
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்
#உற்சாக பானம் #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪
#👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
செப்டம்பர் 1994*
பால்டிக் கடலில் எம்எஸ் எஸ்டோனியா கப்பல் கவிழ்ந்து 852 பயணிகள் பலியான நாள்.
20-ம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கடல் பேரழிவில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஜெர்மன் நாட்டின் பேபன்பர்க் கப்பல் கட்டும் தளத்தில், 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கப்பல் 1980ம் ஆண்டு முதல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
1994ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, எஸ்டோனியாவில் இருந்து ஸ்டாக்ஹோம் நகருக்கு இந்த கப்பல் புறப்பட்டுச் சென்றது. அதில் 803 பயணிகள், 186 ஊழியர்கள் பயணம் செய்தனர். மறுநாள் காலை 9.30 மணிக்கு ஸ்டாக்ஹோம் நகரை அடைய வேண்டும். ஆனால், 28ம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் பால்டிக் கடலைக் கடந்தபோது, மோசமான வானிலை காரணமாக கப்பல் மூழ்கியது.
இதில் 138 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற 852 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களில் ஸ்வீடன் (501 பேர்), எஸ்டோனியா (285 பேர்) நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #பொழுது போக்கு #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்
28,*
*பகத் சிங்*
விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் 1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பாகிஸ்தானிலுள்ள பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார்.
கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இவருக்கு 12 வயது.
சைமன் குழு 1928-ல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம்.
இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர் தி டோர் டு டெத், ஐடியல் ஆப் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதினார்.
ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான மாவீரன் பகத் சிங் 24-வது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார். #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்
28,*
*உலக ரேபிஸ் தினம்.*
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.
கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது. #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்
கொண்டே பார்த்துக் கொண்டிருந்தால் வானம் மட்டும் தான் தெரியும்...
*எழுந்து நடக்கப் பழகுங்கள் வானம் மட்டுமல்ல இந்த மொத்த உலகமும் கூடவே நீங்கள் பயணிக்கக் கூடிய பாதையும் தெரியும்....!*
#பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
நூல்களே-வாழ்க்கைக்கு- வழி காட்டி...*_
_*நான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்.*_
_இந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் பயணித்தால் அந்த ஊருக்குப் போகலாம் என்று நமக்கு நான்கு திசைகளில் எங்கெங்கு போகவியலும் என்று நமக்கு வழி காட்டும்._
_*அதொரு தகவல் பலகை, நமக்கு வழி காட்டுவது தான் அது பயன்படுகிறது...! அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக் கொண்டு செல்லாது; அது போல் தான் நல்ல நூல்களும்...!*_
_நல்ல நூல்கள் ஒரு வழிகாட்டி...! அதுவும் ஒரு தகவல் பலகை தான்._
_*உலகின் தலைசிறந்த நூல்கள் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் கருவியாகவே காண முடிகிறது.*_
_நூல்கள் என்பதை நாம் பெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக் கூடாது. அது சமூகத்தைப் புரட்டிப் போடும் நெம்புகோல்கள் என உணர வேண்டும்._
_*ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நாம் வாசிப்பை மேம்படுத்த வேண்டும்.*_
_ஆரம்பத்தில் நமக்குப் பிடித்த நூல்களை எளிய முறையில் வாசிக்க வேண்டும். பெரிய அறிவாளிகள் தங்களுக்கு துணையாகக் கொண்டிருந்தது நல்ல நூல்களையே._
_*எவ்வளவு நல்ல நூல்களாக இருந்தாலும், நாம் அதை வாசிப்பதினால் மட்டும் எந்தப் பயனும் இல்லை, அந்த நூல்கள் அறிஞர்கள் சொன்ன நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்தத் தொடங்கினால் மட்டுமே, அது நமக்குப் பலன் தரும்.*_
_அதில் கூறப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்தத் தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும்._
_*"செல்வந்தன் ஆக வேண்டுமா...?" என்ற நூலினை வாங்கி, அதைப் படித்து விட்டு அட்டை போட்டு அடுக்கறையில் அடுக்கி வைத்து விட்டு, அடுத்த தெருவில் இருக்கும் தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரத்திடம் சென்று, அட்டையைப் பதிந்து பணத்தை அள்ளிக் கொண்டு வந்துவிட இயலாது.*_
_அந்நூலில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காக, நம்மையே நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்._
_*இளமையில் தான் சிறந்த பண்புகளுக்கு நாம் பதியமிட இயலும், அப்படிப்பட்ட சிறந்த பண்புகளில் ஒன்று தான் சிறந்த நூல்களை வாசிப்பது.*_
_இன்றைய இளம் தலைமுறைகள், நாம் கூறுவதைக் கேட்பதை விட நாம் செய்வதையே செய்ய விரும்புகின்றனர், நாம் வாசிக்கத் துவங்கினால் குழந்தைகளும் வாசிக்கத் துவங்குவர்._
_*சிறந்த நூல்கள் என்பது அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் மற்றும் தலைப்புகளில் இல்லை. அது வாசிப்பவரின் மனதிலே கலந்து ஆள வேண்டும்.*_
_நல்ல நூல்களை நாடுங்கள். ஏதேனும் ஒரு நூலாவது உங்களை மாற்றலாம். அது எந்த அடுக்கறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுக்காகக் காத்திருக்கும்._
_*அதைத் நாடிச் செல்லுங்கள். உங்கள் அறிவு அனைத்தும் நீங்கள் வாசிக்கும் நூல்களால் பெற்றது என்பதனை மறந்து விடக்கூடாது.*_
_நல்ல நூல்களுக்கும், அதை இயற்றியவர்களுக்கும் நன்றி கூறுங்கள், இயன்றால் அந்த நல்ல நூல்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாசிக்க அறிவுரை செய்யுங்கள்._
_*வெடிகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும்; நல்ல நூல்கள் புரட்டும்போதெல்லாம் வெடிக்கும்.*_
_உங்கள் திறன் வாய்ந்த எண்ணங்களுக்கு நீங்கள் உயிர் கொடுக்க நினைத்தால், நல்ல அறிவுசார்ந்த நூல்களை நாடி வாசியுங்கள். *சிறந்த நூல்களே உங்களுக்கு சிறந்த நண்பன்.*_ #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்