தமிழகத்தின் புண்ணிய நதியான தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள நவகைலாய தலங்களில் பல அதிசயங்களை கொண்ட தலம் முறப்பநாடு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆகும்
நவகைலாய தல வரிசையில் ஐந்தாவது தலமாகும் நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாகவும் போற்றப்படுகிறது நவகைலாய தலங்களின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் இதனை நடு கைலாயம் என்றும் அழைக்கிறார்கள்
பொதுவாக நந்தி பகவான் காளை உருவில் இருப்பார் இந்த சுவாமிக்கு எதிரே நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிப்பது உலகிலேயே எங்கும் காண முடியாத அதிசயம்
சோழ மன்னனின் மகளுக்கு பிறவியிலேயே குதிரை முகம் இருந்தது அவ்வளவு இப்ப பாவத்தை போக்க அவளது குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன பிறருக்காக தன் உருவத்தை மாற்றிக் கொண்ட நந்தியின் கருணை வியப்புக்குரியது
சன்னதி முன்புறம் துவாரகபாலகர்களுக்கு பதிலாக இரண்டு விநாயகர்கள் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்
இங்குள்ள பைரவ சன்னதியில் இரண்டு பைவர்கள் அருள் பாலிக்கின்றனர் நாய் வாகனத்துடன் இருக்கும் பைரவர் கால பைரவர்
வாகனம் இன்றி இருக்கும் பைரவர் வீர பைரவர்
கையில் பணம் தங்கவில்லை என்பவர்கள் பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள் இங்கு வந்து கைலாசநாதருக்கு மஞ்சள் வஸ்திரம் சாந்தி கொண்டக்கடலை நெய்வேத்தியம் படைத்து வழிபட்டால் தரித்திரம் விலகி செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்
அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் முனிவர்கள் இறைவனிடம் வந்து முறையிட்டதால் இந்த இடம் அதாவது இந்த ஊர் முறப்பநாடு
என்று பெயர் பெற்றது கல்வியில் சிறந்து விளங்க திருமண தடை அகல குழந்தை பாக்கியம் கிடைக்க இத்தல வழிபாடு நன்மைகளை ஏற்படுத்தும்
தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நன்மைகளை ஏற்படுத்தும் #பக்தி