ஆதி தமிழன்
ShareChat
click to see wallet page
@aadhitamilansalem
aadhitamilansalem
ஆதி தமிழன்
@aadhitamilansalem
தமிழே என்னுயிர்
#✍️கவிதை📜 #✍️தமிழ் மன்றம் #🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 தமிழை யாப்பில் தனித்து கட்டியே தமிழ்ச்சுவை நாளும் தமிழரில் விதைக்கவே உதிரிப் பூக்களையும் உயிரில் சேர்க்கவே மதியில் கலந்து மனதில் வளரும் அழகிய மாலையைஅன்பில் கட்டவே கழுகு போன்று கருத்தை அறியவே தனித்தனி எழுத்தும் தன்னகத்தே சேரவே கனிமொழி சுவைக்க கரங்களில் சுழலுமே தாளநயம் கோர்த்து தனிப்பாடல் அமையுமே கோளமும் அழகூர கொடுக்கும் தன்மையே ஒவ்வொரு பூவும் ஒருமாலை செய்யவே ஒவ்வொரு நாரும் ஓசையின்றி மணக்குமே தொடுக்கும் முறையே தொன்மை நிகழ்வே உடுப்பு போலவே உணர்ந்து அணியவே பூக்கள் எடுத்து பூங்கொத்து தொடுக்க பாக்கள் சேர்ந்து பாமாலை ஒலிக்குமே ஒன்றோ இரண்டோ ஒன்றியே அசையும் நன்றாய் நேரசை நவரசம் தருமே நிரையசை உள்நுழைய நீங்காத சீராகுமே உரைநடை சொற்களும் உரையாடலில் சிறக்குமே பூச்சரம் அசைகள் பூத்துக் குலுங்கும் மாச்சரம் சேர்ந்து மனமும் குளிரும் விளச்சீர் மாச்சீர் விரைந்து பெருக இளமை புதுமை இனிக்கும் தமிழே தளைமுடிச்சு நின்றசீரும் தானாய் வந்திணையும் விளையும் பயிராய் வீறுகொண்டு வளரும் பாட்டு ஓசையும் பண்பாடு மிளிரும் ஊட்டும் அறிவும் உண்மையை சொல்லும் இடிக்காமல் தாளத்தோடு இயல்பாய் வருமே அடியாய் சீர்கள் அமைந்து ஒலிக்கும் தொடையும் அழகாய் தொடர்ந்து வருமே கடைமடை வரையில் கலந்து நிற்கும் வெண்பா ஓசையும் வேரூன்றும் செப்பலோசையே வெண்கல ஓசையும் வெகுதூரம் ஒலிக்கும் திருக்குறள் நாலடியார் தினமும் செப்பவே இருளும் அகழவே இறையாசி பெருகுமே ஆசிரியப்பா ஓசையும் அகலோசை தருமே பேசிடும் சிலப்பதிகாரமும் பேரொளி மணிமேகலையுமே கலிப்பா ஓசையும் கனிந்த துள்ளலோசையே கலித்தொகை பரிபாடல் கற்கும் பொற்சுவையே வஞ்சிப்பா ஓசையும் வசீகரிக்கும் தூங்கலோசையே தஞ்சம் கொண்டு தவழும் ஊஞ்சலே பட்டிதொட்டியெங்கும் தமிழே பாமாலை ஒலிக்குமே பட்டினப்பாலை அமுதம் பாடலில் சிறக்குமே ✍️ஆதி தமிழன்
✍️கவிதை📜 - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #✍️தமிழ் மன்றம் #🙏நமது கலாச்சாரம் #✍️கவிதை📜 #🖌பக்தி ஓவியம்🎨🙏 உலகை ரசித்து உலாவிட வரவில்லை சலனமற்று சிந்தையில் சடலமாகிட வந்தாய் இன்பம் அனுபவிக்க இவ்வுடல் இல்லை அன்பில் அகிலம் ஆளவே வந்தாய் துன்பம் எதுவென்று துயரில் அறிவில்லை இன்றும் என்றும் ஈசனப்பற்றிட வந்தாய் உடலை காத்து உயிா்வாழ வரவில்லை கடவுளை உணர்ந்து கடந்துபோக வந்தாய் பொருள் சோ்க்கவோ பொறாமைகொள்ள வரவில்லை கருவில் உருவாகி காலனைக்காண வந்தாய் அன்னம் ருசியை அறியவோ வரவில்லை தன்னில் பசியை தானாய் துறக்கவந்தாய் புத்தியை தீட்டி புத்துயிர் பெறவரவில்லை சித்தனாய் பித்தனாய் சிவத்தில் இணையவந்தாய் சிவமே மரணித்து சவமாய் பயணிக்க அவனே ஆதியும் அந்தமும் இல்லாதவன் படைப்புகளை விட்டு படைத்தவனை நினைக்க விடைபெறும் நாளே விளங்கும் தெய்வீகம் மரணம் வரும்வரை மகேசனை பற்றிட பரம்பொருள் மறுமையில் பலனும் அருளுவான் ✍️ஆதி தமிழன்
📝என் இதய உணர்வுகள் - ShareChat
#📜கவிதையின் காதலர்கள் #✍️தமிழ் மன்றம் #🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 மானத் தமிழா மறவர் குலமே வானம் உயர்ந்த வள்ளுவர் மறையே மறந்து போனாய் மறைமொழி நீயே அறமும் பொருளும் அறியா இனமோ அயலார் மொழியோ அறிவு அல்ல பயணம் எல்லாம் பண்பின் வடிவே தாய்மொழி தமிழே தாயின் உயிரே தாய்ப்பால் அமுதே தமிழ்மொழி உணர்வே கருவில் அரும்பிய கன்னித் தமிழே உருவில் தோன்றிய உயிர்மொழி செந்தமிழ் நாவில் நுழையுமா நம்மொழி பைந்தமிழ் பூவின் கரங்களில் புகுமா நற்றமிழ் தமிழின் பெருமை தங்கமாய் மிளிரும் தமிழின் அருமை தரணியில் வளமே உலகின் முதல்மொழி உனக்கு தெரியுமா நலமாய் வளமாய் நானிலம் போற்றும் சிதையா மொழியே சிந்து மொழியடா பதைக்குதே நெஞ்சம் பாதகம் கண்டே சிந்தையும் பிழன்று சிதைக்க துணிந்தாய் மந்தை நடுவில் மதியும் இழந்தாய் மனமும் திரும்புடா மாற்றம் நிகழவே தனது மொழியடா தமிழே நம்முயிர் எங்கும் தமிழே எதிலும் நிறையட்டும் செங்கோல் ஏந்தி செந்தமிழர் ஆளட்டும் ✍️ ஆதி தமிழன்
📜கவிதையின் காதலர்கள் - ShareChat
#📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #🙏நமது கலாச்சாரம் #✍️தமிழ் மன்றம் #📜கவிதையின் காதலர்கள் அம்மா தாயே அன்னைத் தமிழே எம்மை ஆளும் எல்லையில்லா சோதியே நெற்றிக்கண் சிவனின் நெஞ்சில் நிறைந்து நெற்றியில் குங்குமம் நேசமுடன் வைத்தவளே சந்தனமும் மணக்கும் சகலமும் கொண்டு சந்திரனை சிரசில் சாந்தமாய் அணிந்தவளே வில்போல் புருவத்திலே கருமையும் தாங்கியே அல்லும் பகலும் அண்டம் காப்பவளே கண்கள் ஒளியில் கதிரவன் பாய்க்கும் விண்ணக அரசியே விரைந்து வருவாயே கடவாயில் தாம்பூலம் கடந்து நாசிவக்கும் கடகட வைரமாலை கழுத்தினிலே மிளிரவே வெண்மை மின்னல் வெட்டும் அதிசயம் அண்மை எலுமிச்சை ஆருடன் தவழுமே சிவப்பு ரோசாவும் செவ்விதழ் பிச்சிப்பூவும் நவமான ரத்தினம் நட்சத்திரமாக பளபளக்குமே பட்டாடையும் உடுத்தி பாங்காய் அருளும் ஒட்டியாணமும் தங்கமும் ஓவியமாய் தகதகக்குமே குண்டலமும் முத்தும் குறையாத மாணிக்கம் மண்ணரசி கால்சலங்கை மண்ணூரில் ஒலிக்குமே மெட்டியும் ஒளிரும் மேன்மை வைடூரியமுமே சட்டென வருந்துன்பம் சகலமும் தீர்த்திடவே வருவாளே அன்னையே வந்தபிணி அகற்ற கருமாரி வேப்பிலையால் கடுமையாய் விரட்டுவாளே சிங்கம்பழம் பலாப்பழம் சிறப்பாய் இனிக்குமே எங்கும் சுவைக்க கொடுப்பாள் கொழுக்கட்டையே தேன்மதுர பழக்கலவை தெய்வமே தருக தேன்துளி தித்திக்கும் தெள்ளமுதம் சுவையாகவே பாயாசமும் வெண்பொங்கல் படையல் செய்ய வாயாற வாழ்த்தி வணங்கி பாடவே அன்னையும் மகிழ்ந்து அருளாசி கொடுக்க அன்புடன் வந்து அருளும் தருவாளே சிம்மத்திலே விரைந்து சிக்கலை தீர்க்க எம்மையாளும் உமையாள் எப்போதும் உடனிருப்பாளே சிரித்தபடி கையினிலே சிவகாமி திரிசூலமும் அரிதான சக்கரமும் ஆளுயரவேல் கொண்டவளே பராசக்தி மாரியம்மா பாசமாய் வருக பராமரிப்பு செய்து பண்போடு நடத்துபவளே புத்தம் புதியதொரு புதுமையான விடியலும் புத்தம் புதியதொரு புதுவசந்தம் பூக்கவே புன்னகையுடன் வருக பூமாரி தாயே அன்பும் பெருக அகிலம் செழிக்கவே தமிழர் நாடும் தரணியில் உயர தமிழ்த்தாய் வருக தமிழர் ஆளவே ✍️ஆதி தமிழன்
📝என் இதய உணர்வுகள் - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 தருமபுரி தென்றலே தாகம் கூடுதே மருங்காபுரி மரிக்கொழுந்து மயக்கம் தருதே அழகாபுரி நேசம் அன்பில் தொடரவே பழமும் சுவைக்க பக்குவம் வேண்டுமே மேலைச்சிவபுரி மாங்கனி மென்று ருசிக்கலாம் காலையும் மாலையும் கற்பனைப் பாத்திரமே ரத்தினபுரி இருவரும் ரகசியம் நிறைந்தோம் சத்தியம் பறையும் சரித்திர உருவமே கிருட்டிணகிரி கதம்பம் கிடங்கில் இருக்கும் அருவியாய் சுரந்து அங்கத்தில் தவழும் சொர்ணபுரி நிறையும் சொக்கன் ஆளவே ஆர்வமும் ஆசையும் அனுதினமும் அடங்கும் சிவகிரி நேசம் சிறந்து விளங்கும் சிவலோகம் இறுதியில் சிறப்போடு கடக்கும் ✍️ ஆதி தமிழன்
👉வாழ்க்கை பாடங்கள் - ShareChat
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #👉வாழ்க்கை பாடங்கள் ஆதியில் பராபரத்தில் ஆண்டவன் பரமனே தோன்றியே ஆதிசக்தி பரத்தில் ஆதிசிவம் இணைந்து தோன்றியே எல்லாம் சிவத்தில் ஏற்றே சக்தி தோன்றியே இல்லம் சக்தியில் இனிமையான நாதம் தோன்றியே நமசிவாயம் ஆடவே நாதத்தில் விந்தும் தோன்றியே விமலன் விந்துவில் விரைந்து சதாசிவம் தோன்றவே சதாசிவத்தில் மகேசன் சங்காய் சிறந்து தோன்றியே வேதாந்தம் சித்தாந்தம் வேரூன்றிய ஆதவன் சோதியே மகேசன் ருத்திரன் மண்ணில் மனமிரங்கி தோன்றவே விவேகம் ருத்திரனில் விட்டிணனாய் தோன்றி வரவே விண்ணவர் தேவனே விட்டிணன் பிரம்மாவாய் தோன்றியே கண்ணும் கருத்துமாய் காலங்களில் பிரம்மாவில் ஆகாயம்தோன்றவே ஆதியே அருவாக ஆகாயத்தில் பரம்பொருள் வாயுதோன்றியே ஆதிரூபன் வாயுவில் அக்னி தீப்பிழம்பாய் தோன்றியே அக்னியில் அப்பும் அவதரித்து பிருதிவியும் தோன்றவே எக்காலத்திலும் பிருதிவியில் என்றும் அன்னம் தோன்றவே அகிலத்தில் அன்போடு அன்னத்தில் ரசமும் தோன்றியே மகிமை நிறைந்த மகிழ்ச்சியில் ரசத்தில் உதிரம்தோன்றியே உதிரத்தில் இணைந்து உணர்வு மாமிசம் தோன்றவே கதிரவன் பகலவன் காலமெல்லாம் தாண்டவம் ஆடவே மாமிசத்தில் பரவசமாகி மேதையும் தோன்றி வளரவே பூமியில் திருவருள் புரிந்து மேதையில் அடங்கவே அடக்கம் மச்சை அணுவில் தோன்றி நிறையவே கடமை மச்சையில் கண்ணியம் சுக்கிலம் தோன்றியே சுக்கிலத்தில் நித்தம் சுரோணிதம் தோன்றி கடக்கவே சுக்கிலம் என்றும் சுரோணிதத்தில் கலந்து நீராகுமே ஏழாம் தினத்தில் எழுந்து குமிழியாகி வருமே தாழம்பூவாய் முப்பதாம்நாள் தவழ்ந்து உதிரம்திரண்டு பிண்டமாகுமே அறுபதாம்நாள் பிண்டத்தில் அச்சும் சிரசும் உண்டாகுமே மறுநாள் தொண்ணூறாம்நாள் மாமிசம்திரண்டு மூட்டுகைகால்கள் உண்டாகுமே நூற்று இருபதாம்நாள் நுட்பமான நரம்புநாடி உண்டாகுமே நூற்றி ஐம்பதாம்நாள் நுண்ணிய நவதுவாரங்களும் உண்டாகுமே இருநூற்றுப் பத்தாம்நாள் இதயதுடிப்பு பிராணன் உண்டாகுமே அருமை மிகுந்த ஆண்டவர் அருளிய கொடையே கர்ப்பம் சூழ்ந்துபுரளும் காற்றும் தொப்புளில் கடக்குமே மர்மம் இல்லை மாயம் இல்லை தெய்வீகமே இருநூற்று நாற்பதாம்நாள் இனிதாய் அவயங்கள் உண்டாகுமே அருவாய் நீட்டிமுடக்கி அன்னமும் தாயுண்ட சாரத்தையே உயிரில் தொப்புள்கொடியில் ஊடுருவி திரவமாய் செல்லுமே வயிற்றில் பிள்ளையும் வளர்ந்து பூமியில் பிறக்கவே இருநூற்றி எழுபதாம்நாள் ஈர்ப்பும் தலைமுதல்கால்வரை துவாரமாகுமே உருவாய் முடிவளர உண்டாகி அறிவுக்கண் திறக்குமே முன்னூறாவதுநாள் மலைமேலிருந்து முன்தலைகீழாய் விழுவதுபோல வருமே தன்னுயிர் நிறைந்த தன்பிண்டமதில் அபானனின் பலத்தினாலே பூமியில் பிறக்கும் புதுமலர் குழந்தையும் அழுதவண்ணமே சாமியே நாடிநரம்புகளில் சங்கமித்து ஐம்புலனில் இயங்குமே பஞ்சபூதம் புலனில் படர்ந்து நித்தமும் ஒலிக்குமே தஞ்சம் அவனே தரணியில் காப்பவன் அவனே கொழுந்துவிட்டு காலமெல்லாம் கொடியின் முடியில் சுழலவே வழுவாது நேசமும் வாழ்நாள் முழுவதும் தருவனே ஓம்வடிவமாக வளர்ந்து ஓம்கார நாதத்தில் வந்தோம் ஓம்சக்தி அருளால் ஒளியும் வீசியே பயணிக்கவே இறுதியில் திருவுள்ளம் இணைந்து பேரொளி அடையவே மறுமையில் முக்தியை மகேசன் கொடுத்து மீட்பானே ✍️ஆதி தமிழன்
🙏கோவில் - ShareChat
#💞Feel My Love💖 #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 நெல்லும் உளுந்தும் நெடுநாள் வாழவே அல்லும் பகலும் அன்னமாய் உண்ணவே எள்ளும் பச்சைபயிறும் எழிலும் கொடுக்குமே எள்ளளவும் ஐயமில்லை என்றும் உணர்கவே கடுகு சேர்த்து கலந்து ருசிக்க நெடுநாள் நோயும் நெகிழ்ந்து அகலுமே வாழையும் தேனும் வாழ்க்கை வளமாக்கும் வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழலாமே நாட்டுச்சர்க்கரை நம்மில் நலமும் தருமே நாட்டம் கொண்டே நாவில் ருசிக்கவே நெய்யும் பாலும் நேசம் பெருக்கும் மெய்நிகர் உடலும் மேன்மை அடையுமே தங்கம் வெள்ளி தன்மை குணமே அங்கம் வகிக்கும் ஆயுள் முழுவதுமே தாமிரம் ஈயம் தானாய் போகவே பூமியில் இரும்பாய் புதைந்து மக்கவே எறும்பு ஊர்வதுபோல் என்றும் பயணிக்க மறுமை நாளில் மகிமை பெருவாயே தவளை தத்துவதுபோல் தரணியில் செல்கவே கவலைகள் வேண்டாம் கண்ணீர் வேண்டாமே பாம்பு ஊர்வதுபோல் பார்த்து கடக்க வேம்பு தன்மை வெறுத்து போகவே பறவை பறப்பதுபோல் பாசமுடன் செல்கவே அறமும் உணர்ந்து அறிவுடன் மிளிரவே குரங்கு தாவுவதுபோல் குறைகள் அகற்றிட கரமும் கொடுப்பான் கடவுள் ஈசனே ✍️ஆதி தமிழன்
💞Feel My Love💖 - ShareChat
#🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💞Feel My Love💖 அன்னை போலவே அன்பும் பொழிய தன்னில் காதலும் தானாய் வளரவே ஆண்டவன் நம்மை அனுதினமும் காக்க பண்பில் சிறந்து பாவையே வருகவே இல்லறம் இனிக்க இனிமை கூடிட நல்லறம் சிந்தையில் நாளும் மலரவே ஈகை போற்றும் ஈர்ப்பு விசையும் ஆசையும் விருப்பமும் அணுவில் கலக்குமே உடலும் இங்கே உலகில் தவிக்க மடலும் சிவந்து மயக்கம் கொடுக்குமே ஊடலும் நித்தம் உள்ளத்தில் எழுந்திட கூடலும் நிகழும் குதூகலம் பிறக்கவே எண்ணம் பகிர்ந்து ஏக்கமும் ஊற்றிட வண்ணம் பெற்று வரமாய் அமையவே ஐம்பூதங்கள் கலவை ஐக்கியம் கொள்ள ஐம்புலன் நிறைந்து ஐயமோ அகலவே ஏற்றம் பெறவாழ்வில் ஏணியும் நீயே காற்றே நம்முள் கருவாய் திகழுமே ஒழுக்கம் பழக்கம் ஒளிரும் வாழ்வும் ஓம்மெனச் சொல்லில் ஓங்கி தழைக்குமே ஔவை சொற்கள் ஔகாரம் மிளிர ஔவை மொழியில் மௌனம் கொள்கவே சத்தியம் பறையும் சகலமும் சிவமே வித்துகள் மாற்றம் விரைவில் நிச்சயமே அஃது பதித்த அகத்தில் கேடயம் எஃகு மனமும் இறுதிவரை இருக்குமே ✍️ஆதி தமிழன்
🙏நமது கலாச்சாரம் - ShareChat
#✍️தமிழ் மன்றம் #✍️கவிதை📜 #📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள் #🙏நமது கலாச்சாரம் பூமிப்பந்தின் சக்கரத்தில் பூவிநடுவினிலே வீற்றிருப்பவளே தாமிரபரணி ஆற்றில் தவழ்ந்து ஓடுபவளே கொற்றவை நீயே கோமகளும் நீயே வற்றாத நீரூற்றுகள் வரமாய் தந்தாயே மூகாம்பிகை தாயே முத்தமிழ் நீயே ஆகாயம் எங்கும் அணுவாய் நீயே மீனாட்சி தாயே மிளிரும் பேரொளி தானாய் வந்தே தன்னம்பிக்கை தருவாயே மாரியம்மா காளியம்மா மகமாயி நீயே காரிருள் யாவும் கணப்பொழுதில் நீக்குவாயே கன்னியாகுமரி பகவதி கற்பகமே நீயே கன்னித்தமிழ் நீயே கலைவாணி நீயே அலைமகள் மலைமகள் அம்மா நீயே கலைகள் இலக்கியம் காவியம் நீயே தமிழ்த்தாய் நீயே தரணியை ஆள்பவளே தமிழே தீப்பொறி தாயே போற்றி பறையடித்து குலவையிட பரவசம் தருவாயே இறையே பரம்பொருள் நிறைவும் நீயே உறுமி சத்தமிட்டு உடுக்கை அடிக்க உறுதுணை புரியும் உமையாள் வருகவே அம்மா தமிழர் ஆளவே அருள்க உம்மிடம் கேட்டு உம்பாதம் பணிகிறோம் மாற்றம் தரவே மகமாயி வந்திடம்மா காற்றில் உலாவி காலமே வந்திடம்மா தமிழைக் காத்திடவே தாயே எழுகவே தமிழன்னை தாயே தமிழர் அழைக்கிறோம் உறுதியாக வந்திடம்மா உன்னை நம்பிருக்கிறோம் மறுமொழி இன்றி மாற்றம் நிகழவே உன்பிள்ளை கேட்கின்றேன் உத்தமியே வந்திடம்மா இன்னருள் புரியுமே இனிமை பெருகவே ✍️ஆதி தமிழன்
✍️தமிழ் மன்றம் - ShareChat
#🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #📜கவிதையின் காதலர்கள் #✍️தமிழ் மன்றம்
🙏நமது கலாச்சாரம் - நீநேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட நேசிக்கும் உனனை இதயத்தில் சிலநொடிகள் வாழ்ந்து பயர் அன்பின் அர்த்தம் புரியும நீநேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதைவிட நேசிக்கும் உனனை இதயத்தில் சிலநொடிகள் வாழ்ந்து பயர் அன்பின் அர்த்தம் புரியும - ShareChat