#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🚹உளவியல் சிந்தனை
நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?
தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை !
தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !
ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை !
அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை !
அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை !
அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை !
துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை !
ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை !
நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை !
எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை !
இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை.
அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !
🌹
#அன்பு நண்பர்
#நண்பர் கூட்டம்
சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலை காட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களை தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்..
மகிழ்வித்து மகிழுங்கள்...!!!
வாழ்க வளமுடன்...!!!
#🚹உளவியல் சிந்தனை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
முடிந்தால் அடிக்கடி
இதனை படிக்கவும்...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்.
உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.
உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.
உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.
பார்வையும், செவித் திறன்,
வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.
போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.
கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.
உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால்,
நீ துன்பத்தை அறியாதவன்
என்பதை புரிந்து கொள்..!!
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.
உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.
கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.
இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!
உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்..!!
நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??
நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!
வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு, நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#🚹உளவியல் சிந்தனை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்...
எல்லோரும் புதுத்துணி எடுத்தாச்சு நாமதான் எடுக்கல எப்போ எடுத்து தருவீங்கன்னு கேட்கும் பையனின் ஏக்கத்தை தீர்த்து வைக்கமுடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை,
தன் அம்மாவை தரக்குறைவாக பேசும் மனைவியின் பேச்சினை தடுத்து நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணி துயரடையும் கணவர்களின் கண்களை,
துரோகத்தை தாங்கமுடியாமல் காதலியின் கைகளை பிடித்துக்கொண்டு நானென்ன செய்தேன் என்று அழுது கெஞ்சிக் கொண்டிருக்கிற காதலனின் கண்களை,
கடன்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்கிற மகனின் தாழ்வான குரலுக்கு பதில் தரமுடியாமல் கூனி குறுகும் குடும்ப தலைவனின் கண்களை,
தன்னை விட சிறியவனின் திருமணத்தில் உனக்கு அடுத்தது எப்போ? என்ற கேள்வியை எதிர்க்கொள்ளும் முதிர்கண்ணனின் (முதிர்கன்னியின் எதிர்பதம்னு நாமளா சொல்லிக்கலாம்) கண்களை,
வரிசையில் நிற்கும்போது தன்னை முந்திச்செல்லும் வலியவனிடம் எதிர்த்து பேச திராணியில்லாமல் விட்டுக் கொடுக்கும் அப்பாவியின் கண்களை,
பன்னிரெண்டு மணிநேர வேலைக்குப் பிறகு வியர்வை படிந்த முகம் கசங்கிய சட்டையுடன் டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் பரிதாபத்துக்குரிய மாத சம்பளக்காரனின் கண்களை,
சரியாக தினமும் சாப்பிடும் நேரம் பார்த்து இன்னும் எத்தனை நாளைக்கு தான் வேலைவெட்டி பார்க்காம தெண்டசோறு திண்ணுவ என்ற தந்தையின் நக்கலுக்காக பாதியில் எழுந்துச்செல்லும் வேலையில்லா பட்டதாரியின் கண்களை,
உச்சி வெயிலில் மேல் சட்டை இல்லாமல் சாலை வேலை செய்யும் ஒருவன் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று உட்கார்ந்த வேளையில் மேலாளரின் அதட்டல் சத்தம் கேட்டு எழுந்து போகின்ற சாமனியனின் கண்களை,
இருபதாம் தேதியே சம்பளம் தீர்ந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் எப்படி ஓட்டமுடியும் என்று நினைத்து தூங்காமல் தவிக்கும் சராசரி மனிதனின் கண்களை,
எப்போதும் உற்று நோக்காதீர்கள்
அப்படி பார்த்தீர்களானால் நீங்கள் கரைந்து போவீர்கள்...!!!
...
🌹🌹🌹🌹🌹🌹 #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை







