இது கரண்டி மட்டுமல்ல கார் ஸ்டேரிங்கும் பிடிக்கும் கை👍✨️✨️ #gethu girls😎 #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #👏Inspirational videos #🕴 என் தனிப்பட்ட திறமை
Fishermen in Russia just pulled up a mermaid #👌அருமையான ஸ்டேட்டஸ் #👏Inspirational videos #🏞இயற்கை காட்சி
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை:
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதனிடையே, தொடர்மழை காரணமாக தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை:
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. அது இன்று மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை:
19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது.
21-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று கனமழையா?
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்று நள்ளிரவு முதலே நகரின் பல பகுதிகளில் மிதமான மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கருமேகங்கள் சூழ்ந்தபடி ஆங்காங்கே லேசான மழை தொடர்ந்து வருகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை;
தமிழக கடலோரப்பகுதிகள்:
18-11-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
18-11-2025: அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என #🔴இன்றைய முக்கிய செய்திகள்
#💞Feel My Love💖 #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #💘Love feel Forever 💌 #💑கணவன் மனைவி காதல்💞 #👌அருமையான ஸ்டேட்டஸ்
#🤣 குட்டீஸ் வேடிக்கை வீடியோக்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #👏Inspirational videos #💑கணவன் மனைவி காமெடி😂 #🤣 லொள்ளு
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🤣 குட்டீஸ் வேடிக்கை வீடியோக்கள் #💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #😇அழகிய குழந்தைகள் #👶குழந்தைகள் உலகம்
இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்ற தனுஷ் தமிழில் இட்லி கடை கொடுத்த பாசிட்ட்வி ரெஸ்பான்ஸோடு ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தேரே இஷ்க் மெய்ன் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்க கீர்த்தி சனோன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படமானது வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படி தமிழ், இந்தி என பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ் மீது அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவது வழக்கம்.
அந்த வகையில் தனுஷ் படத்தில் நடித்திட வாய்ப்பு வழங்குவதாக கூறி, 'கமிட்மென்ட்' என்ற பெயரில் தனுஷுடன் 'அட்ஜஸ்ட்மெண்ட்' கேட்டு மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் தந்ததாக மான்யா குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் நடிகை மான்யா தெரிவித்துள்ளார். இதனை நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். #🔥 தனுஷ் மீது நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு😮 #🔴இன்றைய முக்கிய செய்திகள்
தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.170க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் பவுனுக்கு ரூ.2880 சரிந்துள்ளது. இதேபோல, வெள்ளி விலையும் போட்டிப்போட்டு குறைந்து வருகிறது. கடந்த 14ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. 14ம் தேதி தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.93,920க்கு விற்றது. தொடர்ந்து 15ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கும், பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு பவுன் ரூ.92,400க்கும் விற்றது. தொடர்ந்து 2 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 வரை குறைந்தது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது.
அதில் தங்கம் விலை மேலும் குறைந்திருந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320க்கும் விற்றது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2880 குறைந்துள்ளது.
வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தொடர்ந்து பண்டிகை வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.173க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்றது.
இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.170க்கு விற்கப்படுகிறது #🔴இன்றைய முக்கிய செய்திகள்
ஆயுர்வேதத்தில், வேம்பு மிகவும் மதிப்புமிக்க மூலிகைகளில் ஒன்றாகும். வேம்பின் மருத்துவ மற்றும் குணப்படுத்தும் பண்புகளை பலரும் அங்கீகரிக்கின்றன. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மரத்தின் மென்மையான கிளைகளை பல ஆண்டு காலமாக பற்களை சுத்தம் செய்ய பல் துலக்கும் கருவியாக(Toothbrushing) பயன்படுத்தப்படுகிறது.
வேம்பில் உள்ள நன்மைகள் என்ன..?
வேம்பில் நிம்பிடின், நிம்பின், நிம்போலைடு, அசாடிராச்டின், காலிக் அமிலம், எபிகாடெசின், கேட்டசின் மற்றும் மார்கோலோன் போன்ற தாவர வேதியியல் கூறுகள் உள்ளன. வேம்பின் முக்கிய செயலில் உள்ள கூறு அசாடிராச்டின் ஆகும். இது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்க உதவும் ஒரு பயனுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
வேப்பங்குச்சியால் பற்களை செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
ஈறுகளுக்கு நன்மை:
வேப்ப மரத்தின் குச்சியை கொண்டு பல் துலக்குவது ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்கிறது. இது ஈறுகளை வலுப்படுத்தி அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஈறு தொற்றுகளையும் தடுக்கிறது.
பற்களை வெண்மையாக்கும்:
வேப்பங்குச்சியில் பற்களில் உள்ள மஞ்சள் நிற அடுக்கை அகற்ற உதவும் சில பொருட்கள் உள்ளன. இது இயற்கையாகவே பற்களை வெண்மையாக்கி பளபளப்பாகக் காட்டுகிறது. நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷ்..? ஏன் உடனடியாக மாற்றவது முக்கியம்..?
வாய் துர்நாற்றத்தை நீக்கும்:
வேம்பின் இயற்கையான கசப்பான சாறு வாய் துர்நாற்றத்தை நீக்கி வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. எனவே, கிராமப்புறங்களில் பலர் தினமும் எலுமிச்சை குச்சியால் பல் துலக்குகிறார்கள்.
பாக்டீரியாக்களை கொல்லும்:
பண்டைய காலங்களில், மக்கள் வேப்பம் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினர். வேம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, அவை வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
இயற்கை பற்பசை:
வேப்பம் குச்சியால் பல் துலக்கும்போது, அந்தக் குச்சியை மெல்லுவதால், அதன் சாறு வாயில் பரவுகிறது. இந்த சாறு ஒரு இயற்கை பற்பசையாக செயல்படுகிறது.
குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை:
உங்களால் தினந்தோறும் வேப்பங்குச்சியால் பல் துலக்க முடியவில்லை என்றால், வாரத்திற்கு ஒரு முறை வேப்பங்குச்சியில் பல் துலக்குவது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை தொற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. அதன்படி, நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதை முயற்சி செய்யலாம். பல் ஆரோக்கியத்தை அழிக்கும் பழக்கவழக்கங்கள்.. இவற்றை தவிர்ப்பது நல்லது..!
வேப்பங்குச்சியை எப்படி பயன்படுத்தலாம்..?
வேப்ப மரக்கிளைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. முதலில், ஒரு கிளையின் மெல்லிய பகுதியை எடுத்து ஒரு பகுதியில் மெதுவாக மெல்லுங்கள். இதன் கடினமான முட்கள் வெளியேறி, மெல்லிய பகுதி பிரஸ் போல் செயல்பட்டு, உங்கள் பற்களின் ஒவ்வொரு மூலைகளையும் சுத்தம் செய்கிறது. #⏱ஒரு நிமிட கதை📜 #😎Summer ஹெல்த் டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம்
விரல்களைப் பற்றி பொதுவான குறிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை இப்பதிவில் காண்போம்.
1. கை விரல்களில் மடிப்புகள் இல்லாத செழுமையாக அமையப்பட்ட விரல்களை உடையவர்கள் உலகத்தில் நன் மதிப்பும், நல்ல வாழ்க்கையும் அமையப் பெற்று மகிழ்ச்சியுடன் விளங்குவார்கள். விரல்கள் தட்டையாகவும், முனைகள் சதுரமாகவும் அமையப் பெற்றவர்கள் பொறியியல் துறையில் சிறந்த நிபுணர்களாக விளங்குவார்கள். விரல்கள் குட்டையாக இருப்பவர்கள் மற்றவர்களின் குண தோஷங்களுக்கு தகுந்தவாறு நடந்து கொள்வார்களாம்.
2. ஆட்காட்டி விரல் நடுவிரலுக்கு சமமான நீளம் உடையதாக வளர்ந்திருந்தால் அவர்கள் உல்லாசப் பிரியர்களாக இருப்பார்கள். சுவையான உணவுகளை அறுந்துவதிலும், பகட்டான ஆடைகளை அணிவதிலும் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்குமாம்.
3. விரல்களின் நுனி கூர்மையானதாகவும் குவிந்தும் இருப்பவர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்குவார்கள் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
4. கட்டை விரல் நுனியானது சுண்டு விரலில் நடு மையக்கணு வரையில் நீண்டிருப்பவர்கள் சிற்பம், ஜோதிடம் போன்ற நுண்கலைகளில் நிபுணர்களாக விளங்குவார்கள். கற்பனை சக்தி மிக்க அவர்களுக்கு இத்தகைய அமைப்பு காணப்பட்டால் அவர்கள் எந்த விஷயத்தையும் மிகவும் சீக்கிரமாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்களாம்.
5. கட்டை விரலில் வெளிப்புற ஓரத்தில் அதனுடைய இரண்டு கணுக்களுக்கும் இடையில் அமைந்துள்ள ரேகைகளைச் சந்தான ரேகைகள் என்று வழங்குவார்கள். கிளைகளை உடையதாக இருந்தால் பெண் குழந்தைகள் எனவும், பின்னலாக அமைந்திருந்தால் ஆண் குழந்தைகள் எனவும் நிச்சயிக்க வேண்டும். அதில் எத்தனை ரேகைகள் தொடர்ந்து அமைந்துள்ளனவோ அத்தனை குழந்தைகள் என்று எண்ணிக்கையைக் கூறலாம். ரேகைகளில் நடுவில் விடுபடாமல் நீளமாக இருக்குமாயின் தீர்க்காயுள் உடைய சந்தானங்கள் என்று குறிப்பிடலாமாம்.
6. சுண்டு விரலின் கீழ் குறுக்குப் பகுதியில் இரண்டு ரேகைகள் இருப்பவர்கள் தான் செய்யப்போகும் எத்தகைய வேலைக்கும் தக்க தகுதியும், திறமையும், நற்சான்றுகளையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் வெற்றி அடைவதோடு, பொருளாதார இன்பத்தையும் அடைவார்கள். எடுத்த காரியங்கள் விரைவில் முடிவு பெறும் பாக்கியம் உடையவர்களாம்.
7. நடுவிரலின் கீழ்ப்பகுதியில் அத்தகைய ரேகைகள் அமையப் பெற்றவர்களுக்குச் செல்வாக்கும், தொழில் துறை முன்னேற்றமும் உண்டாகும் என்று இலட்சண அமைப்பு கூறுகின்றது.
Richest State | இந்தியாவின் 6 பணக்கார மாநிலங்கள் இவைதான்...
8. மோதிர விரலின் கீழே இத்தகைய ரேகைகள் அமைய பெற்றவர்கள் பல கலைகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களாகத் திகழ்வார்கள். ஆட்காட்டி விரலில் இத்தகைய ரேகைகள் அமையப் பெற்றவர்கள் ஞானிகளாகவும், உலகப் புகழ்பெற்ற யோகியராகவும் விளங்குவார்கள் என்றும் சுண்டு விரலின் அடியில் இத்தகைய ரேகைகள் அமையப்பெற்றவர்கள் சிறுவயதில் இருந்து வாழ்நாள் முழுமையும் சுகஜீவிகளாகவும் இருப்பார்கள் என்று லட்சண அமைப்பு கூறுகின்றது.
ஐப்பசி மாத கடைமுழுக்கும் முடவனுக்கு அருள் பாலித்த முடவன் முழுக்கும்!
9. கட்டைவிரலின் உட்புறத்தும் முதற்கணுவின் அருகில் நெல்லை போலவோ, கோதுமை போலவோ தோற்றம் உடையதாக இரண்டு ரேகைகள் வளைந்து இருமுனைகளுடன் சேர்ந்தும் கூடி இருப்பின் அதற்கு தானிய ரேகை என்று பெயர். இத்தகைய அமைப்புடைவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் தன தானிய சம்பத்துக்களும் விவசாயிகளுக்குப் பயிர் பச்சை, பசு, எருதுகள், ஆடுகள், கோழிப் பண்ணைகள் போன்றவை விருத்தி அடைந்தும் நற்பயனை அளிக்கும். உறவினர்களும் அனுகூலமாக இருப்பார்கள் என்று லட்சண சாஸ்திரம் கூறுகின்றது. #🙏ஆன்மீகம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #📝என் இதய உணர்வுகள்








