💞தூக்கத்தை விட ஏன் தொழுகை சிறந்தது?
💞ஏனென்றால்!
ஃபஜ்ரு தொழுகையின் முன் சுன்னத்
இரண்டு ரகஅத்துகள், இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி صلى الله عليه وسلم] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா[ரலி] நூல் : முஸ்லிம்
💞நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் சொல்கிறார்கள்:
யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில்
இருக்கின்றார்.” (தப்ரானி
💞நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது குர்ஆன் 17:58
💞ஃபஜ்ர் தொழுதவர் ஷைத்தானை வீழ்த்தி வெற்றியாளராகிறார்.
அவர் முகம் பிரகாசமாக இருக்கும்,
அவர் நெற்றி ஒளியிரும்,
அவரின் நேரம் பரக்கத்தான நேரமாக மாறும்.
💞ஃபஜ்ர் தொழுகும் நல் வாய்ப்பு பெற்ற நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்!
💞 எங்கள் இறைவா!
ஐந்து நேரத் தொழுகையை எங்கள் ஆயுள் உள்ளவரை தொடர்ந்து தொழக்கூடிய பாக்கியத்தை
எங்களுக்குத் தந்துவிடு யா ரஹ்மானே!
💞
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ ۖ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
என் இறைவனே!
தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!
எங்கள் இறைவனே!
என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
அல்குர்ஆன் : 14:40 #📗குர்ஆன் பொன்மொழிகள்
💞யா அல்லாஹ்!
நீ மன்னிக்க கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக!
எங்களுடைய முன் பின் பாவங்களையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக!
நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக!
எங்களை மன்னித்த பிறகே எங்களுக்கு மரணத்தை தருவாயாக எங்களை மன்னித்த பிறகே அந்த மண்ணரைக்குள் நுழைய செய்வாயாக! எங்களை மன்னிக்காமல் எங்களுக்கு மரணத்தை தந்து விடாதே எங்களை மன்னிக்காமல் அந்த மண்ணறைக்குள் எங்களை அனுப்பி விடாதே! யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய நலன்கள்!
யா அல்லாஹ்!
கோரிக்கைகளில் சிறந்ததை!,
துஆக்களில் சிறந்ததை!
உயர்ந்த வெற்றியை!
நேர்த்தியான அமலை!
மேலான நற் கூலியை!
நல்வாழ்வை, நல்மரணத்தை உன்னிடம் வேண்டுகிறேன்!
என்னை உறுதியோடு நிற்கச் செய்வாயாக!
எனது நன்மையின் தட்டையைக் கனமாக்குவாயாக!
எனது ஈமானை வலுவாக்குவாயாக!
எனது பதவியை உயர்த்துவாயாக!
எனது தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக!
என் பிழையைப் பொறுத்தருள்வாயாக!
உன்னிடம் சுவனத்தின்
உயர்பதவிகளைக் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
நான் உன்னிடம் நல்லதொடக்கத்தையும்,
அதனுடைய நல்ல முடிவுகளையும்,
அவற்றை ஒன்று திரட்டி தருபவைகளையும்
அவற்றில் ஆரம்பமானதையும்,
அவற்றின் இறுதியையும், புறத்துள்ளவற்றையும், அகத்தில் உள்ளவற்றையும் கேட்கிறேன்!
உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
உறுப்புகளால் புரியும் காரியங்களின் நலன்களையும்!
இதயத்தால் எண்ணும் செயல்களின் நலன்களையும்!
நான் செய்யும் மற்ற அமல்களின் நலன்களையும்!
என் செயல்களின் நலன்களையும்!
அகத்திலுள்ளவற்றின் நலன்களையும்!
புறத்திலுள்ளவற்றின் நலன்களையும்!
சுவனத்தின் உயர்பதவிகளையும் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
உன்னிடம் என் பெயரை உயர்த்தும் படியும்,
என் பாவச்சுமைகளை என் முதுகிலிருந்து இறக்கிவிடுவதையும்,
என் விவகாரங்களை சீர்படுத்துவதையும்,
என் இதயத்தைத் தூய்மையாக்குவதையும்,
என் கற்பொழுக்கத்தை பாதுகாப்பதையும்,
என் கப்ரை ஒளியாக்குவதையும் உன்னிடம் வேண்டுகிறேன்!
மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்!
யா அல்லாஹ்!
நான் உன்னிடம்
என் செவி,
என் பார்வை,
என் உயிர்,
என் உடல்,
என் குணம்,
என் குடும்பம்,
என் செல்வம்,
என் வாழ்வு,
என் மரணம்,
என் செயல் இவையனைத்திலும்
நீ பரக்கத் செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்!
மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்.(ஹாகிம்)
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹபிஹி அஜ்மயீன்.
வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன். #🕋யா அல்லாஹ்
💞யா அல்லாஹ்!
எங்களுடைய இறுதி முடிவை அழகாக்கி வைப்பாயாக!
தொழுகையில் ஸஜ்தாவில், குர்ஆன் ஓதிய நிலையில் உன்னை திக்ரு செய்யும் நிலையில் நீ பொருந்திக் கொள்ளக்கூடிய நிலையிலே எங்களுக்கு இறுதி முடிவை வழங்குவாயாக!
யா ரஹ்மானே!
#🕋யா அல்லாஹ்
💞 எங்கள் இறைவா!
எங்களின் காலை நேரத்தை நல்லோர்களின் காலை நேரமாகவும்!
எங்களின் மாலை நேரத்தை உன்னை திக்ரு செய்பவர்களின் மாலை நேரமாகவும்!
எங்களின் உள்ளங்களை உன்னை பயப்படுவோரின் உள்ளங்களாகவும்!
எங்களின் சரீரங்களை உனக்கு வழிபடுவோரின் சரீரங்களாகவும்!
எங்களின் அமல்களை முத்தகீன்களுடையா அமல்களாகவும்!
எங்களுடைய நாவுகளை திக்ரு செய்பவர்களின் நாவுகளாகவும்,
ஆக்கியருள்வாயாக!
மேலும் மறதியாளர்களின் தூக்கத்தை விட்டு எங்களை விழிப்படையச் செய்வாயாக!
நல்லோர்களின் துஆவில் எங்களை இணைத்தருள்வாயாகா!
அகிலத்தார்களை இரட்சித்துக் காப்பாற்றுபவனே! சொர்க்கத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக!
எங்களின் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர், தோழர்கள் அனைவரின் மீதும் எங்களின் மீதும் அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவானாகா!
அகில உலகங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானவையாகும்.
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன்
#📗குர்ஆன் பொன்மொழிகள்
💞நபிமொழி!
ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர.
அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படுகிறது.
– மனிதர்களின் செயல்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது, “இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது;தமக்கும் தம் சகோதரருக்குமிடையில் பகைமையுள்ள அடியாரைத் தவிர. அப்போது, “இவ்விருவரும் (சமாதானத்தின்பால்) திரும்பும்வரை இவ்விருவரையும் விட்டுவையுங்கள். அல்லது தாமதப்படுத்துங்கள்” என்று கூறப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 45
(முஸ்லிம்: 5014)
#🕋யா அல்லாஹ்
💞அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னைஆயிஷா(ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த துஆ!
இம்மை மறுமைக்கான அனைத்து நலன்களையும் உள்ளடக்கியது!
யா அல்லாஹ்!
உன்னிடம் நன்மைகள் அனைத்தையும் உடனே கிடைக்கின்ற தாமதமாக கிடைக்கின்ற அவைகளில்
நான் அறிந்த அறியாத அனைத்து நன்மைகளையும் கேட்கிறேன்!
உன்னிடம் அனைத்து தீங்குகளிலிருந்தும் உடனே வருகின்ற தாமதமாக வருகின்ற,அவைகளில் நான் அறிந்த அறியாத அனைத்து தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்!
உன்னிடம் சொர்க்கத்தையும்,
சொல்லாலும்,செயலாலும் அதன் பால் சேர்க்கும் அனைத்தையும் கேட்கிறேன்
நரகத்தைவிட்டும், சொல்லாலும், செயலாலும் அதன் பால் சேர்க்கும் அனைத்தையும் விட்டும் உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன்!
உன்னிடம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் அவர்கள் கேட்ட அனைத்து நன்மைகளையும் கேட்கிறேன!
யா அல்லாஹ்!
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் அவர்கள் எவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடினார்களோ அவற்றையிலிருந்து நானும் பாதுகாவல் தேடுகிறேன்!
(நபிﷺ அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அழகிய துஆ .நூல்; இப்னு மாஜா)
#🕋யா அல்லாஹ்







![🕋யா அல்லாஹ் - அலலாஹ Wm மகிழ்ச்சியாானவாழ்கிகை இன்பமானவாழ்கிகை நோமறிறவாழ்கிகை பரகிகதிநிறைந்தவாழ்கிகை வாழ்கிகை கடன்இல்லாத நிம்மதியானவாழ்கிகை அமைதியானவாழ்கிகை 9 வங்களுகிகுதி தந்தருவ்வாூாக ரஹமானே (I Tyisha] அலலாஹ Wm மகிழ்ச்சியாானவாழ்கிகை இன்பமானவாழ்கிகை நோமறிறவாழ்கிகை பரகிகதிநிறைந்தவாழ்கிகை வாழ்கிகை கடன்இல்லாத நிம்மதியானவாழ்கிகை அமைதியானவாழ்கிகை 9 வங்களுகிகுதி தந்தருவ்வாூாக ரஹமானே (I Tyisha] - ShareChat 🕋யா அல்லாஹ் - அலலாஹ Wm மகிழ்ச்சியாானவாழ்கிகை இன்பமானவாழ்கிகை நோமறிறவாழ்கிகை பரகிகதிநிறைந்தவாழ்கிகை வாழ்கிகை கடன்இல்லாத நிம்மதியானவாழ்கிகை அமைதியானவாழ்கிகை 9 வங்களுகிகுதி தந்தருவ்வாூாக ரஹமானே (I Tyisha] அலலாஹ Wm மகிழ்ச்சியாானவாழ்கிகை இன்பமானவாழ்கிகை நோமறிறவாழ்கிகை பரகிகதிநிறைந்தவாழ்கிகை வாழ்கிகை கடன்இல்லாத நிம்மதியானவாழ்கிகை அமைதியானவாழ்கிகை 9 வங்களுகிகுதி தந்தருவ்வாூாக ரஹமானே (I Tyisha] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_48507_2510cd8a_1769215046015_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=015_sc.jpg)





