_*நீங்கள் நீங்களாக இருங்கள்*_
_*முகமூடி அணியாதீர்கள்.*_
_*வேஷம் போட்டு*_
_*வெகு காலத்திற்கு ஏமாற்ற முடியாது.*_
_சிலர் நம்_ _வாழ்வில்_
_வழிப்போக்கர்கள் தான்,_
_அவர்களை இழுத்துப் பிடித்து உங்களைக் காயப்படுத்தி கொள்ளதீர்கள்..._
_*வாய்ப்புகள் மட்டும்*_
_*நம் வாழ்க்கையை மாற்றுவதில்லை.*_
_*நாம் வாழும் முறை கூட*_
_*நம் வாழ்க்கையை மாற்றும்.*_
_பணம் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் இல்லை._
_நல்ல மனம் இருப்பவர்களே பணக்காரர்கள்._
_*இந்த நிலையற்ற*_ _*உலகில்*_
_*நீ எதை மாற்ற நினைத்தாலும்*_ _*அது நிலைத்து நிற்கப் போவதில்லை.*_
_*பிறகு ஏன் உனக்கு தேவையற்ற மனக்கவலை.*_
_கிடைத்த சொற்ப வாழ்க்கையை மனக்கவலையின்றி சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுச் செல்._
_*வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் துன்பத்தைக் கண்டு துவண்டு விடுவதும் இல்லை, இன்பத்தைக் கண்டு துள்ளிக் குதிப்பதும் இல்லை.*_
_ஒவ்வொரு அனுபவத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் கிடக்கும், அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் அடங்கி இருக்கிறது உங்கள் வாழ்க்கையின் ரகசியம்._
_*உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை.*_
_*அதைப் பற்றிய பயம் தான்*_ _*மனதை கலங்கி*_ _*அறிவைக் குழப்பி*_
_*நம் நிலையைத்** _*தடுமாறச் செய்கிறது.*_
_பொறுப்புகள் எல்லாம்_
_தலைக்கு ஏறி விட்டால்.._
_ஆடம்பர ஆசைகள் தானாகக்_
_கீழே இறங்கி விடும்._
_*வார்த்தைகளுக்குள்ளும்*_
_*வாழ்க்கை இருக்கிறது.*_
_*வார்த்தைகள்*_ _*இதமானால்*_
_*வாழ்க்கை*_ _*வசமாகும்.*_
_*வார்த்தைகள்*_ _*கனமானால்*_
_*வாழ்க்கை*_ _*திசைமாறும்.*_
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை