திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ இல்லாத அம்பிகை சந்நிதி! ஆவுடையார் கோயிலின் அரிய ரகசியங்கள்!_* _மூன்று வடிவங்களில் சிவன் அருளும் தலம் ; மாணிக்கவாசகர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி, எழுத்தாணி உள்ள திருத்தலம் – எங்கே?_ * 🛕🛕🛕மூன்று வடிவங்களில் சிவன் அருளும் தலம் ; மாணிக்கவாசகர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி, எழுத்தாணி உள்ள திருத்தலம் – எங்கே? ஆதிகயிலாயம், அனாதி மூர்த்தித் தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், ஆளுடையார் கோயில் எனப் பல சிறப்புப் பெயர்களுடன் திகழும் ஆவுடையார் கோயிலில் ஈசன் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் நமக்கு அருள்புரிகிறார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஆத்மநாதர் என்று அழைக்கப்படுகிறார். ஆத்மநாதர் சன்னதியில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கத்திருமேனி இல்லை. அங்கே ஒரு குவளை சாத்தப்படுகிறது. குவளை உடலாகவும் அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. அருவமாக இருந்து ஆத்மாக்களைக் காத்தருள்வதால் இவருக்கு ஆத்மநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. அருவமாக இறைவன் இருப்பதால், வழக்கமாக எல்லாக் கோயில்களிலும் இருப்பதுபோல் நந்தி, கொடிமரம், பலிபீடம் எதுவும் இங்கே இல்லை. இறைவன் அருவமாக இருப்பதால் அம்பிகையும் உருவமற்று அருவமாகவே அருள்புரிகிறார். அன்னை யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும் அதன் மேல் அம்பிகையின் பொற்பாதங்களும் உள்ளன. அம்பிகையைத் தரிசிக்க வாயில் கதவுகள் இல்லை. கருங்கல்லால் ஆன பலகணி (ஜன்னல்) உள்ளது. அதன் வழியாகவே அன்னையைத் தரிசிக்கவேண்டும். இக்கோயிலின் ஸ்தல விருக்ஷமாக குருந்த மரம் விளங்குகிறது. குருந்த மரமே சிவனின் வடிவமாகவும் வணங்கப்படுகிறது. அருவுருவமாக சிவன் குருந்த மரத்தில் அருள்கிறார். அரிமர்த்தன பாண்டிய மன்னன் தன் அமைச்சர் வாதவூரரிடம் (மாணிக்கவாசகர்) குதிரை வாங்கி வரப் பணித்தான். வாதவூரரும் குதிரை வாங்கி வர கிழக்குக் கடற்கரை பக்கம் கிளம்பினார். திருப்பெருந்துறையை அடைந்ததும் வாதவூரரின் மனதில் சிவாலயம் கட்டவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார் ஈசன். குதிரை வாங்க வைத்திருந்த பொருளை, கோயிலைச் செப்பனிட செலவு செய்தார் வாதவூரர். இத்தலத்தில் உள்ள குருந்த மரத்தடியில் ஞானகுருவாக சிவபெருமான் வீற்றிருந்து, வாதவூரரை மாணிக்கவாசகராக ஆக்கியதால் அருவுருவமாக ஈசன் குருந்த மரத்தில் அருள்கிறார் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலில் மாணிக்கவாசகரே உற்சவமூர்த்தியாக அருள்கிறார். சிவபெருமான் உருவமாக மாணிக்கவாசகர் வடிவில் அருள்கிறார். குதிரைகளை வாங்காமல் திரும்பிய மாணிக்கவாசகரை மன்னன் சிறையில் அடைக்க, இறைவன் நரிகளைப் பரிகளாக்கி திருவிளையாடல் புரிந்து, மாணிக்கவாசகர் பெருமையை மன்னனுக்கு உணர்த்தினார். இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய இடம் ‘நரிக்குடி’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னனின் மந்திரி துண்டகன் பேராசை மிகுதியால் சிவபுரம் என்ற வளமான கிராமத்தை தனதாக்கிக் கொள்ள நினைத்தான். அந்த கிராமத்து நிலங்கள் தன் பூர்வீக சொத்து என்றும், கிராம மக்கள் அதை அபகரித்து வைத்திருப்பதாகவும் அரசரிடம் புகார் கொடுத்தான். அரசனும் அதை நம்பி மக்களை சிவப்புரத்திலிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டான். கிராமத்தைச் சேர்ந்த 300 மக்களும் செய்வதறியாது ஆத்மநாதரிடம் முறையிட, இறைவன் முதியவர் வடிவில் வந்தார். “என்னிடம் உள்ள நிலப்பட்டயத்தைக் காட்டி உங்கள் நிலங்களை மீட்டுத் தருகிறேன். அப்படி மீட்டுத் தந்தால் முந்நூறில் ஒரு பங்கு எனக்களிக்க வேண்டும்,” என்றார். மக்களும் அதை ஏற்றுக்கொள்ள, மன்னனிடம் சென்று தன்னிடம் இருந்த பட்டயத்தைக் காட்டினார் முதியவர் வடிவில் இருந்த ஈசன். மன்னன் துண்டகனை அழைத்து விசாரிக்க, அவனும் போலியாகத் தயாரித்து வைத்திருந்த பட்டயத்தைக் காட்டினான். இரண்டில் எது நிஜம், எது போலி என்று தெரியாமல் குழம்பினான் மன்னன். “துண்டகா, ஒவ்வொரு பூமிக்கும் ஒரு தனித்தன்மை, அடையாளம் உண்டு. சிவபுரம் மண்ணின் தனித்துவம் என்ன?” என்று கேட்டான் மன்னன். “கோயிலின் வடகிழக்குப் பகுதி நிலம் மேடானது. எவ்வளவு அகழ்ந்தாலும் நீர் வராது,” என்றான் துண்டகன். “சுத்தப் பொய். நான் அங்கே நீரை வரவழைத்துக் காட்டுகிறேன்,” என்றார் முதியவர். உண்மையைக் கண்டறிய அனைவருடன் சிவபுரம் வந்தான் மன்னன். மேடான நிலத்தைத் தோண்டி நீரை வரவழைத்தார் சிவபெருமான். கங்கையை வரவழைத்தவருக்கு இது சாதாரண விஷயம்தானே. துண்டகனின் நாடகத்தை உணர்ந்த மன்னன், அவனைச் சிறையில் அடைத்தான். சிவபுர மக்களுக்கு நிலம் திருப்பி வழங்கப்பட்டது. மக்களும் இறைவனுக்கு வாக்களித்தபடி ஒரு பங்கை முதியவருக்கு வழங்க, அவர் மறைந்தார். சிவன் தண்ணீரை வரவழைத்துக் காட்டிய இடம், ஆவுடையார் கோயிலில் இருந்து சற்று தொலைவில் இப்போதும் இருக்கிறது. “கீழேநீர்காட்டி,” என்று இவ்விடம் அழைக்கப்படுகிறது. திருப்பெருந்துறை கோயிலின் பஞ்சாட்சர மண்டபத்தின் மேல்விதானத்தில் இந்த நிகழ்வு ஓவியமாக இருப்பதையும் காணலாம். இத்தலத்தில் இறைவனுக்கு ஆறு வேளையும் சுடச்சுட புழுங்கலரிசி சாதமே நிவேதனம் செய்யப்படுகிறது. அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இத்தலத்தில் சிவபெருமான் குருவாக இருந்து குழந்தைகளுக்கு கல்வி உபதேசம் செய்தார். அப்போது அவர்கள் வீட்டில் சமைத்த புழுங்கல் அரிசி சாதம், பாகற்காய், முளைக்கீரை போன்ற பதார்த்தங்களையே ஈசனும் தினமும் உண்டார். குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாடுவது என குழந்தைகளை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார். ஒருநாள் கண்ணாமூச்சி விளையாட்டில் இறைவன் மறைந்து போனார். குழந்தைகள் மிகவும் வருந்தினர். அவர்கள் கனவில் சிவபெருமான் தோன்றி, தானே குருவாக வந்த விவரத்தைச் சொல்லி, இதுவரை தனக்களித்த உணவையே நைவேத்தியமாக இடச் சொன்னார். எனவே இப்போதும் ஆத்மநாதருக்கு ஆறு வேளையும் புழுங்கல் அரிசி சாதமே நிவேதனம் செய்யப்படுகிறது. ஒரு தவலையில் சாதம் வடித்து, கைப்படாமல் பாத்திரத்தோடு எடுத்துவந்து, அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் கொட்டி நிவேதனம் செய்கிறார்கள். மாணிக்கவாசகர் கட்டிய இத்திருத்தலத்தில் இதுபோல் நிறைய அற்புதங்களையும், ஆச்சரியமூட்டும் சிற்பக்கலையையும் காணலாம். மாணிக்கவாசகர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி, எழுத்தாணி ஆகியவை இன்னும் இங்கே உள்ளன. 🍁🍁🍁
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - (oe (oe - ShareChat
#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 சண்டேஸ்வரர் சன்னதியும்அவரை வழிபடும் முறையும்* சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல்வல்லான் மற்றும் சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கிக் காட்சியளிப்பார்கள். சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவ வழிபாட்டின்போது பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய சிவபெருமானுக்கு அணிவித்த பொருட்களை சண்டேசுவரர் சன்னதியில் சேர்த்து, சிவதரிசனப் பலனைத் தர வேண்டும் என்று அவரைப் பிரார்த்தித்து, அங்கு தரப்படும் திருநீற்றை அணிய வேண்டும் என்பது சமய நூல்களின் விதி. இதை அறியாத பலர் தமது ஆடைகளில் உள்ள நூல் இழைகளையும் நூல் திரியையும் சண்டேசுவரர் சன்னதியில் எடுத்துப் போடுகின்றனர். இது பெரும் தவறு. சண்டேசர் இடையறாத தியானத்தில் இருப்பவர். அவரிடம் நமது வருகையையும் பிரார்த்தனைகளையும்  அவரது சன்னதியில் நின்று மெதுவாக கைகளால் சத்தம் வராமல் தெரிவிக்கவேண்டும். மேலும் சண்டீகேஸ்வரர் சிவபக்தர் மட்டும் இல்லை சிவனின் சொத்துகளை பாதுகப்பவர். எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லும் முன் சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம் வராமல் கைகளை காண்பித்து சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டீகேஸ்வரர் தியானம் கலையாமல் செய்ய வேண்டும். இதுவே முறையாகும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. இதைப் புரிந்து கொள்ளாமல் சண்டேசரைச் ‘செவிட்டுச் சாமி’ என்றும், கைகளைப் பெரிதாகத் தட்டியும், சொடுக்கவும் செய்தால் அவரது அருள் கிடைக்கும் என்று கூறுவது தவறு. சண்டேசர் சன்னதியை முழுமையாக வலம் வரக்கூடாது. சந்நிதிக்கு வலப்புறமாகச் சென்று சண்டேசரைத் தரிசித்துவிட்டு, வந்த வழியே (அரை வட்டமாக) திரும்ப வேண்டும். பக்தர்களுக்கு அனுமதி அளித்து அவர்களை கோவிலுக்குள் அனுப்பும் அதிகாரம் உடையவர் நந்திதேவர். அது போல சிவபுண்ணியப் பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் சண்டேசருக்கு உண்டு. சிலர் சண்டேசர் சன்னதி இடுக்கில் உள்ளது. சென்று தரிசிக்கச் சிரமமாக உள்ளது என்றும் அவரைத் தரிசிக்காமலேயே கோவிலை வலம் வருவர். இவரை அவசியம் வலம் வர வேண்டும். கோவிலில் முதலில் விநாயகரையும், நிறைவாக சண்டேசரையும் வழிபட்டால்தான் சிவ வழிபாடு முழுமையடையும். சிவாலயத் திருவிழாக்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்னும் திருவீதியுலா நிகழும். அப்போது, கணபதி, முருகன், சிவன், அம்பிகை எனும் வரிசையில் சண்டேசர் இறுதியாக வருவார். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ - ShareChat
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ வழிபட்ட உலகவிடங்கீசுவரர்..*.!🌹 சேர,சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இணையாக தனியாட்சி செலுத்திய பெருமை கொங்கு மன்னர்களுக்கும் உண்டு. உலக வணிக மையமாக திகழ்ந்த பெருமை இன்னும் கொங்கு நாட்டுக்கே உரியது. மிகப் பழங்காலம் தொட்டே கொங்கு நாடு சிறப்புமிக்கதாக இருந்து வருகிறது. மான்படுகாடு, தேன் படுவரை(மலை),மீன்படுசுனை,பொன்படுகுட்டம்(சுரங்கம்)என்று கொங்கு நாட்டைக் கல்வெட்டுகள் வர்ணிக்கும். சங்க இலக்கியத்தில் "உலகடம்' என்று இடம்பெற்று பிறகு கி.பி.12-ம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்களின் ஆட்சியில் "உலகவிடங்கம்' எனப் பெயர் பெற்ற இவ்வூர் நாளடைவில் "ஒலகடம்' என்றானது. உலக விடங்கம் காவிரிக் கரையில் வடக்கில் அமைந்திருந்தபடியால் "வடகரை உலக விடங்கம்' எனப்பட்டது. இங்குள்ள இறைவனை உலகேஸ்வரர்,ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர் என்று அழைக்கின்றனர். அம்மனை "உலக நாயகி' என்றழைக்கின்றனர்."விடங்கர்' என்றால் "உளியால் செதுக்கப்படாதவர்' என்று பொருள். இங்கு உள்ள ஈசன் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார்.உலக விடங்கர் உலக மக்களைக் காக்கும் பெருமைக்குரிய உலக ஈஸ்வராக இங்கு திகழ்கிறார். ராமாயணத்தில் இத்திருத்தலம் புகழுடன் பேசப்படுகிறது. சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு வான் வழியில் அனுமன் விரைந்து வருகிறார்.அவர் உலக விடங்கர் திருக்கோவிலுக்கு மேலாக வரும் போது,அவரது கை அசைவற்று நின்று விடுகிறது. கீழே உலக விடங்கர் எழுந்தருளியிருக்கும் காட்சியைக் கண்டு மூன்று முறை சஞ்சீவி மலையுடன் திருக்கோவிலை வலம் வந்து வணங்கிச் செல்கிறார். இவ்வாறு அனுமனை ஈர்த்து ஆட்கொண்ட திருத்தலம் இது.அதனால் சஞ்சீவி மலையின் ஆற்றலும்,பயனும் இத்தலத்தில் நிறைந்துள்ளது. கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்டுள்ள மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன. கொங்குச் சோழ மன்னன் ஆதித்த கரிகாலன் அமைத்த திருக்கோவில்களில் காணப்படும் கோட்டுச் சிற்பங்களைப் போன்ற சிற்பங்கள் இக்கோவிலிலும் அமைந்துள்ளன. கொங்குச் ழோழர்களில் வீரராஜேந்திரன் என்ற மன்னனின் 24ஆவது ஆட்சியாண்டில் அமைத்த கல்வெட்டு ஒன்று சுப்பிரமணிய சுவாமி சந்நிதி முன் உள்ளது. அதில் அம்மன்னன் குன்றமெரித்த பிள்ளையாரை அங்கு எழுந்தருளச் செய்ததையும்,அச்செயலை ஊராள்வோர் இருவர் முன்னின்று தெரிவித்த செய்தியும் அதில் உள்ளது. இம்மன்னனே இக்கோவிலுக்கு நிலம் பல தானம் தந்ததை மேற்குச் சுவரிலுள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பேரரசன் விக்கிரமச் சோழன் செய்த திருப்பணிகளை மகா மண்டபத்தூண் கல்வெட்டுக் கூறுகிறது. திரிபுவன வீரதேவன் காலத்தில் (கி.பி.12)ஆம் நூற்றாண்டு உலக விடங்கத்தைச் சேர்ந்த ஒருவர் இக்கோவிலில் சந்தி விளக்கு எரிக்க,அரை அச்சு பொன் கொடுத்ததை முன்பக்கக் கல்வெட்டுக் குறிக்கிறது. கிழக்குச் சுவரில் உள்ள சிறப்பு மிக்க கல்வெட்டால் ஊரின் பெயர் "உலக விடங்கம்' என்றும்,இறைவன் பெயர் "உலகவிடங்கீசர்' என்றும் அறியலாம். மகா மண்டபத்தில் ராசகேசரி வர்மன் சுந்தர பாண்டியன்(கொங்குப் பாண்டியன்)கல்வெட்டு ஒன்று அவன் இக்கோவிலுக்கு வரி நீக்கி நிலம் தானம் தந்ததைக் கூறுகிறது. அமைவிடம் ஈரோடு மாவட்டம்,பவானியில் இருந்து 12 கி.மீ.தொலைவில் வெள்ளித்திருப்பூர் செல்லும் பாதையில் ஒலகடம் திருக்கோவில் அமைந்துள்ளது.🌹
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - ShareChat
#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 கமன தவ என்றால் என்ன* 🌹 கருட கமன தவ சக்தி வாய்ந்த மகா விஷ்ணு ஸ்தோத்திரம். இது கர்நாடகாவின் சிருங்கேரியில் அமைந்துள்ள பழமையான அத்வைத வேதாந்த மடமான சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிஜியால் எழுதப்பட்ட ஒரு அழகான ஸ்லோகம். 1)கருட கமன தவ முதல் வசனத்தின் பொருள் கருடனின் மீது சஞ்சரிக்கும் விஷ்ணு பகவானே, உனது பாத தாமரைகள் தினமும் என் மனதில் பிரகாசிக்கட்டும். கடவுளே, என் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து, என் எல்லா பாவங்களையும் என் பாவங்களின் விளைவையும் நீக்குங்கள். முதல் வசனம் ஐந்து வரிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. 2)கருட கமன தவ இரண்டாம் வசனம் பொருள் மகா விஷ்ணு, தாமரை போன்ற கண்களை உடைய கடவுள், தாமரை போன்ற பாதங்களை பிரம்மா, இந்திரன் போன்ற பெரிய கடவுள்களால் வணங்குகிறார்கள் - நமுச்சி என்ற அரக்கனைக் கொன்றவர் மற்றும் சிவபெருமான், நமுச்சி என்ற அரக்கனின் தலையை அகற்றியவர், மேலும் வணங்கப்படுபவர். பெரிய மற்றும் மரியாதைக்குரிய மக்களால், தயவுசெய்து என் துன்பங்கள் மற்றும் பாவங்களிலிருந்து விடுபடுங்கள். 3)கருட கமன தவ மூன்றாம் வசனம் பொருள் ஓ பகவான் விஷ்ணு, ஒரு அற்புதமான பாம்பின் மீது உறங்குபவர் மற்றும் காமனின் தந்தை, எல்லா மனிதர்களிடமிருந்தும் மறுபிறப்பு மற்றும் இறப்பு பற்றிய பயத்தை முற்றிலும் அகற்றும் பெரியவர், ஓ பெரிய கடவுளே, தயவுசெய்து என் துன்பங்களிலிருந்து விடுபட்டு எனக்கு உதவுங்கள். என் பாவங்களிலிருந்து விடுபடுங்கள். 4)கருட கமன தவ நான்காவது வசனம் பொருள் ஓ மஹா விஷ்ணு, கையில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்திய பெரிய கடவுள், தீய மற்றும் அசுர அசுரர்களை அழிக்கும் துணிச்சலான இறைவன், மனிதர்களை தொந்தரவு செய்பவர், அவரது மக்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் அலங்காரமான இறைவன். ஓ பெரிய கடவுளே, தயவுசெய்து எனது எல்லா துன்பங்களையும் நீக்கி, எனது எல்லா பாவங்களையும் என் பாவங்களின் விளைவையும் அகற்ற எனக்கு உதவுங்கள். 5)கருட கமன தவ ஐந்தாம் செய்யுளின் பொருள் ஓ மஹா விஷ்ணுவே, எண்ணிலடங்கா, அளவிட முடியாத நற்பண்புகளை உடையவனே, காக்க முடியாதவர்களைக் காப்பவனே, தந்திரத்தாலும், விளையாட்டாலும், தேவர்களின் எதிரிகள் அனைவரையும் எளிதில் அழிப்பவனே, என் துன்பங்களையெல்லாம் நீக்கி, உதவி செய்வாயாக! நான் என் பாவங்கள் மற்றும் என் பாவங்களின் விளைவுகளிலிருந்து விடுபடுகிறேன். 6)கருட கமன தவ ஆறாவது செய்யுள் பொருள் ஓ பகவான் விஷ்ணு, மிகவும் கருணையும் கருணையும் கொண்ட கடவுளே, எல்லா கடவுள்களின் தலைவனும், இந்த கிருதியை எழுதிய பாரதி தீர்த்தத்தை, உனது பக்தர்களில் மிகப் பெரியவனாகக் காப்பாற்றுங்கள். அவனுடைய எல்லா துன்பங்களையும் பாதுகாத்து நீக்கி அவனுடைய எல்லா பாவங்களையும் அகற்று. இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து மகா விஷ்ணு பக்தர்களும் அவசியம் கேட்க வேண்டும்.. 🌹
🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ - ShareChat
SRIRAMAJAYAM *சூரைத் தேங்காய் உடைக்கும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?* 🌹 நமது வழிபாட்டு முறையில் இருக்கும் ஒரு வழக்கம் கோயில்களில் சிதறுக்காய் உடைப்பது ஆகும். எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்னரும் தடைகள் ஏதும் வராமல் இருக்க கோயிலில், குறிப்பாக பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் உள்ளது. தேங்காய் உடைப்பது என்பது பெண்களுக்கு துன்பத்தை கொடுக்கக்கூடிய செயலாக இருக்கும் என்பதால் பெண்கள் இதைச் செய்வதில்லை. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைப்பது நல்லதல்ல எனக் கூறப்படுகிறது. ‘சூரைத் தேங்காய் உடைத்தல்’ என்பது ஒரு நேர்த்திக்கடன் ஆகும். பொதுவாக, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைக்கும் வழக்கம் உள்ளது. தேங்காய் மீது சூடம் ஏற்றி தொழிற்கூடங்கள், கடைகள் போன்றவற்றைத் துவங்கும்போதும், அமாவாசை போன்ற தினங்களிலும் வணிக நிறுவனங்கள் முன்பு தேங்காய் உடைக்கப்படுகிறது. அதேபோல், புது மனை புகுதல், சுப நிகழ்ச்சி தொடக்கம் ஆகியவற்றின்போதும் சூரைத் தேங்காய் போடப்படுகிறது. பொதுவாக, எந்த நல்ல காரியம் தொடங்கும் முன்பும் முதலில் விநாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கம். இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதைப் பார்க்கலாம். ஒரு சமயம் விநாயகர் மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும் ஒரு யாகத்திற்காக புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘திரும்பிச் சென்று விடுங்கள்’ எனக் கூற, அதனை மறுத்த விநாயகர் அசுரனை தன் வழியில் இருந்து விலகிச் செல்ல கட்டளையிட்டார். ஆனால், அதைக் கேட்காத அசுரனும் விநாயகரையும் மற்ற முனிவர்களையும் தாக்கத் தொடங்கினான். இதனால் விநாயகர் யாகங்களுக்காக கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காயை அசுரன் மீது வீச, தேங்காய் சிதறுவது போல அசுரனும் பொடிப் பொடியாக சிதறினான். இதனால் தடைகள் அகன்று யாகத்திற்கு ஆனைமுகனும் மற்ற முனிவர்களும் புறப்பட்டனர். அன்று முதல் எந்த முக்கிய விஷயமாக இருந்தாலும், நினைத்த காரியம் வெற்றி பெறவும், புதிய செயலைத் தொடங்குவதாக இருந்தாலும், வெளியூருக்கு பயணிப்பதாக இருந்தாலும், சுப நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் சூரைத் தேங்காய் போடும் வழக்கம் உள்ளது. நாமும் எந்த காரியம் செய்யும் முன்பும் தடைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக விநாயகரை எண்ணி சிதறுக்காய் போட்டு வழிபடுவது வழக்கமாகி விட்டது. அவர் காட்டிய வழியில் தேங்காயை அவருக்குக் கொடுத்து எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு செய்தால் திருஷ்டி கழியும் என்பது ஒரு நம்பிக்கையாகும். தேங்காயை ஓங்கி தரையில் அடித்து உடைக்கும்போது அது சில்லு சில்லாக சிதறி ஓடும். அது போல ஆனைமுகனின் அருளால் நம்மை பீடித்திருக்கும் தோஷங்களும் விக்னங்களும் இந்த காய் உடைந்து சிதறுவது போல் நம்மை விட்டு சிதறி ஓடும் என்பது நம்பிக்கை. தேங்காய் உடைப்பதில் உள்ள தத்துவம் என்னவென்றால் தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான வெள்ளை நிற பருப்பும், நீரும் உள்ளது. உருண்டையான வெளி ஓடு பிரபஞ்சத்தைப் போன்றுள்ளது. உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கிறது. உள்ளிருக்கும் நீர் அதனால் விளையும் பரமானந்த அமுதத்தைப் போன்று இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளைப் பகுதியையும் நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கின்றது. இறைவன் சன்னிதியில் மாயையை அகற்றி இறைவனின் பேரருளை காட்டி பரமானந்த பேரமுதத்தை நுகரச்செய்யும் செயல்தான் சிதறு காய் போடுவதன் தத்துவமாகும். கஷ்டங்கள் சுக்குநூறாக சிதறிப் போக... சூரத் தேங்காய் உடைத்தல் என்பது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நேர்த்திக்கடனாகும். பொதுவாக விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைக்கும் வழக்கம் உள்ளது. நேர்த்திக் கடனுக்காக நல்ல, பெரிதான தேங்காயை தேர்ந்தெடுக்கின்றனர். பின்பு விநாயகர் சந்நிதி முன்பு அதற்காக வைக்கப்பட்டுள் கல்லில் அடித்து உடைக்கின்றனர். சிதறு தேங்காய் கோவிலில் உடைப்பது நம்மில் இருந்து வரும் வழக்கம். விநாயகர் தவிர மற்ற தெய்வங்களுக்கும் சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் சில பேரிடம் இருக்கிறது.சில மூலிகை செடிகளுக்கு உயிர் உண்டு என்று சொல்லுவார்கள். அதனால்தான் அந்த மூலிகைச் செடிகளை பறிக்கும் போது அதற்கு காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்ற வழக்கமும் நம்மிடத்தில் உண்டு. மூலிகை செடிகளை போலவே தேங்காய்க்கும் உயிர் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தேங்காயை நம் கோவில்களில் சிதறு தேங்காய் விடும் போது அதற்கும் சாப நிவர்த்தி செய்தால் தான் நம்முடைய வேண்டுதல் சீக்கிரத்தில் பலிக்கும். தேங்காய் உடைப்பதற்கு முன்பு ‘ஓம் சர்வ சக்கர டம்டம் ஸ்வாஹா’ என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு அதன் பின்பு தேங்காயை சிதறு தேங்காய் விட்டால் போதும். உங்களுடைய கோரிக்கைகள் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது.சிதறு தேங்காய் உடைக்கும் போது தான், தேங்காய் சுக்குநூறாக உடையும். ஆக சிதறுதே காய் விடும் போது தான் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தவிர மற்ற தேவைகளுக்காக நாம் தேங்காயை சுக்குநூறாக உடைக்க போவது கிடையாது. மற்ற நேரங்களில் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிதறுதேங்காய் விடும்போது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறி விடும்.திருஷ்டி சுற்றி சிதறு தேங்காய் உடைக்கும்போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை உச்சரிக்கலாம்.எத்தனை தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்கிறீர்களோ, அத்தனை முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எல்லாருடைய பிறப்பு சாதகத்திலும் முடக்கு நட்சத்திரம்,முடக்கு நட்சத்திரத்தின் அதிபதி,முடக்கு ராசிநாதன் இவைகள் காணப்படும் அவற்றை ஜோதிடர்களும், ஜோதிட முறைகளும் உங்களை குழப்பிவிட்டிருந்தால், உடனடியாக அருகில் இருக்கும் விநாயக பெருமானின் ஆலயத்திற்கு சென்று, அவரை மனம் உருக வேண்டி, தேங்காய் ஒன்றினை உடைத்து வந்தால் (சூரைத் தேங்காய்) உங்களுடைய முடக்கு நீங்கப்பெரும். முன்னோர்கள் வகுத்த முறைகளை பின்பற்றி நாளும் இறைவனைத் தொழுது நல்ல பலன்களைப் பெறுவோம். சீரும் சிறப்போடும் வாழ்வோம்.🌹 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - ShareChat
#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 மந்திரம் அக்னி காரியம்* 🌹 திருமணத்திலே அக்னி காரியம் என்பது மிக முக்கியமானது. ஆண்டாள் வாரணமாயிரம் என்கிற பதிகத்திலே திருமண முறையை நிரல் நிறையாக சொல்லிக் கொண்டு வருகின்றாள். இன்றைக்கு அந்த வரிசை யானது கொஞ்சம் முன் பின்னாக பின்பற்றப்பட்டு வந்தாலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பதிகத்திலே சொல்லப்பட்ட முக்கியமான நிகழ்வுகள் எல்லாமே இன்றைக்கும் நடந்து வருகின்றன. ஆண்டாள் நாச்சியார் அக்னி காரியத்தைப் பற்றி அழகாகச் சொல்லுகின்றாள். மணமக்களை மண வேதிகைக்கு அழைத்து வந்து அமர வைத்து அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து ஸங்க்ரமமாக ஹோமம் ஒன்றினைச் செய்ய வேண்டும். தமிழர் மரபிலும் இது உண்டு. அழல் ஓம்பல் என்று சொல்லுவார்கள். காரணம், தேவர்களோடு நம்மைத் தொடர்பு படுத்தி அந்த தெய்வங்களின் கருணையை, ஆசிகளைப் பெற்றுத் தருவது அக்னி தேவன் தான். அக்னி இல்லாவிட்டால் இந்த உயிர் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. நெருப்பு என்று சொல்லப்படுகின்ற பஞ்ச பூதங்களிலே ஒன்றான இந்த அக்னியால் தான் உலகமும், உயிர்களும் வாழ்கின்றன. அக்னியே இந்த திருமண நிகழ்வுகளுக்குச் சாட்சியாக விளங்குகின்றான். அந்த அக்னியின் வழியாகத்தான் மற்ற தேவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். ஆகவே தீ வளர்த்து ஹோமம் செய்வது என்பது திருமணத்திலே ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த ஹோமத் தீயானது ஓங்கி வளர வேண்டும். அதன் நறுமணப் புகையானது அந்த இடம் முழுவதும் பரவ வேண்டும். ஹோமத்தீ குறைந்தது 14 அங்குலம் ஓங்கி ஒளி வீசவேண்டும். இதனை எப்படிச் செய்வது என்பதை ஆண்டாள் கீழ்க்கண்ட பாசுரத்திலே மிக அழகாக வலியுறுத்துகின்றார். வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பருதிவைத்து காச்சின மாகளிறன்னான் என் கைப்பற்றி தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்! - என்பது பாசுரம். இந்த அக்னியை எப்படி வளர்ப்பது? அதனை யார் வளர்ப்பது? அதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன? என்பதையெல்லாம் ஆண்டாள் இந்தப் பாசுரத்திலே விளக்குகின்றாள். இதனை அக்னிமுகம் அல்லது அக்னிகாரிகா என்று சொல்லுகிறார்கள். இதனை எப்படிச் செய்வது என்று பார்ப்போம். முதலில் இடத்தைச் சுத்தி செய்ய வேண்டும். படியிலே அக்னியைச் சேர்த்து ஸ்தலசுத்தி செய்த இடத்தில் 2 தர்ப்பங்களை எடுத்து தெற்காக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 3 கோடுகளும் தெற்குக்கு வடக்காக 3 கோடுகளும் கிழிக்க வேண்டும். பிறகு அந்த தர்ப்பத்தை தொன்னையிலே ஊற்றி வைக்கப்பட்ட தீர்த்தத்தினால் புரோட்சித்து எறிந்து விடவேண்டும். பிறகு அந்தத் தீர்த்தத்தைத் தொட வேண்டும். அந்த தீர்த்தத்தை கீழே கொட்டிவிட்டு வேறு தீர்த்தத்தை தொன்னையிலே சேர்த்து அந்த தொன்னையை அக்னிக்குக் கிழக்கே வைக்க வேண்டும். அக்னிக்கு 4 திசைகளிலும் நான்கு நான்கு தர்ப்பங்களை எடுத்து கிழக்கு நுனியாகவும், வடக்கு நுனியாகவும் வைக்க வேண்டும். இதனைத் தான் ஆண்டாள் பாசிலை நாணல்படுத்து என்று பாடுகின்றாள். நாணல் என்பது தர்ப்பப்புல். புரசஇலை பெரியது ஒன்று சின்னது ஒன்று, நீள் தொன்னை, புரோட்சித்து, 20 புரசங்குச்சி அல்லது அரசங்குச்சி எடுத்து தொன்னைகளில் இரண்டு இரண்டாகக் கவிழ்த்து வைத்து அதன்மேல் 2 தர்ப்பத்தினால் செய்த ஆயாமத பவித்ரத்தை வைத்துவிட்டு கவிழ்த்து வைத்த அந்த ப்ரோட்சணி தொன்னையை நிமிர்த்தி வைத்து அக்னிக்கு மேற்கே உள்ள தர்ப்பத்தில் வைத்து அதிலே கொஞ்சம் தீர்த்தத்தைச் சேர்க்க வேண்டும். ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக வைத்து தொன்னை ஜலத்தை அப்படியே மேலும் கீழுமாக அரைக்க வேண்டும். தொன்னை புரச இலை இவற்றை நிமிர்த்து தொன்னை ஜலத்தை ஆயாமத பவித்ரத்தினால் 3 தரம் ப்ரோட்சிக்க வேண்டும். மீதமுள்ள தீர்த்தத்தைக் கொட்டிவிட்டு வேறு தீர்த்தத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ப்ரணீதி தொன்னையை எடுத்து எதிர் பக்கத்திலே வைக்க வேண்டும். அதில் தீர்த்தம் மற்றும் அக்ஷதையையும் சேர்த்து பவித்ரத்தினால் மேலும் கீழுமாக அரைத்து அந்த தொன்னையை நெற்றிக்கு நேராக தூக்கிப் பிடிக்க வேண்டும். நுனியை நறுக்கி தீர்த்தத்தைத் தொட்டு நெய் தொன்னையில் சேர்த்து மறுபடியும் 2 தர்ப்பத்தை அக்னியில் கொளுத்தி நெய் தொன்னையை சுற்றி எறிந்து விடவேண்டும். அந்தத் தணலை அக்னியில் சேர்த்து நெய்யை ஆயாமத பவித்ரத்தினால் அரைத்து பிறகு அந்த பவித்ரத்தை அவிழ்த்து தீர்த்தத்தைத் தொட்டு தர்ப்பத்தை அக்னியில் சேர்க்க வேண்டும். புரச இலைகளை அக்னியில் காய்ச்சி தர்ப்பத்தினால் துடைத்து மறுபடியும் காய்ச்சி இலையை வைத்துவிட்டு தர்ப்பத்தை தீர்த்தத்தைத் தொட்டு அக்னியில்சேர்க்க வேண்டும். புரங்குச்சி கட்டு 20ல் இருந்து கொஞ்சம் தடித்த குச்சியை மேற்குப் பக்கத்திலும், மெல்லிய நெட்டையான ஒரு குச்சியை தெற்குப் பக்கத்திலும், மெல்லிய குட்டையான ஒரு குச்சியை வடக்குப் பக்கத்திலும் வைத்து 2 குச்சிகளை எடுத்து மேற்குக் குச்சியைத் தொட்டுவிட்டு அக்னியின் முன் பக்கத்தில் தெற்கிலும் வடக்கிலும் மூலையில் வைக்க வேண்டும். அப்பொழுது சொல்லப்படும் மந்திரம்: ``அதிதேநுமந் யஸ்ய அநுமதேநு மந்யஸ்ய சரஸ்வதேநு மந்வஸ்ய தேவசவித: ப்ரஸூவ’’ - என்று சொல்லி அக்னியை தீர்த்தத்தினால் பரிசேஷனம் பண்ண வேண்டும். இதனை ஆண்டாள் பாசிலை நாணல் படுத்திப் பரிதி வைத்து என்று பாசுரத்திலே சுட்டிக் காட்டுகின்றாள். மீதியுள்ள 15 குச்சிகளையும் நெய் தொன்னையில் நனைத்து, அஸ்ய மாணவகஸ்ய ப்ரஜாபத்யாதி விரத உபக்ரம உத்சர்ஜன ஹோமகர்மணி ப்ரஹ்மண் இத்மம் ஆதாஸ்யே என்று ப்ரஹ்மாவை கேட்டுவிட்டு அக்னியிலே குச்சிகளைச் சேர்க்க வேண்டும். அதாவது இந்த ஹோமத்தை ப்ரஹ்மாவின் அனுமதிபெற்றுச் செய்வதாகப் பொருள். ப்ரஹ்மாவும் உடனே அதை அனுமதிப்பதாக ஒரு வார்த்தையை நாமே கூறிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ப்ரஹ்மாவை மனதில் தியானித்து சின்ன புரச இலையில் நெய்யை எடுத்து வடமேற்கிலிருந்து தென்கிழக்காக அக்னியில் தாரையாகச் சேர்க்க வேண்டும். அப்பொழுது சொல்ல வேண்டிய மந்திரம். ப்ரஜாபதயே இதம் நமம: பெரிய இலையில் நெயை எடுத்து தென்மேற்கிலிருந்து வடகிழக்கில் நெய்யை சேர்த்து அக்னயே ஸ்வாஹ: என்று அக்னிமத்தியில் ஹோமம் செய்ய வேண்டும். அக்னயே இதம் நமம: என்று சொல்லி மறுபடியும் நெய் எடுத்து ஸோமாய ஸ்வாஹ: என்று தென் பாகத்திலேசேர்க்க வேண்டும். சேர்த்துவிட்டு ஸோமாய இதம் நமம: என்று சொல்லி மறுபடி நெய் எடுத்து ஓம் அக்னயே ஸ்வாஹ: என்று மத்தியில் ஹோமம் செய்ய வேண்டும். செய்துவிட்டு அக்னயே இதம் நமம: என்று சொல்லி மறுபடியும் நெய்யை எடுத்து ஓம் பூத் புவ: ஸ்வ: ஸ்வாஹ: என்று ஹோமம் செய்து ப்ரஜாபதயே இதம் நமம: என்று சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு பகவான் விஷ்ணுவை நினைத்துக் கொண்டு த்வாதஸ மந்திரங்களாலோ இல்லாவிட்டால் நாராயண ஸூக்தத்தாலோ அல்லது நாராயண உபநிஷத் வாக்கியங்களாலோ ஹோமம் செய்யலாம். இல்லாவிட்டால் அக்னியில் நாம் பகவானைத் தியானித்து ஹோமத்தைச் செய்யலாம்.🌹
🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ - ShareChat
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ *முடியாதவனை மன்னித்துவிடு! விரும்பாதவனை தண்டித்து விடு! என்கிறது இந்து தர்மம்!* 🌹 தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி! ஆனால் அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் முடியாதவன் அனுதாபத்துக்குரியவன். நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன? குறைந்தபட்சம் சில ஊர்களாவது, சில வீடுகள் ஆவது கொடுங்கள் என்பதுதான். செய்ய முடியாதா துரியோதனனால்? முடியும் ஆனால் விரும்பவில்லை. அதன் விளைவே பாரத யுத்தம். அனுமானும் விபீஷணனும் சொன்னபடி சீதையை திரும்பக் கொண்டு போய் விட்டு விட்டு வந்திருக்க முடியாதா இராவணனால்? முடியும் ஆனால் விரும்பவில்லை. அதன் விளைவே ராம - ராவண யுத்தம். உன்னால் முடிந்ததைச் செய் என்று ஏன் பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள்? பெரிய விஷயத்தை செய்ய நினைத்தேன். முடியவில்லை என்று வருந்தி கொண்டு இருக்காதே அவ்வளவு முடியுமோ அவ்வளவு செய் என்பது அதன் பொருளாகும். என் உடம்பு என் கையளவில் எட்டுச்சாண் உயரம் இருக்கிறது என்றால் எறும்பின் உடம்பும் அதன் கையளவு எட்டுச்சாண்தான். உணவைச் சமைத்ததும் யாராவது ஒரு அன்னக்காவடிக்கு பிச்சைக்காரனுக்கு போட்டு விட்டு சாப்பிடுவது என்ற பழக்கம் இந்துக்களுக்கு உண்டு. பெட்டி நிறைய பணம் இருக்கிறது. பெட்டிச் சாவியும் செட்டியார் மடியில் இருக்கிறது. கொட்டிய கண்ணீரோடு திருமணமாகாமல் கோதையர் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர் கொஞ்சம் பெட்டியைத் திறந்தால் இறைவன் அவர்களுக்கு சொர்க்க வாசலை திறப்பான். இவரால் முடியும். ஆனால் செய்ய முடியவில்லை. இந்து தர்மத்தில் இவருக்கு உரிய தண்டனை என்ன? வாழ்க்கையை ஓரளவுக்காவது அனுபவிக்க விரும்பியவர்களுக்கு அதனை மறுத்தார் அல்லவா அதனால் இவர் எதனையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். பல லட்சம் செலவு செய்து இவர் தம் பெண்ணுக்கு கல்யாணம் செய்திருப்பார். அது மலடியாக போய்விடும் அல்லது வாழா வெட்டியாக போய்விடும். அறம் செய்ய விரும்பு என்கின்றார் ஔவைப்பாட்டி. செய் என்று அவர் ஆணையிடவில்லை. விரும்பும் என்றுதான் சொன்னார். காரணம் செய்ய முடியாதவரும் இருக்கலாம் அல்லவா? அவர் விரும்பினால் கூட போதும் அதுவே கருணையின் பரப்பளவாகும். ஹிட்லரால் யூதர்களை மன்னித்து இருக்க முடியாதா? போரின் நாசத்தை தடுத்திருக்க முடியாதா? அவன் விரும்பவில்லை. விளைவு மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ அப்படியே இறைவன் அவனை நடத்தினார். வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால் கூட அதற்கு பதிலடி உனக்கு கிடைக்கிறது. வண்டி மாட்டுக்கு நீ வைக்கோல் போட்டால் கூட அதற்கு கைமாறாக ஒரு கவளச் சோறு உனக்கு கிடைக்கிறது. ஆகவே விரும்பு! முடிந்தால் செய்! முடியாவிட்டால் விரும்பு! விரும்பு என்ற உடனே தஞ்சாவூரை பார்த்து இந்த நிலமெல்லாம் நம்முடைய நிலமாக இருக்கக் கூடாதா என்று விரும்பாதே. அதன் பெயர் விருப்பமல்ல! ஆசை. விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைதான் குறிக்கும். தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது! திட்டமிடுவதாகும். ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு, அடுத்தவனுக்கு அரை ஏக்கர் கொடுக்க விரும்பாதவன் இறுதியில் அனுபவிக்கப் போவது எத்தனை ஏக்கர்? வெறும் ஆறடிதான். இந்து சம்பிரதாயத்தில் அது கூட கிடையாது ஆறடி நிலத்தில் மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள். இறைவன் தன்னுடைய விருப்பத்தை பூமியில் எப்படி பரவலாக வைத்தான்? நீ சிந்தும் துளி கண்ணீர் எறும்பு குளிக்கும் படித்துறை ஆகிவிடுகிறது. கழுதைக்கு உணவாகட்டும் என்று தானே காகிதத்தை கண்டுபிடிக்கும் அறிவை மனிதனுக்கு கொடுத்தான். விளைவுகளில் நல்லவை எல்லாம் இறைவனது விருப்பத்தின் விளைவுகளே! நெல் என்ற ஒன்றை அவன் படைக்க விரும்பாமல் இருந்திருந்தால் சோறு என்ற ஒன்றை நாம் கண்டிருக்க மாட்டோம். இறைக்கின்ற கேணி ஊறுமென்று ஏன் கூறுகிறார்கள்? கொடுக்கின்ற இடத்திலேயேதான் இறைவன் அருள் சுரக்கும் என்பதற்காக! தேங்கிய நீர் தேங்கியே கிடந்துவிட்டால் நோய்களுக்கு அது காரணமாகிறது. தேங்கிய செல்வமும் தேங்கி கிடந்துவிட்டால் பாவங்களுக்கு அது காரணமாகிவிடுகிறது. இல்லாமை கொடுமை அல்ல! இயலாமை குற்றம் அல்ல! விரும்பாமையே பாவமாகும்! மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்துவிட்டால் சம தர்மம் என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபட போகிறது? ஒவ்வொரு மனிதனும் ஏதோ அகத்தியர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் இன்னும் ஆயிரம் ஆண்டு காலத்துக்கு வாழப் போவது போலவும் திட்டமிட்டு பொருள்களை பதிக்க வைக்கிறார்கள். குருட்டு பிச்சைக்காரனின் சட்டியில் 10 பைசாவை போட்டுவிட்டு 20 பைசா சில்லறை எடுப்பவனும் இருக்கிறான். செய்ய விரும்பாமையும் திருட்டுத்தனமுமே சமூகத்தை பாழ்படுத்துகின்றன. பிள்ளையே இல்லாத ஒரு கோடீஸ்வரர் எல்லையே இல்லாத ஒரு வீடு கட்டி இருக்கிறார். கணவரும் மனைவியும் மட்டுமே மாடி ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள். அவர் விரும்பினால் எத்தனையோ சுற்றங்களை வாழ வைக்கலாமே! மனக்கதவு அடைத்துக் கொண்டது! அதனால் வாசல் கதவும் அடைப்பட்டு விட்டது. கடைசியில் அவரது சமாதியாவது அந்த வீட்டிற்குள் அமையப்போகிறதா என்றால் இல்லை. அவரது வேலைக்காரனை எரித்த இடத்திலேயேதான் அவரையும் எரிக்கப் போகிறார்கள். வெறும் பிரமை ,மயக்கம் சகலமுமே நிலையாகி விட்டது போல் தனக்குள்ளே ஒரு தோற்றம். இத்தகைய மூடர்களுக்காகவே இந்து மதம் நிலையாமை போதித்தது. திரும்பத் திரும்ப நீ சாகப் போகிறாய் என்று சொல்வதன் மர்மம் இதுதான். நிலையாமையை எண்ணி விரும்பாமையை கைவிடு! உன்னைப் பற்றிய புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படும்போது எத்தனை வீடு கட்டினாய் என்று கணக்கு எடுக்கப்படுவதில்லை. எவ்வளவு செய்தாய் என்பதே ஏட்டுக்கு வருகிறது. எந்த நிலத்திலும் ஏதாவது ஒன்று விளையும் குறைந்த பட்சம் பறங்கியும் பூசணியுமாவது விளையும். நீ குறைந்தபட்சம் விரும்பியதை செய்தால் அதுவே உன்னை பெரிய தோட்டகாரனாக்க காரணமாகிவிடும். மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்றும் திருஷ்டிபடும் என்றும் இந்துக்கள் சொல்கிறார்கள். பிறருக்கு பகிர்ந்து உண்ணாமை பாவம் என்று அப்படி சொல்லுகிறார்கள். சரியோ தவறோ செய்ய முடியாதவனுக்கு நல்ல இருதயத்தையும் செய்ய விரும்பாதவனுக்கு செல்வத்தையும் வழங்கி இருக்கிறான் இறைவன். கடலில் நீரை வைத்து அதை குடிக்க முடியாமல் ஆக்கியவன் அல்லவா அவன். இதற்கு காரணம் உண்டு. ஒவ்வொருவருடைய புத்தியையும் அளவெடுப்பதற்கு இறைவன் நடத்தும் நிலை அது. அனுபவத்தின் மூலம் ஒன்று நன்றாக தெரிகிறது செய்ய முடிந்தும் விரும்பாதவனுடைய செல்வம் மோசமான முறையில் அழிந்து போகிறது. அவனுடைய மரணமும் அப்படியே! செய்ய விரும்பி முடியாதவன் உடைய நிலை முடிவில் நிம்மதி அடைகிறது. காரணம் அவனிடம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆண்டவனுக்கு தெரியும். இதுவரையில் தர்மம் செய்யாத பணக்காரன் நிம்மதியாக செத்ததும் இல்லை. அவன் சந்ததி அந்த செல்வத்தை அனுபவித்ததும் இல்லை! ஏன் பலருக்கு சந்ததியே இல்லை! ✅ அர்த்தமுள்ள இந்து மதம்🌹
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - ShareChat
#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 *காளிங்க நர்த்தன தத்துவம்......!!!* கிருஷ்ணரின் லீலைகள் சொல்லில் அடங்காதது. அவரது லீலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். அவர் செய்த லீலைகளில் ஒன்றுதான், யமுனை நதியில் வசித்த ஐந்து தலை நாகமான காளிங்கனை அடக்கி, அதன் தலையில் நர்த்தனம் புரிந்தது. யமுனை நதியில் வசித்து வந்த காளிங்கனின் விஷ மூச்சுக் காற்றால், யமுனை நதியும், அதன் கரையில் இருந்த சோலைகளும் நஞ்சாகிப் போயின. இதனால் காளிங்கனை அங்கிருந்து கடலுக்கு செல்ல, கிருஷ்ணர் பணித்தார். அவன் மறுத்ததால் அவனை அடக்கி, அவனது தலையில் நர்த்தனம் புரிந்தார். இந்த காளிங்க நர்த்தன தத்துவத்துக்குள் சிறைப்பட்டிருக்கும் ஆழ்ந்த கருத்தை பக்தர்களாகிய நாம் உணர வேண்டும். அழைத்த குரலுக்கு தன் பக்தரின் குறை தீர்த்த வண்ணம் அருள்வதில் என்றும் துணை நிற்பவர் பகவான் கிருஷ்ணன் . குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று அவன் பொற்பாதங்களை பற்றி சரணடைந்தால் வாழ்வில் என்றும் குறைவின்றி நிறைவாக்குவான் பகவான் கிருஷ்ணன். மனித மனம் என்பது தான் பாம்பு. மனிதனின் ஐம்புலன்களும், பாம்பின் ஐந்து தலைகள். எனவே ஐம்புலன்களின் வழியாகத்தான் மனம் என்ற பாம்பு, நஞ்சினை (தீமைகளை) கக்குகிறது. நாம் ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கி, பிறருக்கு தீமை செய்யாதவாறு ஆள வேண்டும் என்பது தான் இந்த காளிங்க நர்த்தனத்தின் உயர்ந்த தத்துவமாகும்.🌹
🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ - ShareChat
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ *ஸ்ரீ மகாவிஷ்ணு திருடனாக*🌹 காலதூஷகன் எனும் திருடன் இவர் பெரு வணிகர் வீரகுப்தன் மகன். காலதூஷகன் வணிகம் செய்ய பிடிக்காமல் திருடனாக ஆனான். தினம் திருடப் போகும் முன் மகாவிஷ்ணுவிடம் வந்து தன்னை யாரும் அடையாளம் காணாது காப்பாற்ற வேண்டும் மேலும் தனது தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு செல்வான். அவன் திருடிய செல்வத்தில் பாதியை மகாவிஷ்ணுவிடம் கொடுப்பதாக நினைத்து கோவிலில் சேர்ப்பான். மணப்படை ராஜ்ஜியத்தின் அரண்மனைக்குள் புகுந்து இவனது கூட்டம் திருடும் போது கூட்டத்தினர் காவலர்களிடம் சிக்கிக்கொண்டனர். காலதூஷகன் தப்பித்தார். கூட்டத்தலைவன் காலதூஷகனை பிடிக்க காவலர்களுக்கு உத்திரவிட்டார் மன்னர். காலதூஷகன் ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் வந்து தன்னை காப்பாற்றும்படி சரணடைந்தார். ஸ்ரீ மகா விஷ்ணு திருடனாக உருவத்தை மாற்றி மன்னர் முன் நின்றார். மன்னர் "உன்னை பார்த்தால் திருடனை போல தெரியவில்லை. ஏன் திருடுகிறாய்" என்று கேட்டதற்கு அரண்மனை செல்வங்கள் மக்கள் நலனுக்கு பயன்படாமல் உங்களது சொந்தங்களால் வீணடிக்கப்படுகிறது. பணத்திற்கு நான்கு பங்காளிகள் எனும் தயாதிகள் உண்டு. அவர்கள் தர்மம் அக்னி திருடன் அரசன் என்போர் நான்கு தயாதிகள். அரசனானவன் மக்களை காத்து தர்மத்தை காக்க வேண்டும். நீ தர்மம் தவறி நடக்கிறாய். அதனை உணர்த்தவே நான் இங்கு வந்தேன் என கூறி மறைந்தார். மன்னன் தன் தவறை உணர்ந்து தனது கஜானாவில் இருந்த செல்வத்தை மக்களுக்கு பகிர்ந்தார். அந்தப் பகுதி மக்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்ரீ கள்ளபிரானாக ஆனார். கள்ளனை தரிசிக்க நாம் ஸ்ரீ வைகுண்டம் செல்ல வேண்டும்... திருச்செந்தூரில் இருந்து 30 km.🌹
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - ShareChat
#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 *எப்போதும் இனிமையாக*... *எப்போதும் இனிமையாக பேசுங்கள்*...🌹 ஒருவர் வெகுநாட்களாக கொடியநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, சமயகுரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்த நோயாளியை பார்த்த சமயகுரு, ‘நாம் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்’ எனக்கூறி மனமுருக அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அனைவரும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு சமயகுரு, ‘இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகிவிடும். இத்தனை பேரும் உங்களுக்காக வேண்டியிருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும்’ எனக் கூறினார். அந்த கூட்டத்தில் ஒருவன் சமயகுரு சொன்னதைக் கேட்டதும் நையாண்டித்தனமாக சிரிக்கத் தொடங்கினான். ‘வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா?’ எனக்கூறி சிரித்தான். அதற்கு அந்த சமயகுரு, ‘இந்தக் கூட்டத்திலேயே மிகப்பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்’ எனச் சொன்னார். இதைக் கேட்டதும் அவன், ‘நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை அடித்துக் கொன்று விடுவேன்’ என்றபடி அடிக்கப் பாய்ந்தான். பதற்றமே இல்லாத அந்த சமய குரு, ‘முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, இந்தக் கடுமையானச் சொற்கள் உங்களை கொலை செய்யுமளவிற்குத் தூண்ட முடியுமென்றால், நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்’ என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான். நம் வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. ‘கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்’ இனிமையான வார்த்தைகள் நேர்மறையான மாற்றங்களையும், தீமையான வார்த்தைகள் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. வார்த்தைகள் கூர்மையானப் பட்டயம் போன்றவை. பயன்படுத்துகின்றவரைப் பொறுத்து அதன் தன்மை வெளிப்படுகிறது.🌹
🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ - & & - ShareChat