_*வாழ்ந்து காட்டு.*_
_*நமது கஷ்டம்,நஷ்டம்*_
_*எதுவென்றாலும்*_ _*அது*_ _*அடுத்தவர்களுக்கு கதை தான்..............*_
_*நமக்கு தான் அது வலியும் ,வேதனையும்...........*_
_*அதை உணர்ந்து*_ _*ஆறுதலை அடுத்தவர்களிடம்*_
_*தேடாமல்............*_
_*நமக்கு நாமே ஆறுதல் அளிக்கும் வகையில் மன தைரியத்தை வளர்த்து கொள்ளுதல் நலம்.*_
_ஒழுங்கா படிச்சா_
_நல்ல வேலை_ _கிடைக்கும்......._
_ஒழுக்கத்தை_ _கடைப்பிடிச்சா_
_எல்லாமே_ _கிடைக்கும்._
_*ஒரு பழத்தில் எத்தனை விதைகள் என்று சொல்ல முடியும்............*_
_*ஆனால்,...........*_
_*ஒரு விதையில் எத்தனை பழங்கள் கிடைக்கும் என்று கணிக்க முடியாது......................*_
_நிகழ்காலத்தை நினைத்து பெருமையோ, சிறுமையோ வேண்டாம்................_
_எதிர் காலத்தில் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம்._
_*செருப்பில் புகுந்த கல்லும், வெறுப்பில் சொன்ன சொல்லும் கடைசி வரை உறுத்தி கொண்டே தான் இருக்கும்.*_
_*காயப்படுத்தியவர்களைக் கடந்து போகும் சூழல் வந்தால், அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் செல்லுங்கள்.*_
_அவமானப்படும் பொழுது_
_விஸ்வரூபம் எடு,_
_வீழ்கின்ற போது அவதாரம் எடு,_ _புண்படுகின்ற போது புன்னகை செய்,_ _வாதாடுவதை விட்டுவிட்டு_
_வாழ்ந்து காட்டு.._
_*நீ பிறருக்குச் செய்யும் துரோகம், உனது பிள்ளைகளுக்கு நீ சேர்த்து வைக்கும் பாவங்கள் ஆகும்.*_
_தெளிவாக இருப்பவர்களுக்கு அறிவுரை தேவைப்படுவதில்லை..._
_அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் எல்லாருமே தெளிவாகி விடுவதுமில்லை._
_*சந்தேகம் தடைகளை மட்டும் தான் அறியும்*_
_*தன்னம்பிக்கை தான் பாதைகளை கண்டறியும்.*_
_நேரத்திலும்,நேர்மையாக இருப்பதிலும்_
_கவனமாக இருங்கள்..._
_தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது..._
_*என்ன தான் தத்துவங்கள்*_
_*படித்தாலும் கேட்டாலும்..*_
_*அதனருமை புரிவதில்லை,*_
_*அனுபவத்தால் உணரும் வரை.*_
_மனம், வாக்கு, காயம்_
_என்னும் மூன்று கருவிகளாலும் (திரி கரணங்களாலும்)_ எதை _விதைக்கின்றோமோ அதுவே,_ _நமக்கு வந்து சேரும். நன்மை செய்தால் நன்மை விளையும். தீமை செய்தால் தீமை விளையும். "விளையும்" என்று சொல்லவே, ஒன்று பலவாக மாறிப் பயன்தரும் என்பது விளங்கும்._
_*ஒரு நெல்லை விதைத்தால், பல நெல்மணிகள் விளைவதைப் போல. ஒரு தேங்காயை வைத்து வளர்த்தால், பல தேங்காய்கள் கிடைப்பது போல. ஒரு மாங்கொட்டையை விதைத்தால், பல மாங்காய்கள் கிடைப்பது போல.*_
_நன்மை தரும் நினைவுகளை மனத்தாலும், நன்மை தரும் சொற்களை வாக்காலும், நன்மை தரும் செயல்களை உடலாலும் செய்து வந்தால், அவை எப்போது எப்படிப் பலன் தரும் என்பதற்கு விடையாக, "மூதுரை" என்னும் நூலில், பின்வரும் பாடலைக் காட்டி அருளுகின்றார்._
_*நன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி*_
_*என்று தரும்கொல் எனவேண்டா, - நின்று*_
_*தளரா வளர்தெங்கு, தாள் உண்ட நீரைத்*_
_*தலையாலே தான் தருதலால்.*_
_*இதன் பொருள்*_
_நின்று தளரா வளர் தெங்கு --- ஒரே இடத்தில் நிலைபெற்று, சோராமல் வளர்கின்ற தென்னை மரமானது, தாள் உண்ட நீரை --- தன் அடியால் (வேரின் மூலமாக) உண்ட தண்ணீரை, தலையாலே தான் தருதலால் --- தனது முடியாலே, சுவையுள்ள இளநீராக்கித் தருதலால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் --- நல்ல குணமுடைய ஒருவனுக்கு ஓர் உதவியை ஒரு காலத்தில் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா --- அந்த உதவியை அவன் எப்பொழுது செய்வானோ என்று ஐயம் கொள்ள வேண்டுவதில்லை._
_*நற்குணம் உடையவனுக்கு உதவி செய்தால், அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்.*_
_தாள் உண்ட நீர் --- தென்னை மரத்திற்குப் பாய்ச்சிய நீர், அது தருகின்ற இளநீரைப் போலத் தூய்மையானதும், இன்சுவை உடையதும், மருத்துவக் குணம் வாய்ந்த்தும் அல்ல. தான் வளர்வதற்குப் பாய்ச்சிய எந்த நீரையும் உண்டு, அதற்கு கைம்மாற்றாக (பிரதி உபகாரமாக) அற்புதமானதொரு இளநீரைத் தென்னை மரமானது அது உள்ள காலம் வரை தருகின்றது._
_*ஒரு தேங்காயை வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட தென்னை மரமானது, தான் உள்ளவரையில் எல்லோருக்கும் இளநீர்க் காய்களை அளவில்லாமல் வழங்கி வருகின்றது. தன்னை வைத்தவனுக்கு மட்டுமல்லாமல், அவனது சந்ததிக்கும் மட்டுமல்லாது, தன்னை வந்து சார்ந்தோர்க்கும், இன்னார் இனியார் என்று பாராமல், வழங்கி வருகின்றது.*_
_அதுபோலவே, ஒருவன் ஒருவனுக்குச் செய்த உபகாரமானது, அவனாலோ, அல்லது யாராலோ, எவ்விதத்திலாவது, பலவிதமாக வந்து பயன் தரும் என்பதை அறியலாம்._
_*செய்த அறச் செயலானது நிலைத்து நின்று, தக்க காலத்தில், உரிய பயனைத் தரும். எனவே, இயன்ற வழிகளில் எல்லாம், அறச் செயல்களை எப்போதும் ஒழியாது செய்து வருதல் வேண்டும் என்பது இப் பாடலின் கருத்து.*_
#✍️Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️ #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை