்போம். வெட்டுக்கிளிகள் என்ன செய்யும்? அவை தாவரங்கள், தண்டுகள், கிளைகள், மலர்கள் எல்லாவற்றையும் பட்சித்துப்போடும். ஒன்றையும் விட்டு வைக்காது. அவை, எல்லாவற்றையும் அழிக்கக்கூடியவை. அவ்வண்ணமே, உங்கள் வாழ்க்கையில் எல்லாம் பட்சிக்கப்பட்டுபோனதாக நீங்கள் உணரலாம். ஒரு பிரச்னை அல்ல; பல பிரச்னைகள். உங்கள் பொருளாதாரம், உங்கள் ஆரோக்கியம், உங்கள் வேலை, உங்கள் குடும்ப சமாதானம் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இழந்துவிட்டதுபோன்ற உணர்வு எழும்பும். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கும்; அனுபவிப்பதற்கு எதுவுமே இல்லாததுபோன்று தோன்றும்.
அன்பானவர்களே, தேவன் உங்கள் வாழ்வில் இன்னும் செயல்படவில்லை. எடுக்கப்பட்டவை எல்லாவற்றையும் திரும்ப தருவதாக அவர் கூறுகிறார். நீங்கள், "ஏன் திரும்ப தரவேண்டும்? ஏன் பதிலுக்கு மாற்றாக வைக்கக்கூடாது." என்று வியக்கலாம். தேவன், திரும்ப தரும்போது, இழந்தவற்றை இரட்டிப்பாக தருகிறார். யோபுவைப்போல, அவன் எல்லாவற்றையும், குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும், சொத்துகளையும், கனத்தையும் இழந்தான்; சாம்பல் மட்டுமே இருந்தது. ஆனாலும், அவன் தேவனை இறுகப் பற்றிக்கொண்டபடியால், அவர் எல்லாவற்றையும் இழந்தவற்றையெல்லாம் இரட்டிப்பாகக் கொடுத்தார். அவனுடைய பிந்தைய நாள்கள் ஆரம்ப நாள்களை விட சிறப்பாக இருந்தன. அப்படி திரும்ப தருவதாக தேவன் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.
ஆகவே, இப்போதும் மனந்தளராதீர்கள். வீணாகிப்போன வருஷங்கள், இழந்த எல்லா சமாதானம், நசுக்கப்பட்ட நம்பிக்கை எல்லாவற்றையும் இரட்டிப்பாக தேவன் திரும்ப தருவார். உடைந்துபோன பகுதிகளை அவர் சீர்ப்படுத்துவதோடு, உங்கள் வாழ்க்கையில் நன்மை நிரம்பி வழிந்தோடச் செய்வார். இப்போது ஆண்டவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பின்னாக அவர் இருக்கிறார் என்று விசுவாசியுங்கள். அவர் உங்களை உயர்த்துவார்; ஜெயத்தை தருவார்; வெட்டுக்கிளிகள் பட்சித்தவற்றை திரும்ப தருவார்.ஆமென் அல்லேலூயா!
🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்












