கவிக் குயில்
ShareChat
click to see wallet page
@193036147
193036147
கவிக் குயில்
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🙏சமயபுரம் மாரியம்மன் #திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் கொழு படிக்கட்டுகள்.🙏 #🙏#சமயபுரம் மாரியம்மன்#🙏 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
🙏சமயபுரம் மாரியம்மன் - ShareChat
*நவராத்திரி ஸ்பெஷல்* 🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔴🔴 *திருவேற்காடு கருமாரியம்மன்* *கோயில் பற்றி பார்ப்போம்* *பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில்* *விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன், மிகப்பெரிய புற்றில்* *கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி* *உருமாறி நின்றதும் இங்குதான் அருள்* *பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி* *சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல* *வேண்டிவந்தது அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார்* *அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான்* *சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி* ☄1. அந்தரக்கன்னி, ☄2. ஆகாயக்கன்னி, ☄3.பிரமணக்கன்னி, ☄4. காமாட்சி, ☄5. மீனாட்சி, ☄6.விசாலாட்சி, ☄7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள். *இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள் பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர்* *சக்தியாகிய கருமாரி இரண்டு உருவம்* *கொண்டாள் முதல் உருவம்* *பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது* *கருமாரி மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள் இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார் அப்போது அம்மன்* *அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம்* *கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன்* *கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம்* *எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது* *அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது* *விஷேசம் மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது* *மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது* *இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன கடன் கந்து வட்டி தீர்தல்* *வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில்* *வேண்டிக்கொள்கின்றனர்* *பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி* *முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது* *வழக்கமாக உள்ளது இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்* *பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு* *திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப்* *பற்றி பாடியுள்ளார்,திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான* *வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும்* *அருகிலேயே உள்ளது* *அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது* *அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு* *அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு* *கூரை வேய்ந்த கோவில் அமைத்து முதன் முதலில் கருமாரியம்மனுக்கு உருவமாக* *ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்தவர்* *மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள்* *தற்போது ஒவ்வொரு கருமாரியம்மனின் திருவுருவப் படத்தில் வலது புறத்தில்* *பானையுடன் முகம் அமைய பெற்று மற்றும் வேப்பிலையுடன் காட்சி* *அளிக்கிறதே அதுதான் "கரகம்". இதன்* *பொருள் கருமாரியம்மனின் ஆதி உருவம் "கரகம்" என்பதுதான்* *மாரி என்றால் மழை போன்றவள் கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை* *போன்று அருளை வாரி வழங்கும் அம்மன்* *என்று பொருள்* ☄க - கலைமகள்; ☄ரு - ருத்ரி; ☄மா - திருமகள்; ☄ரி - ரீங்காரி (நாத வடிவானவள்) *என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது* *மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள்* *இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம் டமருகம் கபாலம் ஏந்தி* *காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி* *காட்சி தருகிறாள்* *அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி* *நவகிரகம் சீனிவாச பெருமாள்* *ஆஞ்சநேயர் தட்சிணாமூர்த்தி* *காயத்ரி மஹாலக்ஷ்மி அங்காளம்மன்* *சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி* *எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள்* *இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன* *சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள்* *பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர் தீர்த்தமும் வேப்பிலையும் தீராத* *நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு* *மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும்* *இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள்* *ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன* *திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல் முடிகாணிக்கை, தேர் இழுத்தல்* *குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை* *மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம்*, *பொங்கல் வைத்தல் அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம்* *கண்ணடக்கம் வெள்ளிக்காணிக்கை *செலுத்தபடுகிறது* *ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால் கோபம் கொண்ட சக்தி* *அவனை சபித்து இருளாக்கினாள்* *பின்னர் கோபம் தணிந்த அன்னை* *சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த* *தலத்தில் அமர்ந்து சூரியனின்* *பூஜையைப் பெறுகிறாள் என்று* *வேறொரு வரலாறு கூறுகிறது* *புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு* *கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்* *புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்* *ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வாரங்களும் இங்கு* *அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள் மேலும் தை மாத பிரம்மோற்ஸவம்* *அமாவாசை, சித்ரா பௌர்ணமி* *நவராத்திரி என எல்லா மாதங்களுமே* *அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான்* *காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு* *கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு* *ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே* *விளங்கி வருகிறது* *இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு* *அணையாத விளக்கு அம்மனையும் இந்த* *விளக்கையும் தரிசித்தால்மாங்கல்ய பலம்* *பெறுவார்கள் என்பது ஐதீகம்* *தன்னை நம்பி வரும் பெண்களுக்கு* *மாங்கல்ய வரமளித்து அவர்களை* *சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம்* *காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10* *மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய* *தோஷ பரிகார பூஜை சிறப்பானது* *தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி* *சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை* *அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது, இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது* #ஆன்மீக சிந்தனைகள் ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #பக்தி #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱
ஆன்மீக சிந்தனைகள் - கவலைகஷ்டம் துன்பம் குழப்பம், பகைபிணிவறுமை இவை எல்லாம் இன்று உன்னை விட்டு முதல் விலகி டும் கவலைகஷ்டம் துன்பம் குழப்பம், பகைபிணிவறுமை இவை எல்லாம் இன்று உன்னை விட்டு முதல் விலகி டும் - ShareChat
*புரட்டாசி ஸ்பெஷல்* 🟧🟦🟪🟩🟧🟦🟪🟩🟧🟦🟪🟩🟧🟦🟪🟩🟧🟦🟪🟩🟧🟦 🌹⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️🌹 ⭐#திருப்பதி_ஸ்ரீநிவாசன் - 🍎 #அபூர்வ_ஆன்மீகதகவல்கள் 🍎 🌺 ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் பரம பவித்ரமான அவதாரமாக கருதப்படுவது #ஸ்ரீவேங்கடேசஅவதாரம்தான். ஸ்ரீ ராமாவதாரத்திற்கு பிறகு முழு மனித அவதாரம்தான் ஸ்ரீ வேங்கடேச அவதாரம். ஏனென்றால் லோகக்ஷேமத்திற்காக கலியின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றி பகவத் சிந்தனையில் நிலைத்திருக்க அவர் குடி கொண்டுள்ள இடம் ஆந்திரா மாவட்டத்தில் உள்ள திருப்பதி. கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் திருமலைவாசன் ஒருவன் தான். ⭕பாரதத்தில் உள்ள #அஷ்டபுண்ணிய_ஸ்வயம்வக்த_க்ஷேத்ரங்களில் திருப்பதியும் ஒன்று. 🌕 புரந்தரதாசர் பூலோக வைகுண்டம் என்று "வேங்கடாசல நிலயம் வைகுண்ட புரவாசம்" என்று திருப்பதியை புகழ்கிறார். 🌳 நமது புராணத்தில் எத்துணை இறைவன் இருப்பினும் ஒவ்வொரு இல்லத்திலும் வழி வழியாக குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். பெரும்பாலான குடும்பத்திற்கு திருப்பதி ஏழுமலையான்தான் குலதெய்வமாக இருப்பார். இவ்வளவு ஏன் குலதெய்வம் அறியாதவர்கள் ஸ்ரீ வேங்கடாசலபதியை குலதெய்வமாக வரிப்பர். வேறு எந்த இறைவனுக்கும் இல்லாதே ஒரே தனிச்சிறப்பு இவருக்கு மட்டும்தான். 🌲 "ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாஸுதேவ வைகுண்ட மாதவ ஜநார்த்தன சக்ரபாணே! ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணாகத பாரிஜாத ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம்!!" திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என்னும் வழக்கம் உண்டு. எப்பேர்ப்பட்ட நெருக்கடி இருப்பினும், பிரச்னைகளிருப்பினும் ஒருமுறை திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் ஒருவித மனநிறைவு மற்றும் அனைத்து வேண்டுதல்களும் உடனே நிறைவேறும். ஸ்ரீ வேங்கடவனின் ஆகர்ஷ சக்தி வேறு எந்த அர்ச்சாவதார மூர்த்திக்கும் இந்த கலியுகத்தில் இல்லை. விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச !! வ்யாஸர் அருளிய பதினெட்டு புராணங்களில் 12 புராணங்கள் ஸ்ரீநிவாஸனின் மகிமைகளை சொல்லுகின்றன. 🍒ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு திருநாமங்களினால் அழைக்கப்படுகிறது. 🌕 #கிருதயுகத்தில்_வ்ருஷபாசலம், ⭕ #த்ரேதாயுகத்தில்_அஞ்ஜனாசலம், 🌞 #துவாபரயுகத்தில்_சேஷாசலம், 🍎 #கலியுகத்தில்_வேங்கடாசலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது தவிர 🌹 கனகாசலம், 🌹 சிம்ஹாசலம், 🍎 ஆனந்தகிரி, 🍎 நாராயணாத்ரி, 🍎 வேங்கடாத்ரி என்று அநேக நாமங்களில் திருப்பதி அழைக்கப்படுகிறது. 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊 🌺 வராஹ அவதாரம் முடிந்த பின் ஸ்ரீமன் நாராயணன் திருமலையை தன்னுடைய இருப்பிடமாக தேர்ந்தெடுத்து வசித்து வந்தார். ஆதியில் வராஹர் தங்கியதால் "ஆதி வராஹ க்ஷேத்திரம்" என்றும் அழைக்கப்படும். நரசிம்ம மூர்த்தியும் தனது அவதார காலம் முடிந்தவுடன் ஏகாந்தமாக தங்கியதும் திருமலைதான். ஆதி வராஹர் தான் முதன் முதலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தங்க இடம் கொடுத்தவர். அதன் நிமித்தமாய் நாம் இன்றும் முதலில் ஆதி வராஹரை தரிசித்துவிட்டு பிறகு பெருமாளை சேவிக்கின்றோம். 🙏 ப்ரம்மா, அகஸ்தியர், சரஸ்வதி ஆகிய தேவதாமூர்த்திகள் வணங்கி வழிப்பட்ட ஸ்தலம் திருப்பதி. அகத்தியர் சித்தி அடைந்த இடம் திருப்பதி என்றும் கூறுவர். 🍁 திருப்பதி மலை முழுவதும் சாளக்ராமம்தான். ஆதலால்தான் விசிஷ்டாத்வைதி ஆச்சார்யரான ஸ்ரீ ராமானுஜரும், த்வைத ஆச்சார்யரான ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளும் திருப்பதி வந்த பொழுது பாதத்தால் நடக்காமல் முட்டியால் நடந்து ஸ்ரீ ஏழுமலையானை தரிசித்தனர். இவரது பக்தியை மெச்சி ஸ்ரீனிவாசன் தன்னுடைய விக்கிரஹத்தை ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளிடம் தந்ததாகவும் இன்றும் அவ்விக்கிரஹம் ஸ்ரீ வாதிராஜர் ஜீவ ப்ருந்தாவனமாகிய சோதே மடத்தில் இன்றும் உள்ளது. 🍂 ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் இருப்பினும் அவரின் பிரதான ஏழு தலைகளே ஏழு மலைகளாக திகழ்கின்றன. ஸ்ரீ வேதவ்யாஸர் திருப்பதியில் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளது எனவும் 1008 தீர்த்தங்கள் விசேஷமானவை என்றும் ("ஸத் தர்ம ரதி தான்யதி") குறிப்பாக ஏழு தீர்த்தங்கள் முக்தியாகிய மோக்ஷத்தை அளிக்கும் என்றும் அவையாவன: ⭕ சுவாமி புஷ்கரணி, ⭕ ஆகாச கங்கை, ⭕ பாபவினாசினி, ⭕ தும்புரு தீர்த்தம், ⭕ பாண்டுதீர்த்தம், ⭕ குமார தாரிகா மற்றும் ⭕ க்ருஷ்ண தீர்த்தம். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 🌺 வேறு எந்த திருக்கோயிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு திருப்பதி பெருமாளுக்கு உண்டு. அது என்னவென்றால் மூன்று மதாசார்யர்களான ஸ்ரீ ஆதிசங்கரர் (அத்வைதம்), ஸ்ரீ ராமானுஜர் (விசிஷ்டாத்துவைதம்), ஸ்ரீ வ்யாசராஜ தீர்த்தர் (மாத்வம்) வழிபட்ட ஒரே கோயில் திருப்பதி மட்டுமே. 🌹 ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் ஸ்வர்ணாகர்ஷண எந்திரத்தை ஸ்ரீ வேங்கடவனின் பாதத்தின் கீழ் ப்ரதிஷ்டாபனம் செய்ததால்தான் இன்று வரை பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. ஸ்ரீ ராமாநுஜாசார்யார் 🍎 ஸ்ரீ வேங்கடவனிடம் நித்யம் உரையாடும் பெரும்பேறு பெற்றவர். திருமலையின் நித்ய பூஜா அனுஷ்டானங்களை வகுத்தவர். அவரின் மனதிற்கினிய சீடனாகிய அனந்தாழ்வார் தனது குருவான ஸ்ரீ ராமானுஜருக்கு நித்ய கைங்கர்யம் செய்த புனித தலம் திருப்பதி. அவர் பயன்படுத்திய கடப்பாறையை இன்றும் நாம் கோயில் நுழைவாயிலில் தரிசிக்கலாம். ஸ்ரீ ராகவேந்திரர் தனது முற்பிறவியில் ஸ்ரீ வ்யாஸராய தீர்த்தராக அவதாரம் எடுத்த பொழுது திருப்பதியில் சுமார் 12 ஆண்டுகள் பெருமாளுக்கு பூஜை செய்யும் பெரும் பாக்கியம் பெற்றார். அதன் பயனாய் திம்மண்ண பட்டர் கோபிகாம்பாள் தம்பதிக்கு ஸ்ரீ வேங்கடேசனின் அருளால் கலியுகத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளாக திரு அவதாரம் புரிந்தார். அதன் காரணமாய் இப்புனித தம்பதியர் அவருக்கு ஸ்ரீ வேங்கடநாதன் என்று நாமம் சூட்டினர். 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 "தேவெரெந்தரெ திருப்பதி திம்மப்பனு... குறுகளெந்தரெ மந்த்ராலய ராகப்பனு..." (எப்படி குரு என்றால் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை குறிக்குமோ அதேபோல் தெய்வம் என்றாலே நமக்கு உடனே நினைவிற்கு வருபவர் ஸ்ரீ வெங்கடாசலபதி.) வகுளாதேவி ஸ்ரீனிவாசன் வளர்ப்பு தாய். இந்த வகுளாதேவிதான் முன் ஜென்மத்தில் யசோதையாக இருந்து ஸ்ரீ கிருஷ்ணனை வளர்ந்தவள். யசோதையாக இருந்த பொழுது கிருஷ்ணரின் திருமணத்தை நடத்திவைக்கும் பாக்கியம் இல்லாததனால் அடுத்த பிறவியில் வகுளாதேவியாக அவதரித்து கிருஷ்ணரின் மறு அவதாரமான ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடத்திவைத்த பெரும் பாக்கியம் பெற்றவள். பிறகு குபேரனிடம் ப்ரம்மா, சிவன், அஸ்வத்த வ்ருக்ஷம் சாக்ஷியாக கடன் வாங்கி பத்மாவதியுடன் திருமணம் நடத்தி வைத்தார். இந்த பத்மாவதிதான் முன் ஜென்மத்தில் வேதவதியாக பிறந்து ஸ்ரீ ராமரை திருமண புரிய ஆவல் கொண்டு, அது முடியாமல் போக, அடுத்த பிறவியில் பத்மாவதி என்ற பெயரில் ஆகாச ராஜனுக்கு மகளாக பிறந்து அதன் பிறகுதான் திருப்பதி ஏழுமலையான் சீனிவாசனாக பத்மாவதி தாயாரை மணம் புரிந்து ராமாவதாரத்தில் தான் கொடுத்த வாக்கைக் கலியுகத்தில் காப்பாற்றினார். 🌿 அன்னமய்யா எனும் பாகவதோத்தமர் திருப்பதி பெருமாளின் மீது 30,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை பாடியுள்ளார். இது “அன்னமய்யா கீர்த்தனைகள்” என்று மிகவும் புகழ்பெற்றது. 🌿 ஹாதீராம் பாவாஜி என்னும் பக்தர் பெருமாளிடம் சொக்கட்டான் விளையாடிய பெரும் பேறு பெற்றவர்.. 🌕 சந்திரனின் தாக்கம் அதிகமாக உள்ள தலம் திருப்பதி. ஆதலால்தான் இத்தலம் மிகவும் குளிர்ந்த பிரதேசமாகவும், மனதிற்கு சாந்தி அளிக்கும் தலமாகவும், நமது மனம் ஒருமித்த சித்தத்துடன் வேறெதிலும் அலைபாயாமல் இருப்பதற்கு காரணம். நடந்து சென்று திருப்பதி செல்வது நமது உடம்பிற்கும், மனதிற்கும் சிறந்த பயிற்சியாகவும் நமது மூலாதாரத்தின் விழிப்பு நிலையையும் தூண்டுகிறது. 🙏🙏🙏 வேங்கடேச மலையில் ஸ்ரீநிவாசனின் சாந்நித்யமும், சகலதேவதா மூர்த்திகளும் புனித மலைகளாகவும், தீர்த்தங்களாகவும், செடி, கொடிகளாகவும், விலங்காகவும் மற்றும் சகல ஜீவராசிகளாகவும் இருந்து பெருமாளை நித்யம் சேவித்து வருவதாக ஐதீகம் ஆதலால்தான் நாம் இங்கு வைக்கும் வேண்டுதலுக்கு அபார பலன் கிடைக்கிறது. நாம் இங்கு எவ்வளவு நேரம் இருக்கிறோமோ அவ்வளவு நேரம் நமக்கு இறைவனின் அதிர்வலைகள் நம்முள் செல்வது நமக்கு பரம புண்ணியம் ஆதலால்தான் அங்கு பலமணி நேரம் தரிசனத்திற்கு இறைவன் நம்மை காக்க வைக்கிறார். இதன் தாத்பர்யம் புரியாமல் நாம்தான் புலம்புகிறோம். 🙏 கோவிந்தராஜன் வகுளாதேவியின் மூத்த புத்திரன் ஆதலால் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிந்தராஜனின் சஹோதரராகிறார். 🙏 சிவராத்திரியன்று பெருமாளுக்கு வைரத்தில் விபூதி பட்டை அணிவித்து ஈஸ்வரனாகவும் காட்சி அளிப்பது விந்தையிலும் விந்தை. இங்கிருக்கும் பெருமாள் சிவ விஷ்ணு ஸ்வரூபமாக இருப்பதால் இது ஒரு தலைசிறந்த சைவ-வைஷ்ணவ தலமாகவும் விளங்குகிறது. ஈஸ்வரனுக்கு உகந்த வில்வம் சாற்றப்படும் ஒரே வைஷ்ணவ திருக்கோயில் திருப்பதி மட்டுமே. 🍂 சிலாரோகணம் என்னும் ஒரு அபூர்வ கல்லினால் ஆன திருமேனியுடையவர். 🍂 உலகின் இரண்டாவது பணக்கார கடவுளாக இருப்பினும் அவர் உண்பது என்னவோ மண்சட்டியில் தயிர் சாதம்தான். 🍁 திருப்பதி மலைஅடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர். ⭕ பெருமாளின் கருவறை மேலிருப்பது ஆனந்த நிலையம் என்னும் விமானம். இதன் தரிசனம் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்க வல்லது. 🍒மூலவரின் விக்ரஹத்தில் உள்ள நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் அவர் ஜீவனோடு விளங்குவதற்கு சாட்சியாக உள்ளது. அப்படி ஒரு அபார தேஜஸ் உள்ள மூர்த்தி ஸ்ரீ வேங்கடவன். இவருக்கு சாற்றும் வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள், நறுமண மலர்கள் வேறெங்கும் கிடைக்காதது. இங்கு கொங்கணச்சித்தர் சமாதி உள்ளது, 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 ⭐ இவருக்கு சாற்றும் ஒற்றை கல் நீலம் என்னும் வைரத்தின் மதிப்பு மட்டும் சுமார் 100 கோடி. திருப்பதி சொர்க்கவாசல், பிரம்மோத்சவம் மிகவும் விசேஷம். திருமலை 3000 அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேசமாகும். இவரின் விக்ரஹம் மட்டும் 110 டிகிரி வெப்பத்தின் அளவிற்கு கீழே குறைவதே இல்லை. இதுவும் ஒரு அதிசயம். திருப்பதி அருகிலிருக்கும் திருத்தலங்கள் திருச்சானூர், ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி கோவில், ஸ்ரீ கபிலேஸ்வரர், ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோயில், ஸ்ரீநிவாசமங்காபுரம், ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வரஸ்வாமி கோயில், ஸ்ரீ காளஹஸ்தி, திருத்தணி. 🌿 "ஸ்ரீய : காந்தாய கல்யாண நிதயே 🌿 நிதயேர்த்தினாம் 🌿 ஸ்ரீவேங்கட நிவாஸாய 🌿 ஸ்ரீநிவாஸாய மங்களம்" ***/***** ⭕ “ஓம் நிரஞ்சனாய வித்மஹே ⭕ நிராபாஸாய தீமஹி ⭕ தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்”!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏கோவில் #🙏🏻புரட்டாசி மாதம்✨ #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #அன்புடன் காலை வணக்கம்
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ٥٥٥٥٥ ٥٥٥ ٥٥٥٥٥ ٥٥٥ - ShareChat
*இன்று லலிதா பஞ்சமி*🌺 *வேண்டியன எல்லாம் தரும் லலிதா நவரத்தின மாலை* 🙏🙏 ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான சத்குரு சரணம் சரணம்  ஞானானந்தா சரணம் சரணம்  ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்  பூக்கும் நகையாள் புவநேஸ்வரிபால்  சேர்க்கும் நவரத்தின மாலையினை  காக்கும் கன நாயக வாரணமே  மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே  மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே  மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே  மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே  வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய்  கண்மூடி நெடுன்கன வான தவம்  பெற்றும்தெரியார் நிலை என்னில் அவம்  பெருகும் பிழையேன் பேச தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிர  பகைவர்க் கெமனாக எடுத்தவளே  வற்றாத அருட் சுனையே வருவாய்  மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா…) நீலம்  மூலக்கனலே சரணம் சரணம்  முடியா முதலே சரணம் சரணம்  கோலக் கிளியே சரணம் சரணம்  குன்றாத ஒளிக்குவையே சரணம்  நீல திருமேனியிலே நினைவாய் நினைவற்றேளியேன் நின்றேன் வருவாய்  வாலைகுமரி வருவாய் வருவாய்  மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா…) முத்து  முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே  முன்னின்றருளும் முதல்வீ சரணம்  வித்தே விளைவே சரணம் சரணம்  வேதாந்த நிவாசினியே சரணம்  தத்தேரிய நான் தனையன் தாய் நீ  சாகாத வரம் தரவே வருவாய்  மத்தேருததித் கினை வாழ்வடையேன்  மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே (மாதா…) பவழம்  அந்தி மயங்கிய வானவிதானம்  அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை  சிந்தை நிறம் பவளம் போழிவாரோ  தேம்போழிலாம் இதை செயதவளாரோ  எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்  என்னுபவர்க்கருள் என்னமிகுத்தாள்  மந்திர வேத மயப்பொருள் ஆனாள்  மாதா ஜெயா ஓம் லலிதாம்பிகையே (மாதா…) மாணிக்கம்  காணக் கிடையா கதியானவளே  கருதக்கிடையா கலையானவளே  பூனக் கிடையா பொலிவானவளே  புனைய கிடையா புதுமைத்தவளே  நாணித் திரு நாமமும் நின் துதியும்  நவிலாதவரை நாடாதவளே  மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்  மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா…) மரகதம்  மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் சுருதி ஜதி லயமே இசையே சரணம்  அர ஹர சிவனென்று அடியவர் குழும  அவரருள் பெற அருளமுதே சரணம் வரணவ நிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா…) கோமேதகம்  பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாது பயன்குன்றா வரமும்  தீமேலிடினும் ஜெய சக்தியென  திடமாய் அடியேன் மொழியும் திறமும்  கோமதகமே குளிர் வான் நிலவே  குழல்வாய் மொழியே தருவாய் தருவாய் மாமேருவிலே வளர் கோகிலமே  மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா…) பதுமராகம்  ரஞ்சனி நந்தினி அங்கனி பதும  ராக விலாச வ்யாபினி அம்பா  சஞ்சல ரோக நிவாரணி வாணி  சாம்பவி சந்திரா கலா தரிராணி  அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி  அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி  மஞ்சுள மேரு ச்ருங்க நிவாசினி  மாதா ஜெய ஓம் லலிதாம்பிகை (மாதா…) வைடூரியம்  வலையோத்த வினை கலையொத்த மனம் மருளப் பரையாரொலியொத்த விதால்  நிலைஎற்றேளியேன் முடியத்தகுமோ  நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற்றசைவட் ரனுபூதி பெரும்  அடியார் முடிவாழ் வைடூரியமே  மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (மாதா…) பயன்  எவர் எத்தினமும் இசைவாய் லலிதா  நவரத்தின மாலை நவின்றிடுவார்  அவர் அற்புத சக்தியெல்லாம் அடைவார்  சிவரத்தினமாய் திகழ்வார் அவரே… (மாதா…) ஸ்ரீலிதாம்பிகை திருவடிகளில் சரணம் 🙏 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #அன்புடன் காலை வணக்கம் #📅பஞ்சாங்கம்✨ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏கோவில்
🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 - ShareChat
*நவராத்திரி நாயகி* *நவராத்திரி ஐந்தாம் நாள்* *வைஷ்ணவி தேவி* வைஷ்ணவி தேவி, பொதுவாக வைஷ்ணோ தேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்து தெய்வமான துர்கா அல்லது ஆதி சக்தியின் வெளிப்பாடாக வணங்கப்படுகிறார். மகா காளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களிலிருந்து அவதரித்ததாக நம்பப்படுகிறது. வட இந்தியாவில், ஜம்மு & காஷ்மீரில் உள்ள கட்ரா நகருக்கு அருகில் உள்ள திரிகூடா மலைப்பகுதியில், புனித குகையில் வைஷ்ணோ தேவி உறைகிறார். வைஷ்ணவி அம்மன் பற்றிய முக்கிய தகவல்கள்: அவதார விளக்கம்: காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களின் ஆற்றல்களில் இருந்து வைஷ்ணவி பிறந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய தெய்வம்: தாய் தெய்வமான துர்கா அல்லது ஆதி சக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறார். தல சிறப்பு: இந்தியாவின் வட எல்லையில் அமைந்துள்ள ஒரு சக்தி வாய்ந்த தலம். 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடமாகும். அருள் வடிவம்: வைஷ்ணவி தேவி சிலையாக இல்லாமல், புனித குகையில் உள்ள மூன்று பாறைகளாக (மகா காளி, மகாலட்சுமி & மகா சரஸ்வதி) அரூபமாக அருள்பாலிக்கிறார். மற்ற பெயர்கள்: மாதா ராணி, திரிகூடா, அம்பே மற்றும் வைஷ்ணவி. வைஷ்ணோ தேவி கோயில்: அமைவிடம்: ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில், கட்ரா நகருக்கு அருகில் உள்ளது. புனித தலம்: இங்குதான் வைஷ்ணோ தேவியின் குகை அமைந்துள்ளது. யாத்திரை: உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த புனித குகைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். விழாக்கள்: நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும். #🙏🏻புரட்டாசி மாதம்✨ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #📅பஞ்சாங்கம்✨ #அன்புடன் காலை வணக்கம் #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱
🙏🏻புரட்டாசி மாதம்✨ - ShareChat
*நவராத்திரி ஐந்தாம் நாள்* *இன்று யாரை வழிபட வேண்டும்* *வடிவம் :* வைஷ்ணவி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்) *பூஜை :* 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும். *திதி :* பஞ்சமி *கோலம் :* கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும். *பூக்கள் :* கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும். *நைவேத்தியம் :* சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல். *ராகம் :* பஞ்சமாவரணை கீர்த்த னைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம். *பலன் :* நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். _*நவராத்திரி ஐந்தாம் நாள்- விரதம் இருந்து வழிபடும் முறை*_ நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். நவராத்திரி வழிபாடு நாட்களில், வீடுகளிலும் வைணவக் கோவில்களிலும் வைக்கப்படும் கொலு, மிகவும் பிரசித்திப் பெற்றது. பலவிதமான தெய்வ, மகான், மனித பொம்மைகளை, படிகள் அமைத்து அதில் அடுக்கி வைப்பார்கள். ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்படும் பொம்மையை வைத்து என்னை வழிபடுபவர்களுக்கு, நான் சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி பாகவதத்தில் அம்பாள் கூறியிருக்கிறார். எனவேதான் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து அலங்கரித்து அவளது அருளை வேண்டுகின்றனர். மனிதன் படிப் படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து பரிணாம வளர்ச்சி பெற்று, இறுதியில் கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனும் தத்துவத்தையே கொலுப்படிகளும், அதில் வைக்கப்படும் பொம்மைகளும் உணர்த்துகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். துர்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரமும் படித்து வணங்க வேண்டும். சிறுவயது பெண் பிள்ளைகள், கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களை அம்மன் வடிவமாக ஆராதிக்க வேண்டும். சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து, வீட்டில் தங்களால் முடிந்த அளவில் கொலுப் படிகள் அமைத்து அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மனமும், வயிறும் நிறையும் வகையில் செய்ய வேண்டும். இதன் மூலம் அம்பிகையின் அருளை நாமும் பெறலாம். நவராத்திரி ஐந்தாம் நாளான இன்று அன்னையை, சும்பன் எனும் அசுரனின் தூதுவனான சுக்ரீவன் வந்து சந்தித்து பேசுவான். அவனது தூது பேச்சை கேட்டப்படி அன்னை சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள். அந்த சமயத்தில் அவளது தோற்றம் புன்னகை ததும்ப காட்சி அளிப்பதாக இருக்கும். இத்தகையை வடிவத்தில் அன்னையை அலங்கரித்து வழிபட வேண்டும். இந்த அலங்காரத்தில் அன்னையை மோகினி என்பார்கள். வைஷ்ணவி என்றும் மகாகாளி என்றும் இந்த அவதாரத்தை சொல்வதுண்டு. எனவே காளிக்குரிய பாரிஜாத மலர் கொண்டு அன்னையை வழிபட வேண்டும். அப்போது நீலாம்பரி ராகத்தில் அன்னையை துதித்து பாடினால் காளிதேவி ரசித்து கேட்டு மகிழ்ச்சி அடைவாள். *பூஜை* இன்று 6-வயது குழந்தையை அம்மனாக பாவித்து வழிபட வேண்டும். அந்த சிறுமிக்கு இலவங்கப்பட்டையும் சந்தனமும் கொடுக்கலாம். சிலர் தாமிரம் கொடுப்பதுண்டு. இன்றைய தினம் அம்பாளை பவளமல்லி மற்றும் சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது அதிக பலன்களை தரும். அது போல அம்பாளை மாதுளம் பழம் படைத்து வழிபடலாம். நைவேத்திய வகைகளில் தயிர் சாதம் படைக்க வேண்டும். இன்றைய வழிபாடு அனைத்து வகை செல்வங்களையும் கொண்டு வந்து நமக்கு தரும். மேலும் நீங்கள் எந்த செல்வம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அல்லது ஆசைப்படுகிறீர்களோ அவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #அன்புடன் காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🏻புரட்டாசி மாதம்✨ #📅பஞ்சாங்கம்✨
#SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes - நவராத்திரி வழிபாட்டு முறைகள ஐந்தாம் நாள் வைஷ்ணவி தேவி கோலம்: கடலை மாவினால் பறவைக் கோலமிட வேண்டும் மலர்கள்: பாரிஜாதம் கதம்பம் நைவேத்தியம்: தயிர்சாதம் பொங்கல் பழம் மாதுளை பழம் ஐஸ்வர்யம் புத்திர பாக்கியம் கிடைக்கும் பலன்: சகல நவராத்திரி வழிபாட்டு முறைகள ஐந்தாம் நாள் வைஷ்ணவி தேவி கோலம்: கடலை மாவினால் பறவைக் கோலமிட வேண்டும் மலர்கள்: பாரிஜாதம் கதம்பம் நைவேத்தியம்: தயிர்சாதம் பொங்கல் பழம் மாதுளை பழம் ஐஸ்வர்யம் புத்திர பாக்கியம் கிடைக்கும் பலன்: சகல - ShareChat
#🙏🏻புரட்டாசி மாதம்✨ #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #அன்புடன் காலை வணக்கம் ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes
🙏🏻புரட்டாசி மாதம்✨ - ShareChat
00:44
Ranganathar temple. Idigarai. Coimbatore. 24.9.25 #அன்புடன் காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #🙏🏻புரட்டாசி மாதம்✨
அன்புடன் காலை வணக்கம் - ShareChat
00:27
காலமாக நீ நினைத்த காரியம் ஒன்று வெகு விரைவில் நடக்கப்போகிறது ஓம் நமசிவாய ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #அன்புடன் காலை வணக்கம் #📅பஞ்சாங்கம்✨
#SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes - ठ ठ - ShareChat
#அன்புடன் காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes
அன்புடன் காலை வணக்கம் - 088 IB 3 61 நீயின்றி நானில்லை என் அப்பனே! எப்போதும் உனிரு என் தகப்பனே! நமசிவாய ஓம 088 IB 3 61 நீயின்றி நானில்லை என் அப்பனே! எப்போதும் உனிரு என் தகப்பனே! நமசிவாய ஓம - ShareChat