Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
https://youtube.com/shorts/jn91xOVEils?si=lOAkTaLSDBsTgGk1 #oru kai paarppomaa
https://youtube.com/shorts/MfdZ7St2fdw?si=OXKioApFdTWU7kNq #azagaana katchi
https://youtube.com/shorts/MfdZ7St2fdw?si=gKg1csDMVSgJNRn1 #vilile mani vilile.
https://youtube.com/shorts/rypdv_66uiw?si=Ep0w7_bwW2efSIUD
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam
#aalayam arivom. அருள்பாலிக்கும் உச்சிஷ்ட கணபதி: பிள்ளையாரை மூலவராகக் கொண்ட ஒரே கோவில்!_*
_முழுக்க முழுக்க விநாயகருக்காகவே உரித்தான கோவில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. அபூர்வமான இக்கோவிலை இந்தக் கட்டுரையில் தரிசிக்கலாம் வாருங்கள்._
* 🛕🛕🛕முழுமுதற்கடவுள் என்று பிள்ளையாரைக் கொண்டாடுகிறது இந்து மதம். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் நம் வழிபாட்டினைத் துவங்குவது விநாயகரிடம் குட்டு போட்டுக்கொண்ட பிறகு தானே.. எல்லா கோவில்களிலும் பெரும்பாலும் பிள்ளையார் அர்த்த மண்டபத்திலும், மகா மண்டபத்திலும், பிரகாரங்களிலும் தான் காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் சில கோவில்களில் இருந்தாலும் ஓரத்தில் தான் இருப்பார்.
ஆனால் முழுக்க முழுக்க விநாயகருக்காகவே உரித்தான கோவில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது அறிவீர்களா...? அபூர்வமான இக்கோவிலை இந்தக் கட்டுரையில் தரிசிக்கலாம் வாருங்கள்.
> மணிமுக்தீஸ்வரம் என்ற தலத்தில் உள்ள ‘உச்சிஷ்ட கணபதி’ திருக்கோவிலில் தான் விநாயகர் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார்.
> ‘உச்சிஷ்ட’ என்ற சொல்லுக்கு ‘மீதமான உணவு’ என்று பொருள். முப்பத்து இரண்டு விநாயகர் வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி முக்கியமானவர். பொதுவாக பிரம்மச்சாரியாகவே காட்சி தரும் விநாயகர், இந்த உச்சிஷ்ட கணபதி கோலத்தில் நீலசரஸ்வதி தேவியைத் தன் மடியில் அமர்த்தி அணைத்துப் பிடித்தபடி காட்சி தருகிறார். இதுவே இவரின் சிறப்பம்சமும் கூட.
கருவறையில் அருள்பாலிக்கும் இந்த உச்சிஷ்ட கணபதி குடும்ப அமைதியை அருள்பவர் என்று நம்பப்படுகிறது. இவரை வேண்டிக்கொண்டு மகாமண்டபத்தின் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தால், அங்கே மொத்தம் பதினாறு வடிவங்களில் விநாயகப் பெருமானே தான் வீற்றிருக்கிறார்.
1. குஷி கணபதி – நோய்கள் நீக்க
2. ஹரித்ரா கணபதி – மக்களை ஈர்க்கும் சக்தி அருள
3. சொர்ண கணபதி – தங்கம் வாங்குமளவு செல்வ வளம் அருள
4. விஐய கணபதி – வெற்றிகளைப் பெற்றுத் தந்திட
5. அர்க்க கணபதி – நவக்கிரக தோஷங்களையெல்லாம் விலக்கித் தர
6. குரு கணபதி – குருவருள் கிடைத்திட
7. சந்தான கணபதி – புத்திர பாக்கியம் அருள
8. ஹேரம்ப கணபதி – அலையும் மனத்தினை அமைதிப்படுத்த
9. சக்தி கணபதி – செயல் வெற்றி அருள
10. சங்கடஹர கணபதி – தடங்கல்கள் தடைகளை உடைத்துவிட
11. துர்கா கணபதி – துன்பங்களைக் களைந்திட
12. ருண ஹரண கணபதி – கடன்களை அடைக்கும் சூழல் உருவாக்கிட
13. ஸ்ரீவல்லப கணபதி – பலம் அருளிட
14. சித்தி கணபதி – காரிய சித்தி அருள
15. வீர கணபதி – மனோதைரியம் அருளிட
16. சர்வசக்தி கணபதி – நல்ல ஆரோக்கியம் அருளிட
என மொத்தம் பதினாறு கணபதி திருமேனிகளையும் தரிசித்த பிறகு ‘முழுக்க முழுக்க ஒரு விநாயகர் கோவில் இது’ என்ற உணர்வினை நாம் அடைவது திண்ணம். இந்த 16 விநாயகத் திருமேனிகளும் வேறெங்குமே இல்லாத தனிச்சிறப்பாகும்.
நெல்லையின் நாயகியாம் காந்திமதி அடுத்தபடியாக தனிச்சந்நதியொன்றில் அருளக் காத்திருக்கிறாள். அவளை வணங்கி நகர்ந்தால் யோகக்கலை வளர்த்த பதஞ்சலி முனிவர் காட்சி தருகிறார்.
ஸ்ரீ வியாக்கிர பாத முனிவர்கள் லிங்க வடிவில் அடுத்தபடியாக வீற்றிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சுவர்ண ஆகர்ஷண பைரவரும் நமக்கு அருள்புரிகிறார்.
இக்கோவிலுக்கு வெளிப்பிரகாரத்தில் அழகிய நந்தவனம் பராமரிக்கப்படுகிறது. நாகர் திருமேனிகள் வெளிப்பிரகார முடிவில் உள்ளன. இக்கோவிலின் தல விருட்சம் பனை மரமாகும்.
கோவிலின் அர்த்த மண்டபத்தில் மலர்கள் அர்ச்சனை பொருட்கள் வாங்க கடை ஒன்றும் உள்ளது.
900 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இக்கோவில் சேதப்படுத்தப்பட்ட இருப்பதன் தடயங்களையும் ஆங்காங்கே காண முடிகிறது.
இக்கோவிலுக்கு வழிகாட்டிக்கொண்டு திருநெல்வேலியின் ஜீவ நதியான தாமிரபரணியும் நம்முடனேயே ஓடி வருவது மற்றொரு சிறப்பாகும். நெல்லை ரயில் நிலையத்திலிருந்து வெறும் பத்து நிமிட தொலைவில் தான் இந்த உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் உள்ளது. கண்டிப்பாகப் போய்வாருங்கள். கணபதியின் அருள் பெற்றிடுங்கள்..
🟨🕉️. 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨
#yaarodu,yaaro. நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.
வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.
நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.
மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள்.தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்
குணம் இருந்தால் நீ குப்பை.
நடித்தால் நீ நல்லவன்.
உண்மை பேசினால் பைத்தியக்காரன்.
அன்பு காட்டினால் ஏமாளி.
எடுத்துச் சொன்னால் கோமாளி.
இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்
நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதைப் போல.
சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சில வலிகள் இல்லாமல் இருக்க.
தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும் தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக் கொள்.
அவர்களுக்குப் புரிய வைக்க.
வரும் காலம் ஒன்று உள்ளது.
சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.
நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தைக் கற்றுத் தரவே வருகின்றது.
யாரும் உன் கண்ணீரைப் பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளைப் பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளைப் பார்ப்பதில்லை.
ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்.
மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.
தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.
இந்தப் பதிவு எல்லோருக்கும் பொருந்தும்.
😊
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨
*திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்....*
சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது தையூர். காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.
வைகாசி விசாகத்தன்று இங்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் காலை 7:30 முதல் 9:30 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
😯😟😯😟😯
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்கிறது தலபுராணம்.
திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?!
`தை' என்றால் அலங்காரமான என்று பொருள் கொள்ளலாம். இங்குள்ள ஈசன் அழகீஸ்வரர் என்ற திருநாமத்தோடே அருள்பாலிக்கிறார். பெயருக்கேற்ப இங்கே ஈசனின் திருக்கோலம் நம் மனதை மயக்குகிறது. சந்நிதியில் நின்ற கணத்தில் நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்து மனம் இலகுவாகிறது. இதையே தமிழில் மிக அழகாக, 'முருகீஸ்வரர்' என்கிறார்கள்.
ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று இந்த ஈசனை `அழகிய சொக்கனார்' என்று குறிப்பிடுகிறது. முற்காலத்தில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அற்புதபூமியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த தையூர்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கோயில் திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில்.
இந்த ஆலயத்தில் தையூர் அழகீஸ்வரர் கோயில் குறித்த 6 கல்வெட்டுகள் முக்கியமானவை. அவற்றில் மூன்று கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜன் காலத்திற்கும் முற்பட்டவை. அவற்றில் இவ்வூர் `தலசயனபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது.
ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார் மற்றும் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன.
மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கிய கருவறையில் காட்சியளிக்கிறார். கருவறை முகப்பில் இரு புறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருவறை முகப்பு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் வியாக்கிரபாதரின் உருவம் காணப்படுகிறது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது.
மகா மண்டபத்தில் மணல் கல்லாலான முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மணல்கல்லுக்கு `தைஜகம்' என்று ஒரு பெயருண்டு. இந்த முருகனை வழிபட்டால் பகைவர் பற்றிய பயம் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள்.
மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 9 திங்கட்கிழமைகள் இவரை வழிபட்டுவந்தால் கடன் பிரச்னைகள் விலகி செல்வ வளம் சேரும் என்பதும் நம்பிக்கை.
முருகனைச் சுற்றி தேவியர், சண்டிகேஸ்வரர், மற்றொரு முருகன், மகாவிஷ்ணு, பராசக்தி, காலபைரவர், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். பக்தர்களை நாடிச் சென்று அருள்புரிவதில் இந்த அம்பிகைக்கு நிகரில்லை.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை, 'தையூருக்கு வந்தால், குழந்தை வரம் தருவேன்' என அருளியிருக்கிறாள்.
இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தனவாம்.
தையூரைப் பற்றிய பண்டைய தகவல்கள், `உத்தண்டன் கோவை' எனும் சிற்றிலக்கிய நூல் வாயிலாக வெளிப்படுகின்றன. இது பல பகுதிகளாகச் சுவடி வடிவில் கிடைத்ததனால், இதன் ஆசிரியர் யாரென உறுதிபட அறியமுடியவில்லை.
உத்தண்டன் என்பவன் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் காலத்தில் இவ்வூர் எத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தது என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது.
🟨🕉️. 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁அளிந்த நெஞ்சு கோயிலா அமர்ந்த ஈசன் அஞ்சடைத்_
_🍁தெளிந்த கங்கை ஏற்றவன் சிறந்த மாலை யாவரா_
_🍁நெளிந்த மார்பில் நூலினான் நெருப்பை ஏந்து கையினான்_
_🍁குளிர்ந்த பொன்னி பாய்ந்திடும் குடந்தை மேய கூத்தனே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_கனிந்த மனமே கோயிலாக விரும்பி உறையும் ஈசன் !! அழகிய சடையில் தூய கங்கையாற்றைத் தாங்கியவன் !! நல்ல மாலை போலப் பாம்பு நெளியும் மார்பில் பூணூல் அணிந்தவன் !! கையில் தீயை ஏந்தியவன் !! அப்பெருமான் குளிர்ந்த காவிரி பாயும் கும்பகோணத்தில் எழுந்தருளிய கூத்தன் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁












