திருக் குற்றாலம் பேரருவியில் நீர் வீழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. #🏞நம்ம ஊர் சுற்றுலா
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கிடைக்கச் செய்யும். தென்காசி மாவட்டம், பண்பொழி ஸ்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஓம் ஶ்ரீ திருமலைக் குமாரசுவாமி கோபுர தரிசனக் காட்சி. #🙏கோவில்
ஓம் ஶ்ரீ தோரணைமலை முருகன். இன்று தை கிருத்திகை விரதம், தை செவ்வாய் ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. #🙏கோவில்
நமது இந்தியத் திருநாட்டின் 77வது குடியரசு தினம் என்பதில் பெருமை கொள்வோம். #🇮🇳I ❤️🔥 India
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் உள்ள தீர்த்தங்கள் பத்தாகும். இந்தப் பத்து தீர்த்தத்திலும் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று சிதம்பரம் ஓம் ஶ்ரீ நடராஜர் தீர்த்தமாட எழுந்தருளும் இன்றும் சிறப்பாக நடந்தேறி வருகின்றது. அந்த நிலையில் நாம் காணும் புகைப்படம் பத்து தீர்த்தத்தில் ஒன்றான நம் ஞானத்தைப் பிரகாசமாக ஆக்கும் ஓம் ஶ்ரீ ஞானப் பிரகாசக் குளமாகும். அதைக் காணும் உள்ளமடையும் ஆனந்த பரவசத்திற்கு அளவேது. ஓம் நமசிவாய. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
இன்று பிறந்த ஆண், பெண் குழந்தைகள் அனைவரும் வளர்ந்து நினைவு தெளிந்த பின்னர் தாய், தந்தை பேச்சைக் கேட்டு நல் வழியில் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்தக் குழந்தைப் பாடல். இந்தப் பாடல் எனது புனைப்பெயரில் எழுதியதாகும். இதைப் பெற்றோர்கள் இருவரும் தங்கள் வளரும், வளர்ந்த குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகளை ஊக்குவிக்கும் பாடல்.
#😁தமிழின் சிறப்பு
ஓம் ஶ்ரீ கண்ணனின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. அழகே அழகு. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
ஓம் ஶ்ரீ தில்லைக் கூத்தனின் ஈடிணையில்லா ஆனந்த தாண்டவ காட்சி. அவர்தம் பெருமையும், கருணையையும் எடுத்தியம்பும் தேவாரத் துதி.
#😁தமிழின் சிறப்பு
மதுரை ஓம் ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் தங்கக் கவசத்தோடு, வைரங்கள் பதிக்கப்பட்ட மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஊஞ்சல் உற்சவக் காட்சி. #🙏கோவில்
காஞ்சிபுரம் ஓம் ஶ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் இலிங்க திருமேனி ஒரு இலட்சத்து எட்டு வைரங்கள் பதிக்கப்பட்ட கவசத்தோடு மிளிரும் கண்கொள்ளாக் காட்சி. ஓம் நமசிவாய. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்








