2026 ஆண்டு ஒரு வருடம் பண்டிகை அட்டவணை ஒரு அருமையான பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
இன்று வியாழக்கிழமை
தட்சிணாமூர்த்தி வழிபாடு
வியாழக்கிழமை என்றதுமே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
சிவனாரின் வடிவங்களில் ஒன்று என்கிறது சிவஞான போதகம். சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி, தென் முகக் கடவுள். தெற்குப் பார்த்த நிலையில் இருப்பதால்தான், அவரின் திருநாமம் தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம். தட்சிணம் என்றால் தெற்கு.
சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி, சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் வந்து, உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானமும் யோகமும் வேண்டுவோர், தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
தட்சிணம் என்றால் என்ன?
தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடு பவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தட்சிணாமூர்த்தி. ஞானமானது தட்சிணா மூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது
தட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தட்சிணா மூர்த்தி என நான்கு நிலை களில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்க ளில் விளங்குபவர் வியாக் யான தட்சிணாமூர்த் தியே ஆவார். வேதாகமங்க ளின் நுட்பமான உண்மை களை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாத னர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக் கின்றனர்.
*குருவின் சின்முத்திரை*
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டை விரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல்மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசை யையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி,கெட்டகர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாக லாம் என்பதே இதன் பொருளாகும்.
*தட்சிணாமூர்த்திக்குரிய மூலமந்திரம்*
*ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ*; .
சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது விசேஷம். நற்பலன் களையெல்லாம் வழங்கும்.
அதேபோல், வியாழக்கிழமை களிலும் பௌர்ணமி தினங்க ளிலும் சிவன் கோயிலில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபிக்கலாம். தம்பதி சமேதராக இருந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக் கும் குடும்பத்தில் வீண் சண்டையோ சச்சரவுகளோ ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையெல்லாம் அறவே மாறிவிடும். முகத்தில் தேஜஸ் குடிகொள்ளும். எடுக்கும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வாக்குவன்மை பலமாகும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபா ரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.
*தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்*
*ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே*
*த்யாநஸ்தாய தீமஹி*
*தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்*
வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறிவிடும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்
*தட்சிணாமூர்த்தி வழிபாடு*
தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை கொண்டைக்கடலை மாலை அணிவித்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.
#🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
அன்புடையார் வணக்கம் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு விருத்தாசலம் நகரில் ஒரு மாபெரும் கருட சேவை 29 ஊர்களில் இருந்து பெருமாள் உற்சவமூர்த்திகள் விருத்தாசலம் நகரத்திற்கு வந்து கருட சேவை சேவிக்கிறார்கள் அனைத்து பொது மக்களும் வருகின்ற சனிக்கிழமை 11 10 2025 காலை முதல் திருமஞ்சனமும் மாலை 4 மணிக்கு மேல் உற்சவமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது அனைத்து பக்த கோடிகளும் வருகை தந்து பெருமாள் அருளை பெற்று நலமுடன் வாழ அழைக்கின்றோம் ஸ்ரீ *ஸ்ரீப்ரம்மம்* வாசகர் பேரவை விருத்தாசலம் #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐
இன்று புதன்கிழமை
தொட்டதெல்லாம் பொன்னாகும்!
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்படி விசேஷமாக பார்க்கப்படும் புதன் கிழமையில் புதன் பகவானை வழிபடுவதன் மூலம் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நவகிரகங்களில் புதன் பகவானுக்குரிய கிழமையாக புதன்கிழமை சொல்லப்பட்டாலும் இந்த நாளில் நவகிரகங்கள் அனைத்தையும் வழிபாடு செய்யலாம். இந்த நாளில் இஷ்ட தெய்வங்களையும் வழிபடுவது சிறப்பு.
திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் எப்படி நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து செய்கின்றோமோ, அதே போல் சில செயல்கள் திட்டமிட்டு அதற்குரிய நாட்களில் செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
புதன் கிரகத்திற்கு அதிதேவதை பெருமாள் ஆவார். இந்த கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.
அறிவின் கடவுளாகவும், கல்வியின் நாயகனாகவும், வியாபாரத்தின் அதிபதியாகவும் விளங்கும் புதன் பகவானை இந்த நாளில் வழிபடுவது பல்வேறு நன்மைகளைத் தரும்.
புதன் பகவானை வழிபடும் முறை:
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டின் பூஜையறையில், பீடத்திற்கு முன்பாக அரிசிமாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும்.
இக்கோலத்தின் நடுவில் கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். பீடத்தில் புதன் பகவானின் படத்தை வைத்து அதற்கு வாசமுள்ள பூக்களை சாற்றி, புது பச்சை நிறத் துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாக வைக்கலாம்.
விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற ஆடை அணிந்து நெய்தீபம் ஏற்றி, புதன் பகவானுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்து புதன் பகவானுக்கு பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.
புதன்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல் விரதம் மேற்கொள்வது சிறப்பு. காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
அன்று கோயிலுக்கு சென்று புதன் கிரகத்திற்கு பச்சை வஸ்திரம் செலுத்தி, ஐந்து விளக்கு ஏற்றி பூஜை செய்தும் வரலாம்.
புதன்கிழமையன்று பச்சைப்பயிறு தானம் கொடுக்கலாம். படிக்கும் குழந்தைகளுக்கு பேனா, புத்தகம் போன்ற பொருட்களையும் வாங்கி கொடுக்கலாம். இவற்றை தானமாக கொடுப்பதன் மூலம் புதன் பகவானின் பார்வை நம்மீது நேரடியாக விழும்.
தொழில், வியாபாரத்திற்கு உரிய காரகனாக புதன் இருப்பதால் இவரை வழிபடுபவர்களுக்கு தொழில், வியாபாரம் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி புகழ் உண்டாகும்.
புதன்கிழமையின் மகத்துவம்:
ஜாதகத்தில் புதன் தோஷம் உள்ளவர்கள் புதன்கிழமைகளில் விரதம் இருந்து புதன் பகவானை வழிபடுவதன் மூலம் தோஷத்தின் பாதிப்புகள் குறையும்.
ஞாபக சக்தி குறைபாடு உள்ளவர்கள் புதன் பகவானை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.
புதன் பகவான் அமைதியான மற்றும் சமநிலையான மனநிலையை அருள்பவர். அவரை வழிபடுவதன் மூலம் மனக்குழப்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல லாபம் பெறவும், தடைகள் நீங்கவும் புதன் பகவானை வழிபடுவது சிறந்தது.
புதன் பகவான் அறிவாற்றலுக்கு அதிபதி என்பதால் இவரை விரதமிருந்து வழிபடும் மாணவர்கள் கல்வி கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.
பலன்கள்:
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும்.
சுபகாரியம் கைகூடும்.
எடுத்த காரியத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
திருமணத்தடைகள் நீங்கும்.
சந்தான பாக்கியம் கிடைக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.
புதன் காயத்ரி மந்திரம்:
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
புதன் பகவான் மந்திரம்
புதன் பகவான்:
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே உதவியே அருளும் உத்தமா போற்றி
நன்றி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
இன்று செவ்வாய்க்கிழமை
சொந்த வீடு அமைய.. உங்கள் தொழில்/வியாபாரம் பெரிய அளவில் விருத்தி அடைய.
செவ்வாய் வழிபாடு நல்லது,
நமது முன்னோர்கள் நவகிரகங் களில் ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு, வார தினங்களுக்கு (ஞாயிறு முதல் சனி வரை) பெயர் வைத்தனர்.
அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன் செவ்வாய்க் கிழமை உண்டாயிற்று. கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். அதனால் தான் குடும்பத்தில் மங்கள கரமான விசேஷங்கள் நடைபெறுவ தற்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை மேற்கொள்கிறோம்.
முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாக செவ்வாய் இருக்கிறது. ஆனால், நாம் விசேஷங்களை செய்வதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புதிய செயல்களை துவங்குவதற்கும், புத்தாடை அணி வதற்கும் என பல விஷயங்களுக்கு செவ்வாய்க்கிழமையை தவிர்த்து விடுகிறோம்.
பெயரிலேயே மங்களம் இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் செயல்களில் நிச்சயம் வெற்றி உண்டாகும். அதேபோல் மங்களகாரகன் என்கிற பெயர் மட்டுமல்லாமல், செவ்வாய்க்கு பூமிகாரகன் என்கிற பெயரும் உண்டு.
நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்.
ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர் கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபட நன்மை உண்டாகும்.
செவ்வாய் வழிபாடு :
செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி அடையும். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.
9 செவ்வாய்க்கிழமை விரதம்:
செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டிற்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெரு மானுக்கு உரிய ஸ்தோத்திரங் களைப் பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவுசெய்ய வேண்டும்.
இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால்...
செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மை உண்டாகும்.
சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும்.
பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சொந்த வீடு அமைய..
செவ்வாய்க்கு மங்களகாரகன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. சொந்த வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும். முருகப்பெரு மானின் திருவருளும் வேண்டும்.
எலி வலையாக இருந்தாலும் தனி வலை வேண்டும் என்று சொல்வார்கள். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள் ஏராளம். கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் சிலருக்கு சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் கிடைக் காது. சொந்த வீடு கட்டி வசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து மனதார வழிபட்டால் நீங்கள் சொந்த வீடு கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும்.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் நாணயத்தை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். அதை வீட்டில் உள்ள முருகன் படத்தின் முன்பாக வைத்து வணங்க வேண்டும்.
வீடு கட்ட அருள் புரிய வேண்டும் என்று கூறி வணங்கி தொடர்ந்து 11 வாரங்கள் இதுபோல நாணயங் களை எடுத்து வைக்க வேண்டும். 11 வாரங்கள் கழித்து அந்த நாணயங் களை சிவப்பு துணியில் முடிந்து வைத்து செவ்வாய் ஸ்தலமான பழனி முருகன் கோவில் உண்டி யலில் கொண்டு போய் செலுத்தி வேண்டிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வைகாசியில் வாஸ்து செய்ய விசாகத்தில் பிறந்த நாயகன் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.
நன்றி #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐
இன்று பௌர்ணமி
சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயமே! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். சில விஷயங்கள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. ஆன்மீகமோ? அறிவியலோ? இரண்டில் எதுவாக இருந்தாலும் பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப் படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
பௌர்ணமியில் விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.
பௌர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள் ளனர்.
இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பௌர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது.
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.
பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும். பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும். வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.
பவுர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும். இந்நாளில் அம்பிகையை துதித்து விளக்கேற்றி, நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.
திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.
கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண் டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறிய வர்கள் அனைவரும் மன அமைதி பெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை.
தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட் டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.
இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக் காக பல நன்மைகளால் அருள் புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங் களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார் கள்.
நன்றி
#🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
😱😱😱தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் அதிரடியாக உயர்ந்ததால் பொதுமக்கள் ரோட்டிலும் மற்றும் வீட்டிலும் கவனமாக இருங்கள். திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் ஜாக்கிரதையாக இருங்கள்.
#ஜாக்கிரதை
இன்று சனி மஹா பிரதோஷம்.
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் வரும் திரியோதசி திதியை தான் பிரதோஷ நாள் என்கிறோம்.
ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச் சிறப்பும் பலனும் உண்டு. அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும்.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
சனி பிரதோஷத்தின் சிறப்பு :
சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
சிவாலயங்களில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
விரத முறை :
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு அணிந்து நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதோஷம் ஆரம்பம் முதல் பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து, பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் சிவன்-பார்வதி புகைப்படத்தை வைத்து வழிபடலாம்.
பிரதோஷ பலன்கள் :
பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சுபமங்கலம், நல்லெண்ணம், நல்லருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும்.
மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும்.
வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க இந்நாளை தவறவிடாதீர்கள்.
அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இறைவன் அருள் பெறுவீர்
நன்றி
#🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐