ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் 98427 57275
ShareChat
click to see wallet page
@astroppsathis
astroppsathis
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் 98427 57275
@astroppsathis
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்/9842757275
லக்னம்/லக்னாதிபதியின் சுப/அசுப திருவிளையாடல்கள்... 1]லக்னாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி லக்னாதிபதிக்கு நட்பாக இருந்தால் லக்னாதிபதியின் திசை புத்தியிலோ,நின்ற அதிபதியின் திசை புத்தியிலோ நற்பலன்கள் உண்டாகும்.பகையாக இருந்தால் தீயபலன்கள் உண்டாகும். 2]லக்னாதிபதி 6/8/12ல் நின்றாலும்,6/8/12 க்குரியவர்கள் லக்னத்தில் நின்றாலும் உடல், மன ,ஆன்ம பலம் குறையும்.லக்னாதிபதி மறைமுகமாகவோ. சூட்சுமமாகவோ ஏதேனும் ஒரு வகையில் வலுப்பெற்றிருந்தால் விதிவிலக்கு உண்டு. 3]லக்னாதிபதி சுபக்கிரகமாகி திரிகோணங்களில் நின்றாலும்,பாவக்கிரகமாகி கேந்திரங்களில் நின்றாலும் நன்மையே.பாவக்கிரகமாகி 6/8/12ல் நின்றால் மறைமுகமாகவோ, சூட்சமமாகவோ பலம்பெற்று சுபத்தன்மை அடைந்து இருப்பின் நன்மையே. 4]லக்கினாதிபதியும் 7 ம் அதிபதியும் கூடி அசுபத்தன்மை அடைந்து 6/8/12 ல் நின்றாலோ,பகை வீட்டில் நின்றாலோ நீசமாகி இருந்தாலோ திருமணம் என்பது குதிரைக்கொம்புதான். 5]லக்னமும்/லக்னாதிபதியும் நேரடியாக பலமிழந்து இருந்தாலும்,லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னாதிபதி நின்ற நட்சத்திர அதிபதியும் பலம் பெற்றிருந்தால் லக்னம் பலமே. 6]லக்னாதிபதி எல்லா நிலைகளிலும் பலமிழந்து இருந்தால் எத்தனை யோகங்கள் இருந்தாலும்,யோக திசையே நடந்தாலும் ஜாதகர் அனுபவிக்க முடியாது.லக்னாதிபதி பலமிழந்து இருந்தால் லக்னாதிபதிக்கு உரிய ராசிக்கல்லை வெள்ளி மோதிரத்தில் செய்து அணிந்து கொள்வது லக்னத்தை பலப்படுத்தும்.லக்னாதிபதிக்குரிய தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவது நல்லது.உதாரணத்திற்கு செவ்வாய் என்றால் முருகப்பெருமான். 7]லக்னம் வர்கோத்தமம் ஆகி லக்னாதிபதியும் வர்கோத்தமம் ஆகியிருப்பது யோக ஜாதகமே.லக்னாதிபதியின் திசா புத்தியில் முன்னேற்றம் உண்டாகும்.லக்னம் வர்கோத்தமம் ஆகி வேறு எந்த கிரகங்கள் வர்கோத்தமம் ஆகியிருந்தாலும் அந்த கிரகத்தின் திசா புத்தியில் நற்பலன்கள் உண்டாகும்.லக்ன யோகாதிபதியாக இருப்பின் மிகச்சிறப்பு. 8]லக்கனத்திற்கு இருபுறமும் சுபகிரகங்கள் நிற்க பொருளாதார நிலையில் படிப்படியாக உயர்வைக் கொடுக்கும்.லக்கனத்திற்கு இருபுறமும் பாவகிரகங்கள் நிற்க தரித்திர நிலை மற்றும் வறுமை நிலையை உண்டாக்கும்.பாவகிரகங்கள் நின்று சுபத்தன்மை அடைந்திருப்பின் விதிவிலக்கு உண்டு. 9]லக்னாதிபதியும் ராசிஅதிபதியும் ஒன்றுக்கொன்று பகையானாலோ 6/8 சஷ்டாஷ்க நிலையில் நின்றாலோ பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும்.லக்னத்திற்கோ,லக்னாதிபதிக்கோ சுபகிரகத்தொடர்பு ஏற்பட்டாலோ,லக்கனத்தில் சுபக்கிரகம் நின்றாலோ விதிவிலக்கு உண்டு. 10]லக்கினாதிபதியும் 7 ம் அதிபதியும் சேர்ந்து பகை ராசியில் இருந்தாலோ,அல்லது நட்பு ராசியிலிருந்து பகை கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும். 11]லக்னாதிபதியை விட 7 ம் அதிபதி பலம் பெற்று இருந்தால் மனைவி வழியில் ஆதாயம்,சொத்துக்கள்,செல்வங்கள் வரும்.ஆனால் மனைவிக்கு அடங்கி போக நேரிடும்.பலம் குறைந்து இருந்தால் மனைவி அடங்கி நடப்பாள். 12]கணவன்/மனைவி இருவரின் ஜாதகங்களிலும் லக்னமும் லக்னாதிபதியும் வர்க்கோத்தமம் ஆகியிருப்பின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுக்கும்.7 ம் அதிபதி வர்க்கோத்தமம் ஆகி இருப்பின் கணவன் மனைவிக்குள் நல்ல அன்யோன்யத்தை கொடுக்கும். 13]லக்னாதிபதி ராசிக்கட்டத்தில் பலமிழந்து இருந்தாலும்,நவாம்சத்தில் பலம் பெற்றிருந்தால் லக்னம் பலமே.லக்னாதிபதி நின்ற ராசிஅதிபதி நவாம்சத்தில் பலம் பெற்றிருந்தாலும் லக்னம் பலமே. 14]கணவன்/மனைவி இருவரின் ஜாதகங்களிலும் லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது நல்ல அமைப்பு.கணவனின் லக்னாதிபதி மனைவியின் ஜாதகத்திலும்,மனைவியின் லக்னாதிபதி கணவனின் ஜாதகத்திலும் பலம் பெற்று இருப்பதும் நல்ல பொருத்தமே. 15]லக்னாதிபதி எந்த பாவகத்தில் உள்ளாரோ அந்த பாவகத்திற்கு உண்டான வர்க்கச்சக்கரத்தில் பலம் பெறுதல்.உதாரணத்திற்கு லக்னாதிபதி 4 ல் இருந்தால் வர்க்க சக்கரத்தில் சதுர்தாம்சத்தில் பலம் பெறுவது நல்ல அமைப்பாகும். 16]லக்கினாதிபதியும் 7 ம் அதிபதியும் கணவன்/மனைவி இருவரின் ஜாதகங்களிலோ,அல்லது ஒருவரின் ஜாதகத்திலோ ஒன்றுக்கொன்று 6/8 மற்றும் 2/12 என்ற நிலையில் அமைவது திருப்தியற்ற மணவாழ்க்கையை கொடுத்துவிடும். 17]லக்னம்/லக்னாதிபதியோடு எந்த கிரகம் பலம் பெற்று சுபத்தன்மை அடைந்து தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகத்தின் திசை புத்தியில் நற்பலன்கள் உண்டாகும். 18]லக்னாதிபதி நவாம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசிக்கு கோச்சார குரு 2,5,7,9,11ல் வரும் காலங்கள் திருமணம்,வீடு கட்டுதல், மனை வாங்குதல், வாகனம் வாங்குதல்,புதிய தொழில் தொடங்குதல் போன்ற சுபகாரியங்களுக்கு ஏற்ற காலங்களாகும்.நடப்பு திசை/புத்தியும் சாதகமாக இருந்தால் சிறப்பு. 19]8 ம் அதிபதி பலவீனப்பட்டு ஆயுள்ஸ்தானம் பாதிப்படைந்திருந்தாலும் லக்னம்/லக்னாதிபதியோடு பலம் பெற்ற,அசுபத்தன்மை அடையாத குரு பகவானின் தொடர்பு இருந்தால் ஆயுள்பலம்/தீர்க்காயுள். 20]லக்னாதிபதி எந்நிலையிலும் கெடாமல் பலம் பெற்று சுபத்தன்மை அடைந்து இருந்து பௌர்ணமி யோகத்தில் பிறந்திருந்தால் சமுதாயத்தில் மதிப்பு,மரியாதை,அந்தஸ்தை கொடுக்கும்.கூடவே 5/9 பலம் பெற்றிருந்தால் நாடாளும் யோகத்தையே கொடுக்கும்... ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் குறிப்பு: அடியேனின் ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரைப்பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும் நண்பர்களே. Facebook link: https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share #ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் Page link: https://www.facebook.com/sriselvanayakiammanastro/ Instagram link: https://instagram.com/astro_sri_selvanayagi_amman Subscribe to youtube link: https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw உங்களின் தனிப்பட்ட சுயஜாதகத்தை கட்டண முறையில் ஆய்வு செய்ய விரும்பினால் 9842757275 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தயவுசெய்து கமெண்ட்டில் ஜாதகத்தை பதிவிட்டு பலன் கேட்காதீர்கள்.சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளவும் நண்பர்களே... நன்றி
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் - 7 44 Y செல்வநாயகி 1 7 ஜோதிடாலயம் 1L அம்மன் 7 44 Y செல்வநாயகி 1 7 ஜோதிடாலயம் 1L அம்மன் - ShareChat
Astro P.P.sathis [DYHE] 9842757275 [whatsapp] ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரை பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும். Facebook link: https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share Page link: https://www.facebook.com/sriselvanayakiammanastro/ Instagram link: https://instagram.com/astro_sri_selvanayagi_amman Subscribe to youtube link: https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw நன்றி ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் #ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் - ஜாதகத்தில் லக்னம்லக்னாதிபதி ஒரு மற்றும் ராசி ராசிஅதிபதி இந்தநான்கில் ஏதேனும் ஒன்றையாவதுகுருபார்க்க வேண்டும் இந்தஅமைப்பில்ஒரு ருந்தால்தான்யோகதிசையே ஜாதகம் நடப்பில் வந்தாலும்யோகபலன்களை அனுபலிக்கமுடியும் முழுமையாக நண்பர்களே. ஸ்ரீசெல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் ஜாதகத்தில் லக்னம்லக்னாதிபதி ஒரு மற்றும் ராசி ராசிஅதிபதி இந்தநான்கில் ஏதேனும் ஒன்றையாவதுகுருபார்க்க வேண்டும் இந்தஅமைப்பில்ஒரு ருந்தால்தான்யோகதிசையே ஜாதகம் நடப்பில் வந்தாலும்யோகபலன்களை அனுபலிக்கமுடியும் முழுமையாக நண்பர்களே. ஸ்ரீசெல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் - ShareChat
Astro P.P.sathis [DYHE] 9842757275 [whatsapp] ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரை பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும். Facebook link: https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share Page link: https://www.facebook.com/sriselvanayakiammanastro/ Instagram link: https://instagram.com/astro_sri_selvanayagi_amman Subscribe to youtube link: https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw நன்றி ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் #ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் - ஆண்ஜாதகம் என்றால் லக்னம்லக்னாதிபதி சூரியன் இந்த மூன்றில் ஒன்றாவது ஆண்ராசியில் அமரவேண்டும்பெண்ஜாதகம் என்றால் லக்னம்லக்னாதிபதிசந்திரன் இந்த மூன்றில் ஒன்றாவது பெண்ராசியில் அமரவேண்டும்இந்த மூன்றும் ஆணுக்கு பெண்ராசியிலும்பெண்ணுக்கு ஆண்ராசியிலும் அமர்வது சிறப்பல்ல நண்பர்கள. ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் ஆண்ஜாதகம் என்றால் லக்னம்லக்னாதிபதி சூரியன் இந்த மூன்றில் ஒன்றாவது ஆண்ராசியில் அமரவேண்டும்பெண்ஜாதகம் என்றால் லக்னம்லக்னாதிபதிசந்திரன் இந்த மூன்றில் ஒன்றாவது பெண்ராசியில் அமரவேண்டும்இந்த மூன்றும் ஆணுக்கு பெண்ராசியிலும்பெண்ணுக்கு ஆண்ராசியிலும் அமர்வது சிறப்பல்ல நண்பர்கள. ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் - ShareChat
ராசிக்கற்களின்(நவரத்தினங்கள்) பயன்பாடு/புரிதல்... ஜோதிட சாஸ்திரத்தின் ஓர் அங்கமே ரத்தின சாஸ்திரமாகும். நவரத்தினங்களில் ஏராளமான வகைகள் உள்ளன.அவற்றில் நவக்கிரகங்களுக்கென குறிப்பிட்ட ரத்தினங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அவை சூரியனுக்கு மாணிக்கம்,சந்திரனுக்கு முத்து, செவ்வாய்க்கு பவளம் ,புதனுக்கு மரகதப்பச்சை,குருவுக்கு கனகபுஷ்பராகம், சுக்கிரனுக்கு வைரம்,சனிபகவானுக்கு நீலக்கல்,ராகுவிற்கு கோமேதகம், கேதுவிற்கு வைடூரியம் ஆகும்.இவற்றிற்கு மாற்றாக உபரத்தினங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ராசிக்கற்கள் அணிவதில் மிகுந்த கவனம் தேவை.உங்கள் சுய ஜாதகத்தில் கிரகங்களின் பலம்/ பலவீனம் மற்றும் நடப்புதிசை ஆகியவற்றை பொறுத்துதான் ராசிக்கற்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஏனென்றால் சில ராசிக்கற்கள் எதிர்மறையான பலன்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.உங்கள் சுய ஜாதகத்தை ஆய்வுசெய்து சரியான ராசிக்கற்களை தேர்ந்தெடுத்து தகுந்த விரலில் அணிவதே நல்லது.தற்போது நடைமுறையில் பொதுவாக அவரவர் ராசிக்கு உண்டான கற்களை தேர்ந்தெடுத்து அணிகின்றனர்.அது அனைவருக்கும் நற்பலன்களை தருவதில்லை. உதாரணத்திற்கு மேஷ லக்னம். ராசி மகரம் அல்லது கும்பம் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ராசிக்கல் என்று சனிபகவானுக்குரிய நீலக்கல்லை பெரும்பாலும் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் மேஷ லக்னத்திற்கு சனிபகவான் பாதகாதிபதி. மேஷ லக்னத்திற்கு சனிபகவான் மகரம்,கும்பம் மற்றும் துலாம் ராசிகளில் ஆட்சி,உச்சம் என்ற நிலையில் இருந்தால் நீலக்கல்லை அணியும் போது பாதகாதிபதி சனிபகவான் மேலும் பலம் பெறுகிறார். பாதகாதிபதியை மேலும் கற்களை அணிந்து பலப்படுத்தும் போது திசை புத்திகளில் கெடுபலன்களைத்தான் கொடுப்பார். உங்கள் சுய ஜாதகத்தில் லக்ன பாதகாதிபதி,மாரகாதிபதி,யோகாதிபதிகளின் பலம்,பலவீனம் நடப்பு திசை புத்தியை ஆய்வு செய்து அதற்குத் தகுந்தார் போல் ராசிக்கற்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் நண்பர்களே... நல்ல தரமான ஒரிஜினல் ராசிக்கற்கள் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும்.ராசிக்கற்களை கிரகங்களை பலப்படுத்தவும்,கிரகங்களின் காரகத்துவங்களை அனுபவிக்கவும் பயன்படுத்துகிறோம்.லக்ன மாரகாதிதிபதி மற்றும் பாதகாதிபதிக்கு உண்டான ராசி கற்களை அணிவதால் தீமையான பலன்களே ஏற்படும்.6/8/12ம் அதிபதிகளுக்கு உண்டான ராசிகற்கள் அணிந்தால் தீய பலன்களே ஏற்படும்.அப்படி அணிவதாக இருந்தால் அந்த கிரகம் சுபத்தன்மை அடைந்து இருக்கவேண்டும்.1,5,9ம் அதிபதிகள் 6/8/12ல் நின்றால் அந்த கிரகத்தின் திசை நடப்பில் வரும்போது அதற்குண்டான ராசிக்கற்களை அணியலாம்.திசை முடிந்தால் கழற்றி விடுவதே நல்லது.சூரியனுக்குண்டான மாணிக்க கல்லையும், சுக்கிரனுக்கு உண்டான வைரக்கல்லையும் சுய ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் நல்லநிலையில் இருந்தாலும் சோதித்துப் பார்த்த பின்னரே அணிய வேண்டும். விதிவிலக்கு:பரிபூரண முழு இயற்கை சுபரான குருபகவானுக்கு உண்டான கனகபுஷ்பராக கல்லை பொதுவாக அனைவரும் அனைத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.கர்ம காரியங்களில் கலந்து கொள்ளும் போதும், தீட்டு காலங்களிலும், அசைவம் சாப்பிடும் போதும் ராசிக்கற்களை கழற்றி வைத்து விட வேண்டும்.அப்படி தவறும் பட்சத்தில் ராசிக்கல்லை ஒரு இரவு விபூதியிலோ அல்லது சுத்தமான பசும்பாலிலோ போட்டு சுத்திசெய்தபின்பு அணிந்து கொள்ளலாம். ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் குறிப்பு: அடியேனின் ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரைப்பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும் நண்பர்களே. Facebook link: https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share #ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் Page link: https://www.facebook.com/sriselvanayakiammanastro/ Instagram link: https://instagram.com/astro_sri_selvanayagi_amman Subscribe to youtube link: https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw உங்களின் தனிப்பட்ட சுயஜாதகத்தை கட்டண முறையில் ஆய்வு செய்ய விரும்பினால் 9842757275 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தயவுசெய்து கமெண்ட்டில் ஜாதகத்தை பதிவிட்டு பலன் கேட்காதீர்கள்.சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளவும்.கமெண்டில் அனைவருக்கும் பதில் அளிக்க நேரம் ஒதுக்க முடிவதில்லை... நன்றி
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் - T ஸ்ரீசெல்வநாயகி அம்மன்ஜோதிடாலயம் T ஸ்ரீசெல்வநாயகி அம்மன்ஜோதிடாலயம் - ShareChat
பரிகார பலன் பற்றிய புரிதல்... ஒரு ஜாதகருக்கு தோஷ நிவர்த்திக்காக பரிகாரம் சொன்னால் அந்த ஜாதகருக்கு ஐந்தாம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒன்பதாம் இடமாகிய பாக்கிய ஸ்தானமும் பலவீனமாக இருக்கக்கூடாது.முக்கியமாக ராகு-கேதுக்கள் 5/9 ஆம் இடங்களில் இருக்கக்கூடாது.ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்கள் பலமிழந்த ஜாதகருக்கு பரிகாரம் சொன்னால் பலனளிக்காது.மேற்சொன்ன அமைப்பில் உள்ள ஜாதகருக்கு எப்போது பரிகாரம் சொல்லவேண்டுமென்றால் கோச்சார குரு லக்னத்தையோ, லக்னாதிபதியையோ,இராசியையோ அல்லது எந்த கிரகத்திற்காக பரிகாரம் செய்கிறோமா அந்த கிரகத்தோடு தொடர்புகொள்ளும் காலத்தில் ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்தால்தான் பலன் அளிக்கும்.அல்லது பிரசன்னம் பார்த்து பரிகாரம் செய்யலாம்.பரிகாரம் செய்வதற்கு கர்மாவின் துணையும் ஆதரவும் நிச்சயம் வேண்டும்.அப்போதுதான் பரிகாரம் பலிதமாகும்.அதேபோல் 5/9ஆம் இடங்கள் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தாலும் ராகு/கேது மற்றும் பாதகாதிபதி தசா புத்தி நடப்பில் இருந்தால் மேற்சொன்ன காலகட்டத்தில்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.பரிகாரம் செய்வதற்கு முந்தைய நாள் குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம்.ஏனென்றால் எந்தப் பரிகாரம் செய்தாலும் அந்தப் பரிகாரம் பலனளிக்க குலதெய்வ அனுக்கிரகம் நிச்சயம் வேண்டும் நண்பர்களே... ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் குறிப்பு: அடியேனின் ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரைப்பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும் நண்பர்களே. Facebook link: https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share #ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் Page link: https://www.facebook.com/sriselvanayakiammanastro/ Instagram link: https://instagram.com/astro_sri_selvanayagi_amman Subscribe to youtube link: https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw உங்களின் தனிப்பட்ட சுயஜாதகத்தை கட்டண முறையில் ஆய்வு செய்ய விரும்பினால் 9842757275 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தயவுசெய்து கமெண்ட்டில் ஜாதகத்தை பதிவிட்டு பலன் கேட்காதீர்கள்.சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளவும்.கமெண்டில் அனைவருக்கும் பதில் அளிக்க நேரம் ஒதுக்க முடிவதில்லை... நன்றி
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் - 1 செல்வநாயகி % @ 1 செல்வநாயகி % @ - ShareChat