பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
ShareChat
click to see wallet page
@baskar3883
baskar3883
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969)திருநாங்கூர்11 கருடசேவை--2026 19/01/26)(132ஆம் ஆண்டு) : பதிவு 4/4. 🙏🦅🦅🦅🦅🦅🦅🦅🙏 வைபவ புராணம். 👌👏👌👏👌👏 கருட சேவை திருமங்கை ஆழ்வார் காலத்திலோ, அவருக்கு ஆயிரம் ஆண்டுகள் பின்னால் கூட நடைபெற வில்லை.(ஆனால் ஆழ்வார் திவ்ய தேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்வதும்,மஞ்சக்குளி திருமஞ்சனமும் நடந்தது).1894 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக கருடசேவை நடந்தது. சித்திரகூடம் விஞ்சமூர் ஸ்ரீ. உ.வே. ஸ்ரீநிவாஸாசா ர்யார் ஸ்வாமி (இன்ஸ்பெக்டர் சாமி ஐய்யங்கார்) ,பள்ளிக் கல்வி ஆய்வாளராக, திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றிருந்தபோது, நம்மாழ்வார் கண்டருளும் நவதிருப்பதி கருடசேவை உற்சவத்தைச் சேவித்து, இதேபோல் திருமங்கை ஆழ்வாருக்கும் திருநாங்கூர் 11 திருப்பதி கருடசேவை உற்சவம் கண்டருளப் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆழ்வார் அநுக்ரஹத்தால் அவரது முயற்சி கைகூடி,1894 ஆம் ஆண்டு முதல்,ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, "திருநகரி ஸ்ரீஎம்பார் வரதாச்சாரி ஸ்வாமி",அவர்கள் முயற்சியால், கருடசேவை கமிட்டி அமைக்கப்பட்டு, புரவலர்கள் பலர் சேர்ந்து சீரும், சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். திருமணிமாடக் கோயில் முன்னுள்ள மைதானத்தில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு,அங்கு 11 திவ்ய தேசப் பெருமாள்களும் எழுந்தருள்வார்கள். ஆழ்வார் மங்களாசாசனம்: 🔔🔊🔉📢🎷🥁📯🎻🎺🔔 19/01/2026 அதிகாலை 5 மணிக்கு திருமங்கை ஆழ்வார் திருமணி மாடக்கோயில் ஸ்ரீநாராயணப் பெருமாள் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.காலை 12 மணியிலிருந்து மற்ற திவ்ய தேசப் பெருமாள்கள் இங்கு வர ஆரம்பிப்பார்கள்.முதலில் ஆழ்வாரின் வடிவழகைக் கொண்டாடிய மணவாள மாமுனிகள் (வண்புருக்ஷோத்தமன் சந்நிதியில் எழுந்தருளி யுள்ளவர்) பந்தலுக்கு வந்து சேர்வார். அதற்குப்பின் ஒவ்வொரு பெருமாளாக (மதியம் 2.30 மணிவரை) பல்லக்கில் எழுந்தருளி வந்து பந்தலில் வரிசையாக எழுந்தருள்வார்கள். வரிசையில் இடப்புறம் மாமுனிகள் அஞ்சலி ஹஸ்தத்தில். வலப்புறம் முதலில் நாராயணப்பெருமாள். அனைத்து எம்பெருமான்களும் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளியிருப்பது வெகுசிறப்பு. ஒவ்வொரு பெருமாளுக்கும் மலர் அலங்காரம் வண்ண மயமாக இருக்கும். பெரும்பாலும் 7 முதல் 12 மாலைகள். ஸ்ரீவண்புருக்ஷோத்தமருக்கு 14 மாலைகள்.பக்தர்கள் பெருங்கூட்டமாக வந்து, எம்பெருமான்களைச் சேவித்துப் பரவசப்படு வார்கள்.3 மணியளவில் ஸ்ரீகுமுத வல்லி சமேத பரகாலன் பந்தலில் எழுந்தருள்வார் முதலில் நாராயணப்பெருமாள் நேராகச் சென்று பந்தலின் கிழக்குப்பக்கத்தில் சந்நிதியை நோக்கி நின்பார். ஆழ்வார் திருச்சிவிகையில் கோவில் முன்வாசலில் பெருமாளை நோக்கி, கூப்பிய கரங்களுடன். பெருமாள்,மாலை,பரிவட்டம்,சந்தனம்,சடாரி ஆகியவற்றை ஆழ்வாருக்கு அனுப்பு வார்.பெருமாளுக்குச் செய்த மங்கள ஹாரத்தி அப்படியே ஆழ்வாருக்கும் செய்யப்படும்.அவ்வமயம் அத்யாபகர்கள், ஆழ்வார் இந்தப் பெருமாள் மீது பாடிய பதிகத்தின் முதல் பாசுரத்தை, அற்புதமாகச் சேவிப்பார் கள். பின்னர் ஆழ்வார் பெருமாளை நோக்கிச் சென்று அவரைப் பிரதட்சிணமாக வலம் வருவார்.அதன்பின் பெருமாள் கோவிலுக்குள் சென்று விடுவார். இப்போது அடுத்த திவ்யதேசப் பெருமாள் அவ்விடத்தில் வந்து நிற்பார்.ஆழ்வார் மீண்டும் கோவில் முகப்புக்கு வர,ஆழ்வாருக்கான பெருமாள் மரியாதை கள்,சடாரி, இந்தப் பெருமாள் மீது ஆழ்வார் பாடிய பதிகத்தின் முதல் பாசுரம் சேவித்தல், மங்கள ஆரத்தி, ஆழ்வார் பிரதட்சிண வலம், பெருமாள் கோவிலுக்குள் எழுந்தருள்தல் (எல்லாப் பெருமாளும், நாராயணப் பெருமாள் கோவிலுக்குள் உள்ள மண்டபத்திலேயே எழுந்தருள்வார்கள்), ஆகியவை எல்லாம் முதலில் செய்தது போலவே. இவ்வாறே மற்ற 9 திவ்ய தேச எம்பிரான்களுக்கும், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வார். ஆழ்வாருக்கு,மாமுனிகள் மங்களாசாசனம்! 🙏🌺🌹💐🏵🙏 பெருமாள் மங்களாசாசனம் முடிந்தவுடன்,ஆழ்வார் பெருமாள் இருந்த இடத்தில் வந்து நிற்பார். ஆழ்வார் இருந்த இடத்தில் மணவாள மாமுனிகள் எழுந்தருள்வார். அத்யாபகர்கள் ஆழ்வாரைப் போற்றி மாமுனிகள் பாடிய உபதேச ரத்தின மாலைப் பாசுரங்களையும், --"பேதை நெஞ்சே இற்றைப் பெருமை" (8)'"மாறன் பணித்த தமிழ் மறைக்கு"(9), மாமுனிகளின் ஆழ்வார் வடிவழகுப் பாசுரங்களையும்--"அணைத்த வேலும்,தொழுத கையும், அழுந்திய திருநாமமும்" மிக உருக்கமாகப் பாடுவார்கள். மாமுனிகளுக்கு ஆழ்வார் மரியாதை,திருவடி சாதிக்கப் படும்;தீப ஆரத்தி; மாமுனிகள் ஆழ்வாரைப் பிரதட்சிணம் செய்வார்.பின்னர் இருவரும் கோவிலுக்குள் செல்வார்கள்.மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கும் மங்களாசாசன வைபவம் 7 மணியளவில் நிறைவுறும் ! சிந்தனைக்கினியான் மரியாதை: 🙏👌🙏👌🙏👌 திருமங்கை ஆழ்வார் எப்போது புறப்பாடு கண்டருளினாலும், அவருடைய திருவாராதனைப் பெருமாளான 'சிந்தனைக்கினியானும்' அதே பல்லக்கில்/சிவிகையில் உடன் எழுந்தருள்வார்.ஆனால் இன்று மற்ற திவ்ய தேச எம்பெருமான்களைப் பிரதட்சிணம் செய்வதால்,அவர் எழுந்தருளினால் தாமே, தம்மைப் பிரதட்சிணம் செய்வதாகும் என்பதால் அவர் எழுந்தருள்வ தில்லை.ஆழ்வார் தம் ஸ்தானத்துக்குச் சென்றதும் அங்கே ஏற்கனவே எழுந்தருளியிருக்கும் சிந்தனைக்கினியான் தாம் சூடிக் களைந்த மாலை,வஸ்த்ரம் ஆழ்வாருக்கு அணிவித்து அழகு செய்வார். திருமாமணிக் கோயில் பெரிய மண்டபத்தில், ஒவ்வொரு பெருமாளும்,ஆழ்வாரும், தனித்தனியாக,குறுமண்டபங்களில் எழுந்தருளி யிருப்பார்கள். ஆழ்வாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். கருட சேவை 🙏🦅🦅🦅🦅🙏 பின்னர் அலங்காரம் ஆகி அந்தந்தப் பெருமாளுக்குரிய கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். ஆழ்வாரும்,குமுதவல்லி நாச்சியாரும் ஹம்ச வாகனத்தில்.(வாகனங்கள் ஏற்கனவே அந்தந்தக் குறு மண்டபங்களுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன.) மாமுனிகள் அவருடைய ஆஸ்தான சேஷவாகன த்தில்.கோவிலுக்குள் இருந்து, முதலில் பந்தலுக்கு வந்து பந்தலின் கிழக்கில் முகப்புக்கு எதிரில் சற்று இடது புறமாக நிற்பார்.தொடர்ந்து ஆழ்வார், முகவாயிலுக்கு நேர் எதிரில் மாமுனிகளுக்குப் பக்கத்தில், ஹம்சவாகனத்தில்.ஆழ்வாரைத் தொடர்ந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி சந்நிதித் தெருவில், வரிசையாகச் வந்து நிற்பார்கள். ஒவ்வொரு பெருமாளும் வெளியே வந்து கோவில் வாயிலில் நிற்பார்.அவருக்கு கும்ப தீபாராதனை ஆகி,அதே கும்பதீபம் ஆழ்வாருக்கும், மாமுனிகளுக்கும் காட்டப் படும்.11 ஆவது பெருமாள் (காவளம்பாடி ராஜகோபாலன்) வந்தவுடன் மாமுனிகள் விரைவாகச் சென்று,சந்நிதித் தெருவில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்களைத் தாண்டிச் சென்று முதல்வராக, எம்பிரான்களை நோக்கிய திசையில் கூப்பிய கரங்களுடன் நிற்பார். ஆழ்வாரும் விரைந்து சென்றுவரிசையில், முதல் பெருமாளுக்கு முன்பாக, மாமுனிகளை நோக்கி நிற்பார். இப்போது கருடசேவை மெதுவாக ஆரம்பித்து ஊரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வருவர். பெரும்பாலான வீடுகளில் ஆழ்வாருக்கும், பெருமாளு க்கும்மாலைகள்,வஸ்த்ரம், பழங்கள்ச மர்ப்பிப்பர். அத்யாபகர்கள்,ஆழ்வார் திருநாங்கூர் திவ்ய தேசங்களைப் பாடிய, பெரிய திருமொழி பாசுரங்களைச் சேவித்துக் கொண்டு வந்து, மாமுனிகளும் ஆழ்வாரும், பந்தலுக்கு எழுந்தருளியதும், முடிப்பார்கள். வீதிப்புறப்பாடு முடிந்து இன்று(20/01)அதிகாலை பந்தலுக்குத் திரும்பினர். அனைவரும் கும்ப/மங்கள ஆரத்தி கண்டு அவரவர் குறுமண்டபங் களுக்கு எழுந்தருள்வார்கள். அங்கு உபயதாரர்கள் மரியாதை ஆகி, பெருமாள் அலங்காரம் கலைந்து,மெல்லிய பட்டுப் போர்வை சாற்றி, அவரவர் ஆஸ்தானத்துக்கு (திவ்ய தேசகோவில் களுக்குப்) புறப்படுவார்கள். ஆழ்வார் இன்று மீண்டும் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் திருப்பாவை சாற்றுமறை முடிந்து திருநகரிக்குப் புறப்படுவார்.செல்லும் வழியில், திருவெள்ளக்குளம்அண்ணன்பெருமாள்,திருத்தேவனார்தொகை-மாதவப் பெருமாள்,திருவாலி லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் ஆகியோரை அவர்களது திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துவிட்டு, இரவு 10 மணியளவில்,தம் ஆஸ்தானமான திருநகரி கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலைச் சென்றடைவார். (அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்) படங்கள்: 1.திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் பெறும் திவ்ய தேச எம்பெருமான்கள். 2: திருமங்கை ஆழ்வார்--குமுதவல்லி நாச்சியார். 3.மணவாள மாமுனிகள். 4.ஸ்ரீ.ஸ்ரீநிவாசாசார்யர் ஸ்வாமி (இன்ஸ்பெக்டர் ஸ்வாமி) மற்றவை:: கருட சேவை. காணொளி: இன்று காலை அனைத்து எம்பெருமான்களுக்கும் தீபாராதனை ! https://www.facebook.com/share/r/17bXfkfAAN/ #பெருமாள்
பெருமாள் - vbak Sowhaktha vbak Sowhaktha - ShareChat
ஸ்ரீ (969)ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் உற்சவம் இரண்டாம் நாள் மாலை ஹம்ஸ வாகன ஆரத்தி சிறப்பு வீடியோ #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
00:57
ஸ்ரீ (969) #கிருஷ்ணன் Darshan of Sri Prahlada Narasimhadeva after Abhisheka - Saturday. . Iskcon. Bangalore. 24.1.26
கிருஷ்ணன் - CON Bangalore Hare Krishna Hill ngalore Hare Krishna Hill CON Bangalore Hare Krishna Hill ngalore Hare Krishna Hill - ShareChat
ஸ்ரீ (969)ரத சப்தமி..25.1.2026 ஞாயிறு சூரிய ஜெயந்தி பற்றிய தகவல்கள்... உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி . ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது . தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்கிறது சாஸ்திரம் . ரத சப்தமி வழிபாடு எப்படி செய்வது..? சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம். சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது உகந்த நாள். இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜோதிட ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.உத்யோக காரகன் வருமான காரகன் சூரியனே...எனவே உத்யோக உயர்வு ,அரசுபணி ,வருமான உயர்வுக்கு இந்த வழிபாட்டை செய்யலாம் ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலம் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்ப தியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருவேங்கடமுடையான் 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். திருமலையில் இந்த காட்சிகளை காண கண்கோடி வேண்டும் . ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி தினத்தில் சூரியனை வழிபடும்போது , சூரியனை நோக்கி, "ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!' என்று சொல்லி வணங்க வேண்டும்..! ஓம் சூர்யதேவாய நம..! நன்றி நாராயணபாலா #ஆன்மீக செய்திகள் 2021
ஆன்மீக செய்திகள் 2021 - RATHA SAPIAMI 2026 RATHA SAPIAMI 2026 - ShareChat
ஸ்ரீ (969)ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 🌺திருக்கலிவிருத்தம் 1.3🌺 ஹே திருவரங்கா! தேவதேவா! திருவுறைகின்ற உனது திருவடிகளை விரும்புகின்ற உனது அடியார்கள் யாராக இருந்தாலும் அவர்களே அடியேன் வணங்கக் கூடிய தெய்வமாவார்கள். உனது திருவடிகளை ஆச்ரயிக்கும் பாகவதோத்தமர்களே அடியேனுடைய தெய்வம். வினைப் பயனால் மீண்டும் மீண்டும் கருவிலுதித்துச் சுழல்பிறப்பில் பிறந்திறக்கும் பாவியான அடியேன், திருவுடைய அந்த பாகவதோத்தமர்களின் திருவடிகளில் புகுந்தே சம்சார துன்பத்திலிருந்து மீள்வேன். ***** இந்தத் திருக்கலிவிருத்தம் அடங்கிய ‘திருவைந்துத் திருமாலை’ என்னும் புத்தகத்தைப் பெறவிரும்புவோர் (மூலம் மட்டும்) தொலைபேசியிலோ அல்லது வாட்ஸப்பிலோ தொடர்புகொள்ளலாம். தொடர்பு எண் : 9789594509 அடியேன்🙏 மதியழகன் @ தேவப்பெருமாள் ராமானுஜ தாசன் SKAPS Email: info.skaps@gmail.com 24.01.2026 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - திருக்கலிவிருத்தம் Courtesy to Artist / Photographer திருக்கலிவிருத்தம்13 திருவரங்கா தேவதேவா திருவுறையும் உனதடியை ரும்புகின்ற அடியார்கள் 61 யாராயின் எம்மிறையாம் கருவுதித்துச் சுழற்பிறப்பில் SKAPS பிறந்திறக்கும் பாவியேனும் திருவுடைய அத்தேவர் அடிபுகுந்தே மீள்வேனே. பெமுதியழகன்தேவபபெருமாள்இராமானுஜ தாசன் 0 SKAPS] திருக்கலிவிருத்தம் Courtesy to Artist / Photographer திருக்கலிவிருத்தம்13 திருவரங்கா தேவதேவா திருவுறையும் உனதடியை ரும்புகின்ற அடியார்கள் 61 யாராயின் எம்மிறையாம் கருவுதித்துச் சுழற்பிறப்பில் SKAPS பிறந்திறக்கும் பாவியேனும் திருவுடைய அத்தேவர் அடிபுகுந்தே மீள்வேனே. பெமுதியழகன்தேவபபெருமாள்இராமானுஜ தாசன் 0 SKAPS] - ShareChat
🛕🛕🛕 *ஶ்ரீ:* 🛕🛕🛕 ஶ்ரீ மதே ராமாநுஜாய நம: ஶ்ரீமத் வரவரமுநயே நம: 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕 இன்று *( 24/01/2026)* *சனிக்கிழமை* மாலை *6.30 to 8.00* *மணி* வரை பெரியகடைவீதி *ஶ்ரீநவநீதகிருஷ்ணன் பெருமாள்* சன்னதியில் *திவ்யபிரபந்த* *பஜனை* மற்றும் *நாம சங்கீர்த்தனம்* நடைபெறும்... *பக்த,பாகவத* *கோஷ்டிகள்* மற்றும் விருப்பமுள்ள *ஆஸ்தீக அன்பர்கள்* வந்து கலந்துகொள்ளும்படி *விண்ணப்பிக்கிறோம்* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *குறிப்பு:-* ஒவ்வொரு *சனிக்கிழமையும்* மாலை *6.30* மணிக்கு *பஜனை* நடைபெறும் 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕 #பெருமாள்
பெருமாள் - ShareChat
00:29