#_அகத்திய_முனிவர் #அருளிய_சரஸ்வதி_ஸ்துதி (
(அகஸ்தியர் கிருதம் சரஸ்வதி ஸ்தோத்திரம்) என்பது மாணவர்களுக்குத் தடைகளை நீக்கி அறிவை வழங்கும் ஒரு துதி ஆகும். இந்தத் துதியைப் பாராயணம் செய்வதால் வாழ்வில் தடைகள் நீங்கி, கல்வி மற்றும் ஞானம் சிறக்கும் என நம்பப்படுகிறது.
அகத்தியர் அருளிய சரஸ்வதி ஸ்துதி:
யா குந்தேந்துதுஷார-ஹாரதவலா யா ஶுப்ரவஸ்த்ராவ்ருதா யா வீணாவரதண்ட-மண்டிதகரா யா ஶ்வேதபத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுதஶங்கர-ப்ரப்ருதிபிர்தேவை꞉ ஸதா பூஜிதா ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி꞉ஶேஷஜாட்யாபஹா
தோர்பிர்யுக்தா சதுர்பி꞉ ஸ்படிகமணிமயீமக்ஷமாலாம் ததானா
கமலாகரபுஷ்பா ச காமரூபே நமோ நம꞉ கர்மதா³யை நமோ நம꞉
பொருள்:
குந்த மலர், சந்திரன், பனித்துகள், முத்துமாலை போன்றவற்றைப் போன்று தூய்மையான வெண்மை நிறத்தைக் கொண்டவளே.
வெண்மையான ஆடையை உடையவளே, கையில் வீணையை ஏந்தியிருப்பவளே, வெண்தாமரையின் மேல் அமர்ந்திருப்பவளே.
பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களால் எப்போதும் வழிபடப்படுபவளே.
முழுமையான அறியாமையை நீக்கி என்னைக் காக்கும் சரஸ்வதி தேவியே.
வெண்மையான பளிங்குக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட ஸ்படிக மாலை அல்லது அக்ஷரமாலையைத் தன் நான்கு கரங்களில் தாங்கியிருப்பவளே.
காமரூபியே, தாமரைக் குளத்தில் மலரும் மலர் போன்று பேரழகுடையவளே, எனக்குக் கருணையுடன் வாழ்வளிப்பவளே
சரஸ்வதி தாயே போற்றி 🙇🏽♂️🙏🏽 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #navarathiri